கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

|

துருக்கி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு நம்ப முடியாத மாற்றம் உலக விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. துருக்கியில் உள்ள கடலுக்கு சளி பிடித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு, பூமி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கான சான்று என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மனிதர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் சளியினால் மனிதர்களுக்கு என்ன கேடு என்று பார்க்கலாம்.

கடலுக்குக் கூட சளி பிடிக்குமா? என்னப்பா சொல்றீங்க?

கடலுக்குக் கூட சளி பிடிக்குமா? என்னப்பா சொல்றீங்க?

மனிதர்களின் உடல்நலத்தில் கோளாறு ஏற்பட்டால் சளி பிடிக்கும். அதேபோல், கடலுக்குக் கூட உடல்நலம் சரி இல்லாமல் போனால் சளி பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், கடலும் மனித உடலும் ஒரே மாதிரியானது தான். மனிதனின் உடலில் அதிக வெப்பமடைந்தால் சளி பிடிக்கும். அதேபோல் தான் கடலும், கடலின் நீர் அதிகமாக வேப்பைமடைந்தால் கடலுக்கும் சளி பிடிக்கும்.

கடலில் வேகமாக பரவி வரும் 'சீ ஸ்நாட்' (sea snot) அல்லது கடல் சளி

கடலில் வேகமாக பரவி வரும் 'சீ ஸ்நாட்' (sea snot) அல்லது கடல் சளி

இதை விஞ்ஞானிகள் 'சீ ஸ்நாட்' (sea snot) என்று குறிப்பிடுகிறார்கள். இது மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.மனிதனின் உடலில் இருக்கும் சராசரி வெப்பநிலை திடீரென அதிகரிக்கும் பொழுது, மனிதனுக்குச் சளி பிடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, காரணம் இல்லாமல் உங்களுக்குச் சளி பிடித்துவிட்டது என்றால், உங்களின் உடல் சூடு அதிகரித்திருக்கிறது என்று அர்த்தமாம்.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

பச்சை கசடு போன்ற மெலிதான 'கடல் சளி'

பச்சை கசடு போன்ற மெலிதான 'கடல் சளி'

உடல் அதிக வெப்பமடைந்தால், உடலில் உள்ள உறுப்புகளை இது பாதிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சரி, இதற்கும் கடல் சளிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம், காரணம் இருக்கிறது வாருங்கள் சொல்கிறோம்.

துருக்கி கடல்களில் சாம்பல் அல்லது பச்சை கசடு போன்ற ஒரு மெலிதான அடுக்கு உருவாகிவருகிறது. இதை 'கடல் சளி' அல்லது 'சீ ஸ்நாட்' என்று அழைக்கின்றனர். இந்த கடல் சளி கசடுகள் தொடர்ந்து குவிந்து வருவது, துருக்கியில் சுற்றுச்சூழல் ஆபத்து கவலையை அதிகரித்து வருகிறது.

கடல் முழுவதும் பரவி வரும் சீ ஸ்நாட் - அவசரக் கால நடவடிக்கை

கடல் முழுவதும் பரவி வரும் சீ ஸ்நாட் - அவசரக் கால நடவடிக்கை

இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்குக் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கருங்கடலை ஈஜியன் கடலுடன் இணைக்கும் துருக்கியின் மர்மாரா கடல், கடல் ஸ்நாட்டால் மிகப்பெரிய வெடிப்பைக் கண்டுள்ளது.

அருகிலுள்ள கருப்பு மற்றும் ஏஜியன் கடல்களிலும் இந்த கடல் சளி கசடு காணப்பட்டுள்ளது.இந்த மெலிதான அடுக்கு நாட்டின் கடல் முழுவதும் பரவி வருவதால், நெருக்கடியைச் சமாளிக்க இப்போது அவசரக் கால அழைப்பு நடவடிக்கைகளைத் துருக்கி எடுத்து வருகிறது.

அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!

எதனால் இந்த கசடு கடலில் திடீரென தோன்றியுள்ளது?

