பூமியின் ஆழமான பகுதியில் என்ன இருக்கிறது? இதுவரை பயணம் செய்த 3 பேர் என்ன ஆனார்கள்?

|

மனிதன் வேற்று கிரகத்தில் ஜீவராசிகள் இருக்குமா? அதற்கான சாத்தியம் இருக்குமா? அல்லது அடையாளம் எதுவும் கிடைக்குமா? என்று விண்வெளியில் பலகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான். ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும், மனிதனால் ஆராய்ந்து பார்க்க முடியாத ஒரு இடம் பூமியிலேயே உள்ளது என்றால் அது நிச்சயம் ஆழ்கடலில் அமைத்திருக்கும் மரியானா அகழியாக மட்டுமே இருக்கக் கூடும்.

மரியானா அகழி எங்கு அமைத்துள்ளது?

மரியானா அகழி எங்கு அமைத்துள்ளது?

ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே குவாம் என்ற சிறிய தீவுக்கு அருகில், நீரின் மேற்பரப்பிற்கு மிகக் கீழே, மரியானா அகழி அமர்ந்திருக்கிறது. மரியானா அகழி தான் பூமியில் அமைந்துள்ள கடலின் மிகவும் ஆழமான பகுதி, இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாத பல மர்மங்கள் இந்த ஆழ்கடல் அகழியில் தான் ஒளிந்துள்ளது. உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் கீழே என்ன இருக்கிறது? இதுவரை என்ன கண்டுபிடித்துள்ளனர் என்று பார்க்கலாம்.

பூமியில் மனிதனின் காலடி படாத ஒரே இடம்

பூமியில் மனிதனின் காலடி படாத ஒரே இடம்

இன்றைய நாள் வரை மனிதனின் காலடி படாத ஒரே இடம் ஆழ்கடலாக மட்டும் தான் இருக்கக்கூடும், ஏன் வரும்காலங்களில் கூட இதற்கான சாத்தியம் வெறும் 0.01 சதவீதம் தான் என்றே கூற வேண்டும். மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடத்தை பற்றி இதுவரை நமக்குத் தெரிந்து வியக்கத்தக்க உண்மைகள் என்னவென்றால், இந்த ஆழ்கடல் அகழியில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?

அரிதான பல கடல் வாழ் உயிரினங்கள் வாழும் இடம்

அரிதான பல கடல் வாழ் உயிரினங்கள் வாழும் இடம்

கண்களுக்கு முழுமையாகத் தென்படாத, பல எண்ணிலடங்கா ரகசியங்களை இந்த அகழி மறைத்து வருகிறது என்கின்றனர். இருப்பது போலவே கடலின் அடியிலும் எரிமலைகள், சிறு குன்றுகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள் என்று அனைத்தும் இருக்கின்றது. மனிதன் இன்னும் கண்டுபிடிக்காத பல கடல் வாழ் உயிரினங்கள் இந்த கடலில் வாழ்கின்றன. இன்னும் பல மர்மங்கள் இந்த பகுதியில் மறைந்து இருக்கிறது என்பது தான் உண்மை.

ஆழ்கடலை முழுமையாக ஆராய முடியாமல் போனதற்கு இது தான் காரணம்

ஆழ்கடலை முழுமையாக ஆராய முடியாமல் போனதற்கு இது தான் காரணம்

பூமியில் ஆழ்கடலை இன்னும் மனிதன் முழுமையாக ஆராய்ச்சி செய்யாததற்கு முக்கியக் காரணம், கடலின் அழுத்தம் தான். ஆழ்கடலுக்குள் நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, இதனால் நீரின் அழுத்தம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதிகரிக்கிறது. இயல்பான கடல் அழுத்தத்தைப் போல் இல்லாமல், மரியானா அகழியின் கடல் நீர் அழுத்தம் 1000 மடங்கிற்கு அதிகமானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆழ்கடலில் உள்ள இரண்டு பெரிய பிரச்சனைகள்

ஆழ்கடலில் உள்ள இரண்டு பெரிய பிரச்சனைகள்

ஆழ்கடலில் உள்ள அழுத்தம் ஒரு பெரிய பிரச்சனை என்றால், மரியானா அகழியில் இன்னுமொரு பிரச்சனையும் இருக்கிறது, அது தான் வெளிச்சம். ஆழ்கடலின் காலத்திற்குச் செல்லச் செல்ல சூரிய ஒளியானது மறைய துவங்கிவிடும். இதனால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு ஆழ்கடலில் கும்மிருட்டு தான் நிகழும். சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரை மட்டுமே ஊடுருவும். அடுத்த ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஓரளவு வெளிச்சம் இருக்கும்.

எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!

