Just In
- 1 day ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 1 day ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
"முதல்வர் வேட்பாளர்".. ஈரோடு கிழக்கால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. அலர்ட்டான அண்ணாமலை.. இதுதான் சங்கதியா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Movies
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பிளாக் ஹோல் உள்ளே நீங்க சென்றால் என்ன ஆவீர்கள் தெரியுமா? அறிவியல் உண்மை இதான்.!
நாம எல்லாருமே நம்ம பள்ளி பருவத்தில் பிளாக் ஹோல் (Black Hole) பற்றி படிச்சி இருப்போம். இல்ல, ஆங்கில திரைப்படங்கள், சயின்ஸ் பிக்சன் (Science Fiction) நாடகங்கள்ல கேள்விப்பட்டிருப்போம். பிளாக் ஹோல் அப்படின்றது ஒரு கேலக்ஸியோட (Galaxy) மையத்தில் இருக்கும், அதுல புவியீர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும், பிளாக் ஹோல் உள்ள போனா வெளிய வரவே முடியாது.! என்பது போன்ற விஷயங்களை தான் நாம் இப்போது வரை தெரிந்திருக்கிறோம்.

ஒரு மனிதன் பிளாக் ஹோல் உள்ளே சென்றால் என்னவாகும்?
தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒரு மனிதன் பிளாக் ஹோல் உள்ளே சென்றால் என்னவாகும்? என்று உங்களுக்கு தெரியுமா? (What happens if a human falls into a black hole) தெரியாதுல...
அதை தான் இப்போ இந்த பதிவின் மூலம் தெரிஞ்சுக்கப்போறோம். நம்ம விண்வெளியில் இருக்கும் பல வியக்க வைக்கும் அம்சங்கள்ல ஒன்னு தான் இந்த 'பிளாக் ஹோல்' என்று அழைக்கப்படும் கருந்துளைகள்.
இந்த பிளாக் ஹோல் எப்படி உருவாகிறது என்பதே சற்று வினோதமாக இருக்கிறது.

கொடூரமான அரக்கனாக பிளாக் ஹோல் எப்படி விண்வெளியில் உருவாகுகிறது தெரியுமா?
விண்வெளியில இருக்க துகள்கள் குளிர்ந்து, இருக்கமடையும் போது ஒரு ஸ்டாராக (Star) இவை பிறப்பெடுக்குது.
அப்படி பிறக்கும் ஸ்டார் பெரிய அளவானதா இருக்கும்போது தன்னுடைய வாழ்நாள்ல ரெட் சூப்பர் ஜெயன்ட் (Red Super Giant) ஆகவும், சூப்பர் நோவாவாகவும் (Super Nova) உருமாறி, அதன் வாழ்க்கையை இறக்கும் போது கொடூரமான அரக்கனாக உருமாறி பிளாக் ஹோலா மாறுகிறது.
இப்படி தான் கருந்துளை விண்வெளியில் உருவாகுகிறது.

ஏன் கருந்துளைகளில் மட்டும் அதிக ஈர்ப்பு சக்தி இருக்கிறது தெரியுமா?
ஒரு ஸ்டார் இறக்கும் போது தன்னுடைய அளவை விட பல மடங்கு சுருங்கும். அப்படி சுருங்கும் போது அதனுடைய அடர்த்தி பன்மடங்கு உயரும். இதன் விளைவாக தான் அந்த ஸ்டாருடைய ஈர்ப்பு சக்தி (gravitation force) பல மடங்கு அதிகரிக்கிறது.
இதைத் தான் பிளாக் ஹோல் அப்படின்னு சொல்லுவாங்க. பொதுவாகவே பிளாக் ஹோல்ல ஈர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், அதன் வழியாக கடந்து போகும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதனுள் சென்றுவிடும்.

விண்வெளியில் இருக்கும் பிளாக் ஹோல்களிலேயே எது மிகவும் ஆபத்தானது தெரியுமா?
பிளாக் ஹோல் அருகில் சென்ற எந்த பொருளும் தப்பிக்க முடியாது என்பது அறிவியல் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
இதன் காரணமாக பிளாக் ஹோலை பற்றி எந்த ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையும் இதுவரை கிடைக்கவில்லை.
பிளாக் ஹோல் உடைய விட்டம் (Diameter) சில மைல்களில் இருந்து பல ஆயிரம் மைல்கள் வரை இருக்கக் கூடும். பிளாக் ஹோல்களிலேயே சிறிய விட்டம் கொண்ட கருந்துளைகள் தான் மிகவும் ஆபத்தானவை.

சிறிய விட்டம் கொண்ட பிளாக் ஹோல் கிட்ட நீங்கள் போனால் என்னவாகும்?
சிறிய விட்டம் கொண்ட பிளாக் ஹோல்களில் தான் ஈர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதால் அதன் வழியே கடக்கும் போது விரைவில் அந்த பொருள் உள்ளே ஈர்க்கப்படும்.
உதாரணத்திற்கு, நீங்கள் அந்த சிறிய விட்டம் கொண்ட பிளாக் ஹோலை கடக்குறீங்கனு ஒரு பேச்சுக்கு வச்சுக்கலாம். அப்படி நீங்கள் கடக்கும் போது, அதில் உள்ள அதீத ஈர்ப்பு சக்தி காரணமாக உங்கள் கால்கள் மட்டும் முதலில் வேகமாக உள்ளே இழுக்கப்படும்.

