அதிவேகத்தில் சுற்றும் சி.டி! என்ன நடந்தது? வாங்க பார்ப்போம்.!

இந்த வீடியோவில் அவர்கள் பல குறுந்தகடுகளை சோதனை செய்தனர். நாம் இரண்டாவதை கருத்தில் கொண்டால், அது ஒரு நொடிக்கு 61,960 ப்ரேம்கள் என்று. பதிவுசெய்துள்ளனர்.

|

விலையுயர்ந்த பொருட்களை கொண்டு வேடிக்கையான விசயங்களை செய்யும் போது என்ன நடக்கும்? அற்புதமான நிகழ்வுகள் அரங்கேறும் என்பது தான் சரியான விடை. இதற்கு முன்பு யாரும் பார்த்திராத அதிசயங்களை பார்க்கமுடியும். சுழலும் குறுந்தகடை (Compact disc) அதிவேக கேமரா கொண்டு பார்க்கும் போது அப்படி தான் அதிசயம் நிகழ்ந்தது. குறுந்தகடுகள் அதிவேகமாக சுழலும் போது சுக்குநூறாக நொறுங்கியதை, அதிவேக கேமரா கொண்டு பார்க்கும் போது, குறுந்தகட்டில் உள்ள ஒரு பிழை எப்படி பரவுகிறது என்பதை பார்க்கமுடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பான வீடியோ மூலம், சில ஆய்வுகளை செய்யலாம் வாருங்கள்.



குறுந்தகடு சுழலும் வேகம்?

இந்த வீடியோவில் அவர்கள் பல குறுந்தகடுகளை சோதனை செய்தனர். நாம் இரண்டாவதை கருத்தில் கொண்டால், அது ஒரு நொடிக்கு 61,960 ப்ரேம்கள் என்று. பதிவுசெய்துள்ளனர். எனவே அந்த குறுந்தகடு நிமிடத்திற்கு 23,000முறை என்ற சுழல் வீதத்தில் சுழலுவதாக குறிப்பிடுகின்றனர். அந்த குறுந்தகட்டின் உண்மையான சுழல் வேகத்தை நாம் டிராக்கர் வீடியோ அனாலிசிஸ் (http://physlets.org/tracker/) மூலம் கண்டறிவோம்.

வீடியோ

வீடியோ

அந்த வீடியோவை இதில் பதிவேற்றம் செய்த பின்னர், குறுந்தகட்டின் சுற்றளவை 12சென்டிமீட்டர் என கணித்து உள்ளீடு செய்வோம் . பின்னர் குறுந்தகட்டின் மையத்தில் ஆரம்ப புள்ளியை வைத்து, சுழலும் போது சில புள்ளிகள் வைத்து பின்தொடர்வோம். இதன் முடிவு என்ன என்பதை படத்தில் காணலாம்.

ரேடியன்/நொடி

ரேடியன்/நொடி

நமக்கு கிடைத்துள்ள கோண திசைவேகம் of 3.914 x 103 ரேடியன்/நொடி என்பதல வைத்து குறுந்தடு சுழலும் வேகம் நிமிடத்திற்கு 37,375 rpm என அறிகிறோம்.இது அவர்களின் கணிப்பான 23,000rpm ஐ விட சற்று அதிகமே.அதுவே இந்த வீடியோ அனைத்து ப்ரேம்களையும் காட்டுவதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு ப்ரேமும் 1/61,960 நொடிகள் எடுத்துக்கொள்கிறது.

உடைந்த பாகங்கள் என்ன செய்யும்?

உடைந்த பாகங்கள் என்ன செய்யும்?

இங்கே கொடுப்பட்டுள்ள புகைப்படத்தில் குறுந்தகட்டின் உடைந்த பாகங்கள் செல்லும் பாதையை காட்டுகிறது.


குறுந்தகடு உடையும் முன்பு, அதன் மற்ற பாகங்கள் தரும் அழுத்தம் காரணமாக உடைந்த பாகங்கள் வட்டப்பாதையில் நகரத்துவங்கும். உடைந்த பிறகு அந்த அழுத்தம் இருக்காது. அழுத்தம் இல்லாமல் உடைந்த பாகங்கள் என்ன செய்யும்? சரியான விடை என்னவெனில் அவை தங்களின் திசைவேகத்தை மாற்றிக்கொள்ளாது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்.ஆனால் அதன் வேகம் அதிகரிக்குமா என்ன? ஆம் காற்றின் எதிர்ப்பால், அது நடைபெறும்.

ப்ரேம் ரேட் சரியா

ப்ரேம் ரேட் சரியா

இதை புரிந்துகொண்டால் கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முயலுங்கள்.


* உடைந்த பகுதிகள் நேர்கோட்டில் செல்லும் போது புவிஈர்ப்பு விசையால் வேகத்தில் மாற்றம் ஏற்படும்? அப்படியெனில் இந்த முடுக்கத்தை பயன்படுத்தி ப்ரேம் ரேட் சரியா என கண்டறிய முடியுமா? இல்லை எனில் ஏன் முடியாது?

 பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது

*குறுந்தகட்டின் உடைந்த பகுதியில் காற்று எதிர்விசையை உணர முடிந்தால், மற்றபகுதிகளிலும் அது இருக்குமா? சிறிய துண்டு காற்றின் எதிர்ப்பு விசையால் குறைந்த அல்லது அதிக எதிர்ப்பு விசையை கொண்டிருக்கமா?


*குறுந்தகடு பாலிகார்போனேட் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. அதை உடைக்க தேவையான சக்தி எவ்வளவு?


*உடைந்த பகுதிகள் ஏன் சுழலுகின்றன? மற்ற பகுதிகளும் அதுபோலவே சுழலுமா?

Best Mobiles in India

English summary
What Happens When a CD Spins Too Fast: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X