Home
Scitech

டைனோசர்களை அழித்தது விண்கல் இல்லையாம்! கிளம்பும் புது சர்ச்சை!

இந்த பூமியில் மனிதர்கள் நடமாடும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன், இந்த கிரகத்தை டைனோசர்கள் ஆட்சி செய்து கொண்டு இருந்தன.

இந்த பூமியில் மனிதர்கள் நடமாடும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன், இந்த கிரகத்தை டைனோசர்கள் ஆட்சி செய்து கொண்டு இருந்தன. அந்த இனம் எப்படி அழிந்து போனது என்று கேட்டால்? அறிவியல் வகுப்புகளை சந்தித்த பள்ளி சிறார்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த பேராசிரியர்கள் வரை ஒரே பதிலை தான் கூறுவார்கள்: ஒரு மாபெரும் விண்கல் மோதலின் விளைவாகத்தான் பூமியில் இருந்த டைனோசர்கள் அழிந்தன. நீங்களும் அதைத்தானே கூறி இருப்பீர்கள்.

இது தெரியாம போச்சே! டைனோசர்கள் அழிந்தது இப்படித்தானாம்!

அந்த பதிலை மறுபரீசலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆம்! சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியின் மீது மோதிய விண்கல் தான் டைனோசர்களின் அழிவிற்கு காரணம் என்று நிலவிய பொதுவான கருத்து (வரலாறு) கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

என்ன ஆய்வு?

என்ன ஆய்வு?

ஆனால் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஜோடி புதிய ஆய்வுகள் தான் அதற்கு காரணம். அது என்ன ஆய்வு? அது கூறும் வரலாற்று உண்மைதான் என்ன? இந்த ஆய்வுகள் உண்மையாகும் பட்சத்தில் நம் அறிவியல் வரலாற்று பக்கங்கள் திருத்தி அமைக்கப்படுமா? வாருங்கள் அலசுவோம்!

மாபெரும் எரிமலை வெடிப்பு

மாபெரும் எரிமலை வெடிப்பு

சமீபத்திய ஆய்வுகள் ஆனது ஒரு மாபெரும் எரிமலை வெடிப்பு தான் டைனோசர்களின் அழிவிற்கு வழி வகுத்ததாக கூறுகிறது. சுவாரசியம் என்னவெனில் கூறப்படும் எரிமலை வெடிப்பானது, டைனோசரகள் அழிய காரணமாக இதுவரை அறியப்பட்ட விண்கல் ஆனது பூமி மீது மோதும் பல காலங்களுக்கு முன்னரே நிகழ்ந்து உள்ளது.

ஒட்டுமொத்த கதையையும் மாற்றியமைக்கும் படி உள்ளது

ஒட்டுமொத்த கதையையும் மாற்றியமைக்கும் படி உள்ளது

மேலும் இந்த வெகுஜன அழிவு ஆனது இதுவரை கிரகத்தைத் தாக்கியிருக்கும் ஐந்து வெகுஜன பேரழிவுகளில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனாலும் கூட இந்த நிகழ்வை சுற்றியுள்ள சரியான சூழல்கள் இப்போது வரை மர்மமாகவே உள்ளன. கரேபியனில் உள்ள சிக்சுலப் பள்ளம் (விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம்) தான் டைனோசர்களின் தலைவிதியை மாற்றிய விடயமாக இதுவரை கருதப்பட்டு வந்த நிலைப்பாட்டில், இந்தியாவின் டெக்கான் பிளாட்ஸில் கண்டறியப்பட்டுள்ள திடமான எரிமலை குழம்பு நிலமானது ஒட்டுமொத்த கதையையும் மாற்றியமைக்கும் படி உள்ளது.

டைனோசர்களின் அழிவிற்கு காரணம் எரிமலை வெடிப்பா அல்லது விண்கல் மோதலா?