பிளாக் ஹோல் உங்களை சின்னா பின்னம் ஆக்கும்.! பாதிப்பு இருக்காதா?
ஆனால், உங்கள் தலைப்பகுதி அதே அளவு ஈர்ப்பை அனுபவிக்காது.
இதன் காரணமாக உங்கள் உடல் கீழ் நோக்கி இழுக்கப்பட்டு சின்னா பின்னமாக ஆகிவிடும் என்று விஞ்ஞானிகளின் கால்குலேஷன் தெரிவிக்கிறது.
அதுவே, ஒரு பெரிய விட்டம் கொண்ட பிளாக் ஹோலாக இருந்தால் தலைப்பகுதியும் கால் பகுதியும் ஒரே அளவு ஈர்ப்பை உணரும் என்பதால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
அப்படியானால், நாம் பெரிய பிளாக் ஹோல் உள்ளே செல்லலாமா? என்று உடனே முடிவு செய்துவிடாதீர்கள்.

பிளாக் ஹோலின் ஈவன்ட் ஹாரிஸன் சென்றால் என்ன நடக்கும்?
விஷயம் இன்னும் இருக்கு... ஒரு பிளாக் ஹோலின் வெளிப்புறத்தை ஈவன்ட் ஹாரிஸான் (Event Horizon) என்று கூறுகிறோம். அந்த ஈவன்ட் ஹாரிஸானை தாண்டுபவர் மட்டுமே பிளாக் ஹோலின் மையத்திற்கு ஈர்த்து செல்லப்படுவார்.
பொதுவாகவே ஒரு பொருள் ப்ளாக் ஹோல் உள்ளே செல்லும் போது, அதனால் அந்த ஈர்ப்பு சக்தியை தாண்டி வெளியே வர முடியாது.
ஈர்க்கப்படும் பொருள் முற்றிலுமாக அழிந்து; அதில் இருக்கும் சக்தி காமா ரேடியேஷனாக (Gamma Radiation) வெளியே விடப்படுகிறது.

பிளாக் ஹோல் பற்றி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லும் உண்மை என்ன?
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அந்த காம ரேடியேஷனின் பண்பை ஆராய்ந்து தான் அந்த கருந்துளை எப்படியானது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த காமா ரேடியேஷனை பற்றி ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) ஆராய்ச்சி செய்ததால், அதனை நாம் இப்போது ஹாக்கிங் ரேடியேஷன் (Hawking Radiation) என்றும் குறிப்பிடுகிறோம்.
மேலும், பிளாக் ஹோலை பற்றி ஹாக்கிங் மற்றொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

பிளாக் ஹோல் வழியாக நீங்கள் வேறொரு டைமென்சன் செல்லலாமா?
அதன்படி, பிளாக் ஹோலால் ஒரு டைமென்ஷனிலிருந்து (Dimension) ஈர்க்கப்பட்ட ஒருவர், அதன் மையத்திற்கு சென்ற பின்னர், மற்றொரு டைமென்ஷனிற்கு கொண்டு செல்லப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
பிளாக் ஹோலின் மையத்தில் அதன் அடர்த்தி இன்ஃபினிட்டி (Infinity) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக உள்ளே செல்லும் ஒருவர் வெளியே வந்து பிளாக் ஹோல் உள்ளே என்ன நடந்தது என்ற தன்னுடைய அனுபவத்தை மற்றவருக்கு விவரிக்க வாய்ப்பே இல்லை.

ஆனா.. உங்கள் உடல் பிளாக் ஹோல் உள்ளே சென்றால் இப்படி தான் தெரியும்.!
ஆனால், வெளியே இருந்து பார்ப்பவருக்கு ஈவன்ட் ஹாரிஸானை தாண்டி பிளாக் ஹோலில் நுழையும் ஒருவர் சுருங்கி, சிவப்பாக மாறி, அப்படியே உறைந்து போனது போல தோன்றும்.
பிளாக் ஹோலினுள் நேரம் மாறுபடாது. அதே சமயம் ஸ்பேஸ் (Space) ஆனது முன்னோக்கி நகரும்.
இதன் காரணமாக தான் ஒரு கட்டத்திற்கு மேல் பிளாக் ஹோல் சென்றவர் உறைந்து போனது போல வெளியிலிருந்து பார்ப்பவருக்கு தெரிகிறது.

வேறு ஒரு டைமென்ஷன் சென்றால் மீண்டும் உயிருடன் வர முடியுமா?
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உங்கள் உடல் உறைந்தது போல தெரிந்தாலும், அதற்கு பின் நீங்கள் வேறு ஒரு டைமென்க்ஷனில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று ஹாக்கிங்ஸ் தியரி குறிப்பிடுகிறது.
ஒருவேளை நீங்கள் மற்றொரு டைமென்ஷனிற்கு சென்றால், மீண்டும் உங்களால் நீங்கள் உள்நுழைந்த டைமெவஷனிற்கு வரவே முடியாது என்றும் ஹாக்கிங்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு ரிஸ்க்கை யார் எடுக்க தயார்? நீங்களா இல்லை உங்க பிரண்ட்ஸ்-ஆ.!
இந்த கருத்துக்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை - இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த பின்னரும் இன்று வரை ப்ளாக் ஹோல் பற்றிய மர்மம் விளக்கப்படவில்லைணு தான் சொல்லனும்.
இப்படி ரிஸ்க் எடுத்து ஒரு டைமென்க்ஷனில் இருந்து மற்றொரு டைமென்ஷனிற்கு தாவ நீங்கள் தயாரா? அல்லது உங்கள் நண்பர்களில் யாரேனும் ஒருவரை அங்கே அனுப்பி வைக்க விரும்புகிறீர்களா? என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470