நீர்மூழ்கிக் கப்பல் கூட இங்கு வெடித்து சிதறிவிடும்

நீர்மூழ்கிக் கப்பல் கூட இங்கு வெடித்து சிதறிவிடும்

சுவாசக் கருவியின் உதவியோடு மனிதன் ஆயிரம் அடி வரை மட்டுமே பயணிக்க முடியும். மனிதனால், நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருக்க இயலாது, ஆழ்கடல் அழுத்தத்தினால் மனிதனின் உடலில் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் பயணிக்காது. ஏனெனில், கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கிக் கப்பலும் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளது. இதனால் தான் மனிதன் இன்னும் ஆழ்கடலை முழுமையாக ஆராய்ந்து முடிக்க முடியவில்லை.

மரியானா அகழியின் 'சேலஞ்சர் மடு'

மரியானா அகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள மிகவும் ஆழமான பகுதி, இந்த பகுதியை 'மரியானா நீள்வரிப்பள்ளம்' என்றும் அழைக்கின்றனர். இது சுமார் 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் கிட்டத்தட்ட 7 மைல் ஆகும். அதாவது சரியாகச் சொன்னால் 36,201 அடி, கிட்டத்தட்ட இமயமலை விட பெரியதாம். இந்த படுகுழியில் இமயமலையை மூழ்கடித்துவிடலாம் என்று நேஷனல் ஜியோகிராஃபிக் கூறியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தையே விழுங்கிவிடும் மரியானா அகழி!

எவரெஸ்ட் சிகரத்தையே விழுங்கிவிடும் மரியானா அகழி!

நேஷனல் ஜியோகிராஃபிக்கின் கூற்றுப்படி, எவரெஸ்ட் சிகரத்தை மரியானா அகழியின் அடிப்பகுதியில் வைத்தால், அதன் உச்சம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி கீழே அமர்ந்திருக்கும் என்றால், இதன் ஆழத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இப்படி நம்பமுடியாத பூமியின் மிக ஆபத்தான பகுதியை இதுவரை 3 டைவர்ஸ் மட்டுமே ஆராய்ந்துள்ளனர் என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் இந்த 3 நபர்கள் மட்டுமே இந்த அகழியின் பெரும் ஆழத்தை ஆராய்ந்துள்ளனர்.

பரபரப்பை கிளப்பிய நாசாவின் புதிய தகவல்! செவ்வாய் கிரகத்தில் உயிர்களா?பரபரப்பை கிளப்பிய நாசாவின் புதிய தகவல்! செவ்வாய் கிரகத்தில் உயிர்களா?

மரியானா அகழி ஆழத்தை ஆராய முதல் பயணம்

மரியானா அகழி ஆழத்தை ஆராய முதல் பயணம்

ஜாக்ஸ் பிக்கார்ட் மற்றும் கடற்படை லெப்டினன்ட் டான் வால்ஷ் ஆகியோர், 1960 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி உதவியுடன் சேலஞ்சர் ஆழத்தை ஆராய்ந்துள்ளனர். மரியானா அகழி ஆழத்தை ஆராய மேற்கொள்ளப்பட்ட முதல் பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான அழுத்தத்தினால் அவர்களால் 20 நிமிடங்கள் மட்டுமே ஆழ்கடலில் செலவிட முடிந்துள்ளது. அதற்குப் பின் 50 ஆண்டுகளாக யாரும் இந்த விபரீத முயற்சியை மேற்கொள்ளவில்லை, ஒருவரைத் தவிர.

50 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவதாக பயணம் செய்தவர் யார் தெரியுமா?

50 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவதாக பயணம் செய்தவர் யார் தெரியுமா?

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்பாளரும், அறிவியல் புனைகதை ஆர்வலருமான ஜேம்ஸ் கேமரூன் மரியானா அகழியை நோக்கி தான் உருவாக்கி வடிவமைத்த நீர்மூழ்கி கப்பலில் சேலஞ்சர் டீப்பிற்கு டைவ் செய்தார். கேமரூன் வடிவமைத்து உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் உதவியுடன் அவரால் அங்கு சுமார் மூன்று மணி நேரம் செலவிட முடிந்தது என்பது குறிப்பிடத்தது. இந்த பயணத்தின் போது பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பதிவு செய்துள்ளார்.

மனிதனின் கரங்களுக்கு இன்னும் எட்டாத மர்மம்

மனிதனின் கரங்களுக்கு இன்னும் எட்டாத மர்மம்

குறிப்பிட்ட ஒரு ஆழத்திற்குப் பின்பு, அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அவரின் நீர்மூழ்கி நீரின் அழுத்தம் தாங்காமல் உபகரணங்கள் பாதிப்படையத் துவங்கியுள்ளது. பேட்டரி மற்றும் சோனார் கருவிகள் செயல் இழந்துவிட்டது மற்றும் அவரது கப்பலின் சில உந்துதல்கள் சரியாகச் செயல்படவில்லை, இதனால் பயணத்தைத் தொடரமுடியாமல் ஜேம்ஸ் கேமரூன் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிட்டார். இன்னும் பூமியின் ஆழ்கடல், மனிதனின் கரங்களுக்கு எட்டாத மர்மமாகவே இருக்கிறது.