டைனோசர்களின் அழிவிற்கு காரணம் எரிமலை வெடிப்பா அல்லது விண்கல் மோதலா?

டைனோசர்களின் அழிவிற்கு காரணம் எரிமலை வெடிப்பா அல்லது விண்கல் மோதலா? எனும் கண்டுபிடிப்பில், நமக்கு மிகவும் துல்லியமான விடையைகொடுக்க வல்லது - காலம் தான், அதாவது எது முதலில் நடந்தது என்பதை நிரூபிக்கும் காலம். இதன் வழி பார்த்தால், கிடைக்கப்பெற்ற யுரேனியம் மற்றும் திடப்படுத்திய மாக்மாவில் நான்கு மகத்தான எரிமலை வெடிப்பு நிகழ்வுகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிர்களை கொல்லுமா?

உயிர்களை கொல்லுமா?

ஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும் இந்த வெடிப்புகள், நம்பமுடியாத அளவிற்கு காலநிலை மாற்றங்களை நிகழ்த்த - ஒருவேளை - வெகுஜன அழிவுகளின் முதல் அலைக்கு வழிவகுத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காலநிலை மாற்றம் உயிர்களை கொல்லுமா? - கொல்லும். கூறப்படும் எரிமலை வெடிப்பு காலகட்டத்தில், க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் வளிமண்டலத்தில் நுழைந்தபோது, ​​வெப்பநிலை சுமார் எட்டு செல்சியங்கள் அதிகரித்ததாம்.

டாக்டர் கர்ட்னி ஸ்ப்ரைன்

டாக்டர் கர்ட்னி ஸ்ப்ரைன்

இந்த புதிய ஆய்வுகளின் முடிவுகளோடு ஒற்றுப்போகாத சமகாலத்திய ஆய்வுகளும் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த ஆய்வுகள் சற்று மாறுபட்ட முடிவுகளை நமக்கு வழங்குகிறது. டெக்கான் பிளாட்ஸின் பசல்ட் பாறைகளின் காலகட்டம் ஆனது, மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுகள் ஆனது விண்கல் மோதல் நிகழ்ந்த பிறகே நடந்து உள்ளன என்கிறது அந்த ஆய்வு. இருந்தாலும், லிவர்பூல் பல்கலைக் கழகத்தின் ஒரு புவியியலாளரான டாக்டர் கர்ட்னி ஸ்ப்ரைன், டைனோசர்களின் அழிவிற்கு எரிமலை வெடிப்புகள் காரணம் இல்லை என்பதை உறுதியாக கூற முடியாத என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஒன்- டூ பன்ச் விளைவு

ஒன்- டூ பன்ச் விளைவு

இப்படியாக டைனோசர் தொன்மாக்களை எது கொன்றது என்ற கேள்விக்கான ஒரு உறுதியான பதில் இதுவரை மழுப்பலாகவே இருக்கையில், டாக்டர் ஸ்ப்ரெய்ன் மற்றும் அவரது சகாக்கள், எரிமலைகள் மற்றும் சிறுகோள் ஆகிய இரண்டுமே சேர்ந்து தான் (ஒன்- டூ பன்ச் விளைவு) பேரழிவை நிகழ்த்தி இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். பூமியின் காலநிலையில் ஏற்படும் விரைவான வெப்பமடைதல் ஆனது மீதமுள்ள உயிரினங்களை சூடான சூழ்நிலைகளுக்குள் தள்ளிப்பட்டு அதில் அவைகள் வாழ கற்று கொண்டு இருக்கலாம், பின் பூமியின் மீது மோதிய விண்கல் விளைவாக ஏற்பட்ட தூசி மண்டலத்தின் விளைவாக, பூமி விரைவான குளிர்ச்சியை சந்திக்க அவைகள் அழிவை எதிர்நோக்கி இருக்கலாம் என்கிறார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
What killed the dinosaurs? New research suggests volcanoes NOT killer asteroid responsible: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X