Subscribe to Gizbot

அமெரிக்கா எவ்வளவு பெரிய முட்டாள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.!

Written By:

"கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையாம்" என்ற பழமொழிக்கு ஏற்ப, கேனப்பய ஊரு என்பது அமெரிக்கா என்பதற்கும், கிறுக்குப்பய நாட்டாமை என்பது அதன் ஆளுமைகள் தான் என்பதற்கும் மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் - இந்த சம்பவம்.

கொஞ்சம் தவறியிருந்தால் பூமியில் ஒரு பிரளயமே உண்டாகியிருந்திருக்கும். சரி, அப்படி என்னதான் நடந்தது.?

அமெரிக்கா எவ்வளவு பெரிய முட்டாள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.!

பனிப்போர் (Cold War) என்பது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990-வரை அமெரிக்காவிற்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த ஒரு வளர்ச்சி போட்டியாகும். அப்படியான பனிப்போரின் போது இந்த இரண்டு "வல்லரசு" நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களை வளர்த்துக் கொண்டன. பிற உலக நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிகழ்த்தி உலகில் தனது செல்வாக்கையும். ஆதிக்கத்தையும் மேம்படுத்தின.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒரு பிரளய விளைவு

ஒரு பிரளய விளைவு

இந்த பனிப்போர் காலகட்டத்தின் போது, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்க்கும் இடையே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்க்காக நிஜமாகவே யுத்தமொன்று நிகழ பார்த்தது. ஒருவேளை ஏற்பட்டிருந்தால் அந்த யுத்தமானது, நிச்சயம் ஒரு பிரளய விளைவை உண்டாகியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா.? எப்போது சண்டை போடலாமென்று இரண்டு நாடுகளும் காத்துக்கொண்டிருந்த தருணமானது. இதெல்லலம் நிகழ காரணமாக இருந்தது என்னெவென்று கூறினால் நகைப்பீர்கள்.

சந்தேகத்தின் அடிப்படையில்

சந்தேகத்தின் அடிப்படையில்

1967-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதியன்று அமெரிக்க விமானப்படையானது, நாட்டின் துருவ பகுதிகளில் உள்ள அமெரிக்க கண்காணிப்பு ரேடார்கள் முடக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த வேகத்தில், இதை சோவியத் ஒன்றியம் தான் நிகழ்த்தியுள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போருக்கு தயாராகியது.

போர் பதற்றம்

போர் பதற்றம்

இந்த போர் பதற்றத்தின் போது அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு திரியும் அமெரிக்க விமானங்கள் தரையில் இருந்தன. ஒருவேளை, இவைகள் பறந்துகொண்டிருந்தால் உடனடியாக சோவியத் ஒன்றியத்துடன் ஒரு சாத்தியமான அணு ஆயுத தாக்குத்தல் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் போர் பதற்றம் கிளம்பிய சில மணித்துளிகளுக்குள் தவிர்க்கப்பட்டது எப்படி.?

செயலிழக்க செய்தது

செயலிழக்க செய்தது

அமெரிக்கா சந்தேகபட்டது போல அதன் இராணுவ விண்வெளி வானிலை ரேடார் மற்றும் வானொலி தகவல் தொடர்புகளை செயலிழக்க செய்தது சோவியத் ஒன்றியம் அல்ல - சூரியன் தான், அதாவது ஒரு திறன் மிக்க சூரிய புயல் தான் இதெற்கெல்லாம் காரணம் என்று உடனடியாக கண்டறியப்படுகிறது.

குறிப்பிட்ட அந்த நாளில்

குறிப்பிட்ட அந்த நாளில்

சூரிய வெடிப்பு நிகழ்வுகளானது, அவ்வப்போது ரேடியோ தகவல் தொடர்பு மற்றும் மின் பரிமாற்றங்களை தகர்க்கும். அவைகள் பூமியில் மின்காந்த தொந்தரவுகள், மண்ணியல் புயல்கள் என அழைக்கப்படும். குறிப்பிட்ட அந்த நாளில் (மே 18 , 1967) சூரியனில் அசாதாரணமான பெரும் குழுவிலான தீவிரமான காந்த விசைகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை தாக்க உள்வரும் சோவியத் ஏவுகணை

