Home
Scitech

திடீரென்று பூமி பின்னோக்கி சுற்றினால் என்னவாகும்?

மேலே கூறியபடி, அதன் உருவாக்கம் முதல், பூமியானது அதன் அச்சில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழன்று வருகிறது.

பூமி கிரகம் அதன் சொந்த அச்சில் சுழலுவதையே புவியின் சுழற்சி என்பார்கள். உருவாக்கம் பெற்ற நாள் தொடங்கி இன்று வரையிலாக பல வகையான மாற்றங்களை கண்டா நமது பூமி கிரகமானது, குறிப்பிட்ட சில விடயங்களில் மட்டும் எந்த விதமான மாற்றங்களையும் காணவில்லை. அதில் ஒன்று தான் - புவியின் சுழற்சி.


ஆதிகாலம் தொடங்கி இன்று வரையிலாக நமது பூமி ஆனது - நேரடியான இயக்கத்தின் கீழ் - கிழக்கு நோக்கி சுற்று கொண்டு இருக்கிறது. சரி ஒருவேளை, திடீரென்று பூமி பின்னோக்கி சுற்றினால் என்னவாகும்?

நாம் சில சம்பவங்களை சந்திக்க நேரிடும்!

நாம் சில சம்பவங்களை சந்திக்க நேரிடும்!

வேறு என்ன ஆகிவிட போஇறது? வழக்கமாக கிழக்கில் இருந்து உதிக்கும் சூரியன் ஆனது வழக்கத்திற்கு மாறாக மேற்கில் இருந்து உதிக்கும். வேறு என்ன பெரிதாக மாறி விட போகிறது? - என்று நினைத்தால் அது மிகவும் தவறு! ஒருவேளை பூமி பின்னோக்கி சுற்றினால் பூமி கிரக வாசிகளாகிய நாம் சில சம்பவங்களை சந்திக்க நேரிடும். அவைகள் என்னென்ன என்பதை பற்றி அலசுவோம் வாருங்கள்!

"இதே பூமி" ஆக இருக்காது!

மேலே கூறியபடி, அதன் உருவாக்கம் முதல், பூமியானது அதன் அச்சில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழன்று வருகிறது. அது எதிர் திசையில் சுழல தொடங்கும் பட்சத்தில், இந்த பூமி கிரகமானது நாம் இதுவரையிலாலக கண்டு ரசித்து வாழ்ந்த "அதே பூமி" ஆக இருக்காது. ஆம் பூமி சில மாற்றங்களை சந்திக்கும்? வேறு மாறி விடும்? எப்படி?

சரி என்ன என்ன மாற்றங்கள் நிகழும்?

சரி என்ன என்ன மாற்றங்கள் நிகழும்?

எப்படி? என்பதை அலசி ஆராயும் முன்னர் நமது பூமி ஆனது மிகவும் அழகான மற்றும் துல்லியமான வேகத்தின் கீழ் சுழல்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது வினாடிக்கு 460 மீட்டர் (வினாடிக்கு 1,509 அடி) என்கிற வேகத்தில் சுழல்கிறது.

துடைத்து எரிந்து விடும்!

துடைத்து எரிந்து விடும்!

அமைதியாக சுழலும் பூமியின் சுழற்சியில், திடீரென்று ஒரு மாற்றம் ஏற்பட்டால் பேரழிவுகளை விளைவிக்கும் காற்றும், பெருங்கடல்களில் இருந்து பெரும் அலைகளும் கிளம்பும். இது அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, பூமி கிரகத்தில் ஒரு அசாதாரணமான வானிலை நிலைமையை ஏற்படுத்தி, கிட்டத்தட்ட எல்லாவற்றையும் துடைத்து எரிந்து விடும். சரி இப்போது, இந்த அழிவு மிக்க விளைவுகளை பூமி சந்தித்து முடித்து விட்டது என்றும், இந்த பேரழிவு நடந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது என்றும் வைத்து கொள்ளுங்கள். (இந்த இடத்தில், இதே போன்றதொரு இயற்கை நிகழ்வை நமது அண்டை கிரகம் ஆன வீனஸிற்கும், பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது).

அனைத்து கண்டங்களிலும்!?

அனைத்து கண்டங்களிலும்!?

அப்போது, எல்லாமே தலை கீழாக இருக்கும். நீங்கள் சூரியனையும் சந்திரனையும் மேற்கில் உதித்து கிழக்கில் மறைவதை பார்ப்பீர்கள். ஆக தற்போது ஒரு கடும் பாலைவனமாக இருக்கும் சஹாரா ஆனது அப்போதும் ஒரு பாலை வனமாகவே இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில், பூமியின் இந்த புதிய சுழற்சி ஆனது, அனைத்து கண்டங்களிலும் - முழுவதும் - புதிய காலநிலை சூழ்நிலைகளை உருவாக்கும்.

என்ன மாதிரியான புதிய சூழ்நிலைகள் உருவாகும்?

என்ன மாதிரியான புதிய சூழ்நிலைகள் உருவாகும்?

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் - இப்போது இருக்கும் பசுமையான நிலைமைகளை விட, பூமியானது கூடுதல் பசுமையானதாக இருக்கும். விளக்கமாக கூற வேண்டும் என்றால் - இந்த புதிய சுழற்சி ஆனது காற்று மற்றும் கடல் நீரோட்டங்களை மாற்றிவிடும், மேலும் இது கிரகத்தின் காலநிலை முழுவதையும் மாற்றிவிடும்.

காடுகளில் மழை பெய்யும் வாய்ப்பை அதிகரிக்கும்!

காடுகளில் மழை பெய்யும் வாய்ப்பை அதிகரிக்கும்!

அதாவது கடல்கள் ஆனது உலகளாவிய காலநிலையின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்து கொள்ளும். சூரியனின் வெப்பத்தை கிரகம் முழுக்க விநியோகம் செய்யும். அது வெப்பமான மற்றும் காய்ந்த இடங்களில் ஈரப்பதத்தை உண்டாக்கும் மற்றும் காடுகளில் மழை பெய்யும் வாய்ப்பை அதிகரிக்கும்.

Best Mobiles in India

English summary
What If Earth Started Spinning Backwards: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X