மனிதனால் கண்டுபிடிக்க முடியாத இரகசியங்கள்

மனிதனால் கண்டுபிடிக்க முடியாத இரகசியங்கள்

மனிதனால் கண்டுபிடிக்கப்படாத பல இரகசியங்கள் இன்னும் ஆழ்கடலில் எங்கோ ஒரு இருட்டில் கண்டுபிடிக்கமுடியாமல் மூழ்கித்தான் இருக்கிறது. அப்படி இத்தனை ஆண்டுகளாக மறைந்திருந்த ஒரு அபரிமிதமான உண்மையை விஞ்ஞானிகள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் அல்ட்ரா பிளாக் நிறத்தை உடைய ஆழ்கடல் உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

அபரிமிதமான இருளில் வசிக்கும் உயிரினங்கள்

அபரிமிதமான இருளில் வசிக்கும் உயிரினங்கள்

ஆழ்கடலின் அபரிமிதமான இருளில் வசிக்கும் மீன்களுக்கு, அல்ட்ரா பிளாக் என்றழைக்கப்படும் அடர்ந்த இருள் கொண்ட கருப்பு நிறம் என்பது அவற்றிற்குக் கிடைத்த வரப்பிரசாதம். இந்த அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறங்கள் தான் இந்த உயிரினங்களுக்கு தனது இரையை இருட்டில் மறைந்து வேட்டையாட உதவுகிறது. ஆழ்கடல் அரிய வகை மீன்கள், ஆழ்கடல் இருளில் தனது உணவை எப்போதாவது தான் வேட்டையாடுகிறது.

அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறம்

அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறம்

இவற்றின் அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறங்கள் இவற்றிற்கு பெரும் உருமறைப்பை வழங்குகிறது. இந்த ஆழ்கடல் உயிரினங்களில் சில கவர்ச்சியான உயிரினங்களும் உள்ளது. இவை தனது உடலில் உள்ள சில பாகங்களை ஒளிரச் செய்து தனது உணவைக் கவர்ந்து வேட்டையாடுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்படி வேட்டையாடும் உயிரினங்களில் புதிய வகை அல்ட்ரா பிளாக் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

ரகசியத்தை அவிழ்த்துவிட்ட விஞ்ஞானிகள்

ரகசியத்தை அவிழ்த்துவிட்ட விஞ்ஞானிகள்

இவற்றைக் கண்டுபிடித்தது மட்டுமின்றி, இப்போது இவற்றின் தீவிரமான அல்ட்ரா பிளாக் நிறத்திற்குப் பின்னால் உள்ள ரகசியத்தையும் அவிழ்த்துவிட்டனர். இதற்கான காரணம் என்ன என்பதுடன், இவர்கள் கண்டுபிடித்துள்ள ரகசியத்தை வைத்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். உண்மையில் இவர்கள் திட்டமிடும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டால் சுவாரசியமாகத் தான் இருக்கும்.

இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..

ஃபாங்க்டூத், பசிபிக் பிளாக் டிராகன், ஆங்லெர்ஃபிஷ்

ஃபாங்க்டூத், பசிபிக் பிளாக் டிராகன், ஆங்லெர்ஃபிஷ்

பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் ஃபாங்க்டூத், பசிபிக் பிளாக் டிராகன், ஆங்லெர்ஃபிஷ் மற்றும் பிளாக் ஸ்வாலோவர் மீன்கள் போன்ற போல அவற்றின் தோலில் உள்ள நிறமியின் வடிவம், அளவு மற்றும் தொகுப்புகள் அதன் உடலில் படும் ஒளியை வெறும் 0.5% க்கும் குறைவான அளவுக்கு மட்டுமே பிரதிபலிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிணாம வரலாற்றைக் கொண்ட மீன்கள்

பரிணாம வரலாற்றைக் கொண்ட மீன்கள்

அல்ட்ரா பிளாக் என்று வரையறைக்குப் பொருந்தக்கூடிய 16 ஆழ்கடல் இனங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்து வந்துள்ளனர். இதில் ஆறு வெவ்வேறு மீன்களில் ஒவ்வொன்றும் ஒரு பகிரப்பட்ட பரிணாம வரலாற்றைக் கொண்ட பெரிய குழுக்கள் என்று அறியப்பட்டுள்ளது. இவற்றின் உடலில் உள்ள இந்த அல்ட்ரா பிளாக் நிற மாற்றம் அனைத்தும் சுயாதீனமாக உருவாகியிருப்பதைக் குறிக்கிறது என்று கூறியுள்ளனர்.