அமெரிக்காவை தாக்க உள்வரும் சோவியத் ஏவுகணை

மே 23 அன்று வெளிப்பட்ட சக்திவாய்ந்த சூரிய கிளர்ச்சி நிகழ்வானது, அமெரிக்க வட கோளத்தில் உள்ள மூன்று அணு ஆயுத ஏவுகணை ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (BMEWS) தளங்களின் ரேடார்களை பாதித்துள்ளது. அமெரிக்காவை தாக்க உள்வரும் சோவியத் ஏவுகணைகளை கண்டறிய வடிவமைக்கப்பட்ட அந்த ரேடார்கள், முடக்கப்படவும் அந்த நிலையங்களில் மீதான தாக்குதல் நிகழ்த்தப்பட இருக்கிறது. இதுவொரு போர் நடவடிக்கை என்று அமெரிக்கா ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

தயார் நிலையில்

தயார் நிலையில்

1960-களின் போது அமெரிக்க விமானப்படைகள் தொடர்ந்து அணு ஆயுத எச்சரிக்கை விடுத்தன, ஆகையால் அமெரிக்க தளபதிகள் சூரிய வெடிப்பு பற்றிய தெளிவை பெறாமல் ரேடார்களை ரஷ்யர்கள் தான் முடக்கியுள்ளார் என்று கணித்துள்ளனர். உடன் அமெரிக்க படை பதிலடி கொடுக்கும் வண்ணம் தயார் நிலையில் இருக்கவும் அமெரிக்க தளபதிகள் கட்டளை விடுத்துள்ளனர். சற்று நேரத்தில் ரேடார் முடங்க நிஜமான காரணம் அறியப்பட்ட பின்னர் கட்டளைகள் உடன் சேர்த்து நிகழ் இருந்த மாபெரும் யுத்தமும் தளர்த்தப்பட்டது.

குருட்டுத்தனமான ஒரு முடிவு

குருட்டுத்தனமான ஒரு முடிவு

பனிப்போரின் உச்சக்கட்ட காலத்தில் அமெரிக்காவின் ரேடார் மற்றும் ரேடியோ தகவல் தொடர்புகளை சூரிய புயல் ஒன்றால் 'ஜாம்' ஆகிவிட "எல்லாத்துக்கும் இந்த பரணி பய தான் காரணம்" என்ற பிரபல 'மீம்' வசனத்தினை போல, எல்லாவற்றிக்கும் இந்த சோவியத் யூனியன் தான் காரணம்" என்று குருட்டுத்தனமாக ஒரு முடிவையெடுத்து ஒரு பேரழிவு இராணுவ மோதலுக்கு அமெரிக்கா வழிவகுக்கப் பார்த்தது.

காரணமே இல்லாமல் ஒரு யுத்தம் நிகழ்ந்திருக்கும்

காரணமே இல்லாமல் ஒரு யுத்தம் நிகழ்ந்திருக்கும்

சூரிய மற்றும் மண்ணியல் புயல் போன்ற ஆபத்தான தாக்கங்கள் மிக குறைவான அளவில் இருந்ததால் அது சார்ந்த ஆய்வுகள், அவதானிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளும் மிகவும் குறைவாகவே அக்காலத்தில் நிகழ்த்தப்பட்டன. அவ்வப்போது சூரியனின் செயல்பாட்டை கண்காணிக்கும் முயற்சிகளை அமெரிக்க விமானப்படை செய்து வந்த ஒரே காரணத்தினால் மட்டுமே இந்த யுத்தம் தடுக்கப்பட்டது. இல்லையெனில் காரணமே இல்லாமல் ஒரு யுத்தம் நிகழ்ந்திருக்கும்.

வாடிக்கையாக கண்காணிக்க ஆரம்பித்தது

வாடிக்கையாக கண்காணிக்க ஆரம்பித்தது

1950-களின் பிற்பகுதியில் தான் அமெரிக்க இராணுவமானது, பூமியின் காந்தப்புலம் மற்றும் மேல் வளிமண்டலத்திலான தொந்தரவுகள் போன்ற நிகழ்வுகளை அனுமானிக்க சூரிய நடவடிக்கை மற்றும் விண்வெளி வானிலை கண்காணிப்புகளை தொடங்கியது.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 2 விடயங்கள்

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 2 விடயங்கள்

1960-களில் தான் அமெரிக்க விமானப்படை வானிலை சேவையானது, சூரியனின் வளிமண்டலத்தில் வெளிப்படும் தீவிர கதிர்வீச்சு வெடிப்புகளை வாடிக்கையாக கண்காணிக்க ஆரம்பித்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் இருந்து இரண்டு விடயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். ஒன்று - அவசரத்தில் அனுமானங்களை நிகழ்த்த கூடாது. இரண்டாவது - தவறு செய்யாமலும் ஒரு அனுபவத்தை அல்லது ஒரு பாடத்தை கற்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
What happened after a solar storm jammed US surveillance radars in polar regions. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot