Home
Scitech

நம் பூமிக்கு அருகிலேயே இன்னொரு பூமி இருந்தால் என்னவாகும்?

கிரகங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் நிலைப்பாடும், வளர்ச்சியும் கூட ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இரட்டை சகோதரர்கள், இரட்டை சிகரங்கள், இரட்டை நகரங்கள் இந்த வரிசையில் இரட்டை கிரகங்கள் அதாவது ஒரே சூரிய குடும்பத்தில் இரண்டு பூமி இருந்தால், என்னென்ன நடக்கும்? இயற்கையின் இந்த விந்தையான வேலை எப்படி செய்யும்?

நம் பூமிக்கு அருகிலேயே இன்னொரு பூமி இருந்தால் என்னவாகும்?

இது சாத்தியம் ஆனால், அந்த இரண்டாவது பூமி எங்கே இருக்கும்? அந்த இரண்டு கிரகங்களுமே ஒரே சுற்றுப் பாதையைப் பகிர்ந்து கொள்ளுமா? பகிர்ந்து கொள்ள முடியுமா? இன்னொரு பூமியில் உள்ள ஜீவராசிகள் அல்லது மனிதர்கள் நம்மைப் போலவே இருப்பாரா? அல்லது வேறு மாதிரி இருப்பார்களா? அவர்களை நம்மையும், நாம் அவர்களையும் தொடர்பு கொள்வோமா? பயணங்கள் செய்வோமா? வாருங்கள், இந்த அனைத்து கேள்விகளுக்குமான விடைகளை அலசுவோம்!

கெப்ளர்

கெப்ளர்

கடந்த 2015 ஆம் ஆண்டில், நாசாவின் மிகவும் சக்திவாய்ந்த கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியானது பூமியின் "நெருங்கிய நகலை" (கிட்டதட்ட பூமியை போன்றே இருக்கும் ஒரு கிரகத்தை) கண்டுபிடித்தது. அது கெப்லர் - 452 என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர்கள் அதை "எர்த் 2.0" என்றே செல்லமாக அழைக்கின்றனர்.

385 நாட்களுக்கும் முழுமையாக சுற்றி வருகிறது

385 நாட்களுக்கும் முழுமையாக சுற்றி வருகிறது

அந்த கெப்லர் - 452 கிரகம் ஆனது நமது சூரியனை போன்றே இருக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒவ்வொரு 385 நாட்களுக்கும் முழுமையாக சுற்றி வருகிறது. மேலும் அது அதன் நட்சத்திரத்துடன் ஒப்பிடும்போது, ஒரு வசிப்பிட மண்டலத்தில் நிலைநிறுத்தப்படுகிறது, அதாவது மிகவும் வெப்பமக இல்லாத அதே சமயம் மிகவும் குளிராக இல்லாத ஒரு இடமாக உள்ளது. மேலும் அது பாறை மேற்பரப்புடன் கூட இருக்கலாம் என்றும் நம்ப படுகிறது.

பூமியின் தூரத்து சொந்தமாக இருக்கலாம்

பூமியின் தூரத்து சொந்தமாக இருக்கலாம்

ஒருவேளை இந்த கிரகம் ஆனது நமது பூமியின் தூரத்து சொந்தமாக இருக்கலாம் என்றாலும் கூட, அது நமது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சரி இந்த இடத்தில் தான் எழுகிறது ஒரு குதர்க்கமான கேள்வி - தூரத்தில் இல்லாமல் மிகவும் அருகில், அதுவும் நமது சூரிய குடும்பத்திலேயே இன்னொரு பூமி போன்ற கிரகம் இருந்தால் என்ன ஆகும்? இது சாத்தியமா? சாத்தியம் ஆகும் பட்சத்தில் அது நீடிக்குமா? அல்லது ஈர்ப்பு சக்தி அல்லது ஒரு இனப் போட்டி காரணங்களால் இரண்டில் ஒன்று தான் மிஞ்சி இருக்குமா?

இரண்டாம் பூமி

இரண்டாம் பூமி

அப்படியாக இன்னொரு பூமியை நமது சூரிய குடும்பத்தில் எங்காவது பொருத்தப் போகிறீர்களானால், அதை நம்முடைய கிரகத்திற்கும் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே வைப்பது தான் நல்லது. ஏனெனில், நமது பூமி சூரிய மண்டலத்தின் வாழ்வாதார மண்டலத்தின் உள் விளிம்பில் தான் பூமி கிரகம் உள்ளது, மற்றும் செவ்வாய் கிரகிதத்தின் மேலோடு வெளிப்புற விளிம்பிற்கு நெருக்கமாகவும் உள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதியை தாண்டி வேறு எங்காவது இரண்டாம் பூமி இருக்கும் பட்சத்தில், அது நம்மை போன்ற ஜீவராசிகள் வாழ்வதற்கு மிகவும் குளிரான ஒரு இடமாக இருக்கலாம்.