இருளில் மறைந்து வேட்டை

இருளில் மறைந்து வேட்டை

ஆழமான இருண்ட திறந்த கடலில், உணவு கிடைப்பது என்பது அரிது, கிடைக்கும் உணவு வாய்ப்பை தவறவிடாமல் இருளில் மறைந்து இருந்தே வேட்டையாட வேண்டும், இவற்றிற்கு இந்த அல்ட்ரா பிளாக் நிறம் உதவுகிறது என்று ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விலங்கியல் நிபுணர் கரேன் ஆஸ்போர்ன் கூறினார்.

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

ஆழ்கடலில் உள்ள ஒரே ஒளி மூலம் இது தானா?

ஆழ்கடலில் உள்ள ஒரே ஒளி மூலம் இது தானா?

மிகக் குறைந்த சூரிய ஒளி மட்டுமே கடலின் மேற்பரப்பிலிருந்து 650 அடி (200 மீட்டர்)க்கும் அதிகமாக ஊடுருவுகிறது. இந்த மீன்களில் சில மூன்று மைல் (5,000 மீட்டர்) ஆழத்தில் வாழ்கின்றன. இத்தகைய ஆழத்தில் இருளில் வாழும் பயோலுமினென்சென்ஸ் உயிரினங்களின் ஒளி உமிழ்வு மட்டுமே ஆழ்கடலில் ஒளி மூலமாக பார்க்கப்படுகிறது. அல்ட்ரா-பிளாக் மீன்களின் உடலில் உள்ள பயோலூமினசென்ட் கவர்ச்சிகரமான ஒளியைக் கொண்டுள்ளன.

பிரகாசமான ஒளியில் கூட நிழல் போல தோற்றம்

பிரகாசமான ஒளியில் கூட நிழல் போல தோற்றம்

இந்த மீன்களின் தோலில் அறியப்பட்ட நிறமிகள் பூமியின் அடர்ந்த கறுப்புப் நிற பொருட்களில் ஒன்றாகும், இவை ஒளியை மிகவும் திறமையாக உறிஞ்சுகிறது, பிரகாசமான ஒளியில் கூட இவை நிழற்கூடங்களாக மட்டுமே தோற்றமளிக்கிறது என்று இவற்றைப் புகைப்படம் எடுக்க முயன்ற ஆஸ்போர்ன் கூறியுள்ளார். தற்பொழுது இந்த மீன்கள் கூடுதல் ஆராய்ச்சிக்காக மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரகசியத்தின் பின்னனியில் உள்ள உண்மை

ரகசியத்தின் பின்னனியில் உள்ள உண்மை

இதன் சருமத்தில் நிறமி மெலனின் ஏராளமாக உள்ளது மற்றும் அசாதாரண பாணியில் விநியோகிக்கப்படுகிறது. சரும செல்கள் உள்ளே நிறமி நிரப்பப்பட்ட கட்டமைப்புகள் - சருமத்தின் மேற்பரப்பில் இறுக்கமாக நிரம்பிய தொடர்ச்சியான அடுக்குகளாக பேக்கேஜிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் மீன்கள் அவற்றின் மேல் படும் ஒளியை முற்றிலுமாக உரிந்து அல்ட்ரா பிளாக் நிறத்தில் காட்சியளிக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

Jio, Airtel, Vi மற்றும் BSNL வழங்கும் பெஸ்ட் பேமிலி பேக் திட்டங்கள்: ஒரு குடும்பம் ஒரே திட்டம்.. விலை இது தான்Jio, Airtel, Vi மற்றும் BSNL வழங்கும் பெஸ்ட் பேமிலி பேக் திட்டங்கள்: ஒரு குடும்பம் ஒரே திட்டம்.. விலை இது தான்

அல்ட்ரா-பிளாக் தொழில்நுட்ப ஐடியா

அல்ட்ரா-பிளாக் தொழில்நுட்ப ஐடியா

மெல்லிய மற்றும் நெகிழ்வான அல்ட்ரா-பிளாக் பொருளை உருவாக்க இந்த வழிமுறை உதவும் என்று கூறப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப ஒளியியலுக்காக அல்லது இரவு நேர உருமறைப்புப் பொருள்களுக்காக இந்த மீன்களின் சருமத்தில் உள்ள அடுக்குமுறைகளை பயன்படுத்தி அல்ட்ரா பிளாக் சூட்கள் அல்லது பொருட்களைக் கூட உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
What's In The Deepest Part Of The Mariana Trench On Planet Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X