Subscribe to Gizbot

டுன்குஸ்கா : 185 ஹிரோஷிமாவிற்கு சமம், நல்லவேளை 2016-ல் நிகழவில்லை..!

Written By:

நமது வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட மிக பெரிய வெடிப்புகளில் மிகப்பெரிய மற்றும் மிகவும் மர்மமான ஒரு வெடிப்பு தான் - டுன்குஸ்கா நிகழ்வு (Tunguska Event). 80 மில்லியன் சைபீரிய மரங்களை தடம் தெரியாமல் அழித்து தட்டையாக்கிய அந்த மாபெரும் வெடிப்பு 1908-ல் நிகழ்ந்தது.

இந்த நிகழ்விற்கான காரணம் என்னவென்ற ஆய்வு நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. இந்த வெடிப்பிற்கான காரணம் மீண்டும் மீண்டும் தோல்வி அடைவதால் இதில் எதோ ஒரு ஆழமான மர்மம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
1908 :

1908 :

பூமி கிரக சரித்திரத்திலேயே மிக சுவாரசிய வெடிப்பான இது, ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள டுன்குஸ்கா பகுதியில் ஜூன் 30, 1908-ல் ஏற்பட்டது.

வெடிப்பு சக்தி :

வெடிப்பு சக்தி :

இந்த பாரிய வெடிப்பானது ஒரு 30-மைல் சுற்றளவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்தையும் சமதளமாக உருமாற்றியது, உடன் இந்த வெடிப்பு சக்தியின் சப்தமானது ஆயிரம் மைல்கள் தொலைவு வரை கேட்கப்பட்டது.

கருகிய பிரேதங்கள் :

கருகிய பிரேதங்கள் :

நிபுணர்கள் படி, கிட்டத்தட்ட 10 மில்லியன் மரங்கள் இந்த வெடிப்பில் துவம்சம் செய்யப்பட்டன. உடன் மான் மற்றும் பிற விலங்குகளின் எண்ணற்ற கருகிய பிரேதங்கள் நூற்றுக்கணக்கில் காணப்பட்டன.

53.913 கிமீ வேகத்தில் :

53.913 கிமீ வேகத்தில் :

இந்த வெடிப்பானது மணிக்கு 53.913 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்த வால்மீன் அல்லது சிறுகோள் மோதலாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

ஹிரோஷிமா :

ஹிரோஷிமா :

அதாவது மோதல் நிகழ்த்திய பிராந்தியம் முழுவதும் அழுத்தம் மற்றும் வெப்ப சக்தியை செலுத்திய இது கிட்டத்தட்ட 185 ஹிரோஷிமா வெடி குண்டுகளுக்கு சமம் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.

மிகப்பெரிய பிரச்சனை :

மிகப்பெரிய பிரச்சனை :

எனினும், இந்த நிகழ்விற்கும் சிறுகோள்/விண்மீன் கோட்பாடுகளுடன் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் வெடிப்பு நிகழ்ந்த பள்ளத்தில் எந்தவிதமான எஞ்சியுள்ள விண்மீனோ அல்லது சிறுகோள் பகுதியோ கிடைக்கப் பெறவில்லை.

பனி உருவாக்கம் :

பனி உருவாக்கம் :

அதனை தொடர்ந்து எண்ணற்ற பிற ஆராய்ச்சியாளர்கள் பனி உருவாக்கித்தினால் ஆன ஒரு வால்நட்சத்திரம் போன்ற விண்வெளி பொருள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று முன்மொழிந்தனர்.

கருப்பு துளை :

கருப்பு துளை :

மறுபக்கம் சில விஞ்ஞானிகள் இதுவொரு 'கருப்பு துளை'யின் தாக்கமாக ஏற்பட்ட நிகழ்வாக இருந்திருக்க கூடும் என்றும் நம்பினர். அந்த கோட்பாடு போதிய அறிவியல் ஆதாரம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

பறக்கும் தட்டு :

பறக்கும் தட்டு :

யுஎஃப்ஒ எனப்படும் பறக்கும் தட்டு தேடலாலர்கள் இந்த பாரிய வெடிப்பிற்கு காரணம் பூமி கிரகத்தை சாராத, பூமி கிரகத்தை தாண்டி வாழும் உயிரினங்களால் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.

ஓக்டி :

ஓக்டி :

ஆனால் உள்ளூர்வாசிகளிடமோ பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. வெடிப்பு நிகழ்ந்த இடத்தை சபித்த அப்பகுதி மக்களால் நம்பப்படும் 'ஓக்டி' என்ற கடவுளின் வருகை தான் அந்த வெடிப்பு என்கின்றனர்.

வானம் இரண்டாக பிரிந்தது :

வானம் இரண்டாக பிரிந்தது :

வெடிப்பு தளத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்த சாட்சி ஒருவர் தனது நாற்காலியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். அவர் அந்நிகழ்வை நினைவு கோரும் போது "திடீரென்று வடக்கு காட்டின் வானம் இரண்டாக பிரிந்தது, உயர் வானம் வரையிலாக வடக்கு பகுதி முழுக்க தீயினால் மூடப்பட்டிருந்தது போல் காட்சியளித்தது" என்று கூறியுள்ளார்.

கனிம தடயங்கள் :

கனிம தடயங்கள் :

நூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் கழிந்தும் பூமி கிரகத்தின் மிகப்பெரிய வெடிப்பின் புதிர்களை, சந்தேகங்களை விளக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பி வருகின்றனர். சில ஆராய்ச்சியாளர்க்ளுக்கு நிக்கல், சிலிகேட் மற்றும் மேக்னிடைட் போன்ற கனிம தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

உறுதி செய்யப்படவில்லை :

உறுதி செய்யப்படவில்லை :

இந்த கண்டுபிடிப்பு மூலம் இதுவொரு விண்கல்/ சிறுகோள் மோதல் வெடிப்பாக இருப்பது போல் தான் தோன்றுகிறது என்று சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

எல்லோரா கைலாசநாதர் கோவிலின் 'அதிநவீன' ரகசியங்கள்..!?


சஹாராவின் மர்மமான 'கண் உருவ' நிலவியல், உருவானது எப்படி..?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Tunguska: New study fails to explain what caused a blast equal to 185 Hiroshima Bomb. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot