Home
Scitech

விண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள்!

விண்வெளியில் ஒரு அணு குண்டு வெடித்தால் என்னவாகும் என்று கற்பனையெல்லாம் செய்து பார்க்க்க வேண்டாம்.நேரிலேயே பார்த்த சாட்சிகள் உள்ளனர்.

முதலில் அணுகுண்டு அல்லது அணு ஆயுதம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம். அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய ஒரு வெடிபொருளையே அணு குண்டு அல்லது அணு ஆயுதம் என்போம்.

விண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள்!

அணுகுண்டுக்கு மட்டும் ஏன் இப்பெரும் சக்தி? ஏனெனில், ஒரு அணு ஆயுதம் ஆனது மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்து இருக்கும். அது பெருவேகத்தில் வெளிப்படும் போது போது கற்பனைக்கு எட்டாத விபரீதங்களை ஏற்படுத்தும், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதுவே அணுகுண்டின் தத்துவமாகும். இப்படியான ஒரு அணு குண்டானது தரையில் வெடித்தால் என்னவாகும் என்பதை பற்றி நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால் விண்வெளியில் ஒரு சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் என்னவாகும் என்பதை பற்றி அறிவீர்களா?

அணு ஆயுத சோதனை

அணு ஆயுத சோதனை

விண்வெளியில் ஒரு அணு குண்டு வெடித்தால் என்னவாகும் என்று கற்பனையெல்லாம் செய்து பார்க்க்க வேண்டாம்.நேரிலேயே பார்த்த சாட்சிகள் உள்ளனர். ஆம், அந்த சோதனையின் பெயர் ஸ்டார்பிஷ் ப்ரைம் (Starfish Prime). வரலாற்றிலேயே மிகவும் உயரமான இடத்தில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை ஆகும்.

அமெரிக்க அரசாங்கம்

அமெரிக்க அரசாங்கம்

1962 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் ஆனது, அறிமுகப்படுத்தியதுடன் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஜான்சன் தீவின் மேலே, சுமார் 400 கி.மீ. தூரம் என்கிற உயரத்தில் 1.4 மெகாடன் எடை அளவிலான ஒரு அணு ஆயுதத்தை வெடிக்க செய்தது. (பின் குறிப்பு: 400 கிமீ உயரம் என்பது தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றிக்கொண்டு இருக்கும் உயரமாகும்)

பெரிய தீப்பந்தை உருவாக்கியது

பெரிய தீப்பந்தை உருவாக்கியது

அந்த வெடிப்பு அந்த ஒரு பெரிய தீப்பந்தை உருவாக்கியது. மேலும் அந்த வெடிப்பின் ஆற்றல் ஆனது மின்காந்த துடிப்பை உருவாக்கியது, அது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிமீ தொலைவு வரை நீண்டது. பொதுவாக இந்த மின்காந்த துடிப்பு ஆனது மின் சாதனங்களை சேதப்படுத்தும் திறனை கொண்டு இருக்கும். இந்த வெடிப்பின் கீழ் உருவான துடிப்பும் அதை நிகழ்த்த தவறவில்லை. ஹூவாய் முழுவதும் இருந்த, தெரு விளக்குகள் இருட்டாகின, தொலைபேசிகள் செயல் இழந்தன, குறிப்பாக வழிசெலுத்தல் மற்றும் ரேடார் அமைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆறு செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை

ஆறு செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை

வெடிப்பின் தாக்கத்தை அனுபவித்த பகுதியில் இருந்த ஆறு செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை ஆனது தோல்வியடைந்தது. இந்த அனைத்திற்குமே காரணம் - ஒரு 1.4 மெகாடன் வெடிகுண்டு ஆன ஸ்டார்பிஷ் ப்ரைம் தான். இந்நிலைப்பாட்டில், சுமார் 50 க்கும் மேற்பட்ட மெகாடன் அளவிலான ஒரு அணு குண்டை விண்வெளியில் வைத்து வெடித்தால் என்னவாகும்?

விண்வெளியில் வளிமண்டலமும் இல்லை

விண்வெளியில் வளிமண்டலமும் இல்லை

முதன்மையாக, விண்வெளியில் வளிமண்டலமும் இல்லை, ஆக எந்த விதமான காளான் வடிவ மேகங்களும், அதனை தொடர்ந்த வெடிப்பு அலைகளும், வெடிப்புக்குப் பின்னர் ஏற்படும் வெகுஜன அழிவும் இருக்காது. அதற்கு பதிலாக, நாம் ஒரு மாபெரும் நெருப்பு பந்தை பார்க்க முடியும், அதாவது ஸ்டார்பிஷ் ப்ரைமின் நெருப்பு பந்தை விட நான்கு மடங்கு பெரியதாக ஒன்று உருவாகும். அந்த வெடிப்பின் முதல் 10 விநாடிகளை நாம் நேரடியாக பார்க்கும் பட்சத்தில், அது நம் கண்களை நிரந்தரமாக சேதப்படுத்தலாம்.

காலி செய்யும்

காலி செய்யும்

இந்த வெடிப்பின் போது, செயற்கையாக உருவாக்கம் பெற்ற செயற்கைக்கோள்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இருக்காது. அதாவது குண்டு வெடிப்புகளில் இருந்து கிளம்பும் கதிர்வீச்சு ஆனது பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் சுற்றும் நூற்றுக்கணக்கான உபகரணங்களை காலி செய்யும்.

செயற்கைக்கோள்கள்

செயற்கைக்கோள்கள்

அவைகளில் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள், இராணுவ உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி போன்ற விஞ்ஞான கருவிகளும் உள்ளன. தவிர விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையங்களும் கூட வெடிப்பின் கதிர்வீச்சினால் ஆபத்துக்கு உள்ளாகலாம். நாம் தரையில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை.

இருளில் மூழ்கடித்து விடும்

இருளில் மூழ்கடித்து விடும்

வெடிப்புப் புள்ளியானது மிகவும் தூரமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு பெரிய அளவிலான ஆபத்துகள் இருக்காது, அதாவது உயர் ஆற்றல் கதிர்வீச்சு நம்மை எட்டாது, அதற்காக நாம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நிகழும் குண்டு வெடிப்பானது மின்காந்த தூண்டலை ஏற்படுத்தி பூமியில் உள்ள குறிப்பிட்ட அளவிலான ஒரு பரந்த பகுதியை இருளில் மூழ்கடித்து விடும். அதாவது பிராந்திய மின்வழங்கல் மற்றும் மின்னாற்றலை வேலைநிறுத்தம் செய்ய வைக்கும். அவைகளை வீழ்த்தும். இதன் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் பல நாட்கள் வரையிலான மின்சக்தி இல்லாமல் அவதிப்பட நேரலாம்.

வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சு

வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சு

வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சு ஆனது வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன் தொடர்பு கொண்டு அடுத்த பல நாட்கள் வரையிலாக நீடித்திருக்கும் (வெடிப்பு தளத்திற்கு அருகில்) ஒரு கண்கவர் அரோராவை உருவாக்கும்.


இது போன்ற ஒரு சம்பவம் இது ஒருபோதும் நடக்காது. ஏனெனில் சார் (Tsar) போன்ற டெர்மோன் அணுக்கரு சாதனங்கள் தற்போது இல்லை. அப்படியே உருவாகினாலும் அது சுமார் 27,000 கிலோ என்கிற அளவிலான எடையை கொண்டு இருக்கும். இந்த அளவிலான ஒரு எடையை விண்வெளிக்குள் சுமந்து செல்ல உலகில் உள்ள ஒரு சில செயல்படும் ராக்கெட்டுகளால் மட்டுமே சாத்தியம் என்பதால் நாம் பாதுகாப்பாக இருப்பது உறுதி.

Best Mobiles in India

English summary
What if the most powerful nuclear bomb exploded in space : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X