எதனால் இந்த கசடு கடலில் திடீரென தோன்றியுள்ளது?

எதனால் இந்த கசடு கடலில் திடீரென தோன்றியுள்ளது? இதனால் என்ன-என்ன ஆபத்துகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் மனிதர்களை எச்சரிக்கின்றனர் என்பது பற்றிப் பார்க்கலாம்.

'சீ ஸ்னோட்' என்பது கடல்சார் சளி ஆகும், இது காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இணைந்து நீர் மாசுபாட்டின் விளைவாக ஆல்கேக்கள் ஊட்டச்சத்துக்களுடன் அதிகமாக இருக்கும்போது உருவாகிறது.

மனிதர்கள் செய்த தவறினால் புது உருவம் எடுத்துள்ள கடல் சளி

மனிதர்கள் செய்த தவறினால் புது உருவம் எடுத்துள்ள கடல் சளி

இத்துடன் மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள நீர் மாசுபாடு பிரச்சினை காரணமாக இந்த கடல் சளி தற்பொழுது புது உருவம் எடுத்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பைட்டோபிளாங்க்டன் மற்றும் அதிகப்படியான வீட்டு மற்றும் தொழில்துறை கழிவுகளைக் கட்டுப்பாடில்லாமல் கடலுக்குள் கொட்டுவது போன்ற காரியங்களை மனிதர்கள் தொடர்ந்து செய்து வந்த காரணத்தினால், இந்த தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாகச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

கடலை பாதிப்படைய செய்துள்ள கடல் சளியின் வீடியோ

இந்த பிசுபிசுப்பான, பழுப்பு மற்றும் நுரை நிறைந்த பொருளாகத் தோன்றும் கடல் சளியின் அடுக்கு வேகமாகக் கடலின் மேற்பரப்பை அடைத்துக் கொண்டு வருகிறது.

கடலின் மேற்பரப்பு மட்டுமின்றி, கடலின் அடிப்பகுதியை நோக்கியும் சில அடி முதல் பல கிலோ மீட்டர் வரை அடர்த்தியாக வளரும் திறன் கொண்டது இது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடலின் அடிப்பகுதி வரை பாதிப்படைய செய்துள்ள இந்த கடல் சளியின் வீடியோவை பார்த்தால் ஆபத்து என்ன என்று உங்களுக்கு புரியும்.

வைரஸ், பாக்டீரியாவின் கூடாரமாக மாறி வரும் கடல்

வைரஸ், பாக்டீரியாவின் கூடாரமாக மாறி வரும் கடல்

அதுமட்டுமின்றி, இந்தக் கசடு படலத்தினால் பெரியளவில் ஆபத்தில்லை என்றாலும் கூட வைரஸ், பாக்டீரியா போன்ற பல ஆபத்தான நுண்ணுயிர்களைக் கவர்ந்து அவற்றின் கூடாரமாக இது கடலில் மிதந்து வருவதனால், மனிதர்களை இது பெரியளவில் பாதிக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது விஞ்ஞானிகள் சந்தேகித்துள்ளனர்.

இஸ்தான்புல்லின் தெற்கே கடல் வழியாகப் பரவியுள்ளதுடன், துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளையும் தாக்கியுள்ளது.

செத்து மிதக்கும் உயிர்களால் தொற்று பரவும் வாய்ப்பு

செத்து மிதக்கும் உயிர்களால் தொற்று பரவும் வாய்ப்பு

பறந்து விரிந்து வளைந்து வரும் இந்த கடல் சளியினால் கடலில் உட்புகும் ஆக்சிஜன் தடுக்கப்பட்டு, கடலின் வெப்பநிலை இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால், கடலில் உள்ள உயிர் வளங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதனால் செத்து மிதக்கும் உயிர்களால் இன்னும் அதிகப்படியான தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார். மனிதர்கள் மாசு ஏற்படுத்தும் அலட்சியம் மாறினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
What is the sea snot outbreak in Turkey and how it can affect marine and humans life say scientists : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X