கிரகங்கள் எனும் கோட்பாடு சாத்தியம் தான்

கிரகங்கள் எனும் கோட்பாடு சாத்தியம் தான்

சரி இப்போது, நமது பூமிக்கு அருகில் உள்ள மற்றொரு பூமியானது நமக்கு வசதியான நிலைமைகளை உருவாக்கிகொடுக்குமா? அல்லது இருக்கும் நிலமைகளை கெடுக்குமா? என்று கேட்டால் - ஒரே கோளத்தை பகிர்ந்து கொள்ளும் இரு கிரகங்கள் எனும் கோட்பாடு சாத்தியம் தான், ஆனால் அது எப்போதுமே நீடித்து இருக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது.

 சூரியனை நோக்கி

சூரியனை நோக்கி

ஏனெனில், இரண்டு கிரகங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்புவிசை தொடர்பு ஆனது, ஒரு கட்டத்தில் இரண்டும் மோதிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கலாம் அல்லது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தை சூரியனை நோக்கி விட நேரிடலாம். நாம் கணிக்கும் இந்த விபரீதம் ஆனது உடனே நடக்காது, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு, இரண்டு கிரகங்களும் ஒத்துழைப்பை பரிமாறிக்கொள்ளும், பின்னர் தான் "ஆட்டத்தை": தொடங்கும்.

மற்றொரு சாத்தியமும் உள்ளது

மற்றொரு சாத்தியமும் உள்ளது

இரு பூமி எனும் கோட்பாட்டில் மற்றொரு சாத்தியமும் உள்ளது. அதில் ஒப்பிடத்தக்க அளவிலான இரண்டு கிரகங்கள் ஆனது தனித்த சுற்றுப்பாதைகளைக் கொண்டிருக்கக்கூடும், அதாவது ஒரு கிரகம் மற்றொன்றின் வெளிப்புறத்தில் சுற்றுப்பாதையை கொண்டு இருக்கும். அதாவது சந்திரன், பூமி மற்றும் சூரியன் போன்று!

இரண்டுமே சூரியனை எவ்வாறு சுற்றி வருகிறது?

இரண்டுமே சூரியனை எவ்வாறு சுற்றி வருகிறது?

அதாவது, இந்த இடத்தில் சந்திரன் எவ்வாறு பூமியை சுற்றி வருகிறது என்பதையும், அவை இரண்டுமே சூரியனை எவ்வாறு சுற்றி வருகிறது? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கிரக அமைப்புகளில் உள்ளது போன்றே ஈர்ப்பு அளவுகள் இருக்கும் பட்சத்தில் இரண்டு புவி அமைப்பு கோட்பாடு ஆனது ஆபத்தில்லாத ஒன்றாக இருக்கலாம்.

பரிணாம வளர்ச்சிகள் ஏற்படுமா?

பரிணாம வளர்ச்சிகள் ஏற்படுமா?

சரி அந்த இரண்டாம் பூமியிலும் அறிவார்ந்த வாழ்க்கை வடிவங்களில் உருவாகுமா? அதாவது நமது சொந்த மனித இனங்கள் போன்ற பரிணாம வளர்ச்சிகள் ஏற்படுமா? இதற்கு நிச்சயமான பதிலை கூற முடியாது. கிரகங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் நிலைப்பாடும், வளர்ச்சியும் கூட ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. யாருக்கு தெரியும் அவர்கள் வேறு மொழியை கூட பேசலாம். ஒரு கட்டத்தில் கிரகமயமான வர்த்தகம் அல்லது போர் போன்ற நிகழ்வுகள் பற்றிய விவாதங்கள் எழும் போது அதற்கான விடைகள் கிடைக்கலாம். ஒருவேளை ஒருவருக்கொருவரை, அறிந்து கொள்ள முயற்சிக்க ஆரம்பித்தால், வானொலி அலைகள் அல்லது செயற்கைக்கோள்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்!

Best Mobiles in India

English summary
What If There Was Another Earth in Our Solar System : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X