இதெல்லாம் பார்த்தால் நம்ப மாட்டீர்கள். ஆனால், உண்மையை சொன்னால் நம்புவீர்கள்.!

இவைகளை நாம் அனுதினமும் பார்க்கின்றோம்.!

By Gizbot Bureau
|

ஒவ்வொரு நாளும் நாம் ஆயிரக்கணக்கான அடையாள சின்னங்களை (லோகோக்களை) பார்க்க நேரிடுகிறது. அவ் அவைகளில் சில லோகாக்களின் அர்த்தம் வெளிப்டையானதாக இருக்கும், சில லோகோக்கள் மிகவும் அர்த்தமற்ற ஒன்றாக இருக்கும். இந்த இரண்டு வகை லோகோக்களையும் தவிர்த்து மூன்றாவதாக ஒரு வகை உண்டு - அந்த லோகோக்கள் வலுவான உணர்வுகளை, கருத்துக்களை வெளிப்படுத்தும் அதே சமயம் நம்மால் மிக எளிதாக புரிந்துகொள்ள முடியாத உட்பொதிக்கப்பட்ட சுவாரசியமான அர்த்தங்களை தன்னுள கொண்டிருக்கும்.

பெரும்பாலான மக்களுக்கு ஒரு மர்மமாக இருக்கும், மிகவும் பிரபலமான சின்னங்கள் மற்றும் அவற்றின் நிஜமான அர்த்தம் போன்றவைகளைப்பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அல்லது சரியான முறையில் அவற்றை பார்கிறோமா அல்லது பயன்படுத்துகிறோமா என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா.? இந்த கேள்விக்ளுக்கான பதில்களை கட்டுரையின் முடிவில் நீங்களே அறிந்துகொள்வீர்கள்.

அம்பர்சாண்ட் சின்னம்.!

அம்பர்சாண்ட் சின்னம்.!

அம்பர்சாண்ட் (&) சின்னமானது லத்தீன் இணைப்பான "et" என்பதை குறிக்கிறது, இது ஆங்கில வார்த்தையான "and" என்பதற்கு சமம். இந்த சின்னம் முதன்முதலில் சிசரோவின் தனிப்பட்ட செயலாளரான டிரோ (பண்டைய ரோம்) காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எழுதும் வேகத்தை அதிகரிக்க டிரோ மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுருக்கங்கள் "துரோனியன் குறிப்புகள்" என்றும் அறியப்படுகிறது.

புறக்கணிக்கப்பட்டது.!

புறக்கணிக்கப்பட்டது.!

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் "&" சின்னம் மிகவும் பிரபலமாகியது. நீண்ட காலமாக, ஆங்கில எழுத்துக்களின் கடைசி வார்த்தையாக திகழ்ந்த "&" சின்னம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஆங்கில எழுத்துக்களின் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டது.

ஹார்ட்டின் சின்னம்.!

ஹார்ட்டின் சின்னம்.!

"இதயத்தில் தான் காதல் வாழ்கிறது" என்ற பிரபலமான நம்பிக்கை இருந்தபோதிலும், உண்மையான மனித இதயத்தின் வடிவமும் இந்த ஹார்ட்டின் குறியீட்டும் ஒத்துப்போகாது என்பதை நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும், இந்த சின்னம் எப்படி இதயத் தோற்றத்தோடு ஒற்றுப்போகிறது என்பதற்கு பல கோட்பாடுகள் உள்ளன.

காதல், விசுவாசம், பக்தி.!

காதல், விசுவாசம், பக்தி.!

ஒரு ஏரி நடுப்பகுதியில் ஸ்வான் பறவைகள் ஒன்றுக்கொண்டு சண்டை போடுகையில், அவற்றின் வடிவங்கள் இதய சின்னத்தை ஒத்த வடிவமாக மாறும். உலகின் பல கலாச்சாரங்களின் அடிப்படையில் பார்த்தல் இந்த பறவைகள் - காதல், விசுவாசம், பக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதன் வழியாக கூட ஹார்ட்டின் சின்னம் உருவாகி இருக்கலாம் என்கிறது ஒரு கோட்பாடு. மற்றொரு கருதுகோள் ஆனது இதயச் சின்னம் பெண்ணின் வடிவத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது என்று கூறுகிறது. இந்தக் கோட்பாட்டின் ஆதரவாளர்கள் பெண்ணின் இடுப்பு வடிவத்தை ஹார்ட்டின் சின்னமாக சித்தரிக்கிறார்கள்.

மண்பாண்ட சித்திரங்கள்.!

மண்பாண்ட சித்திரங்கள்.!

மறுகையில் உள்ளதொரு கோட்பாடானது, ஹார்ட்டின் சின்னம் ஒரு ஐவி இலை (Ivy Leaf) வடிவத்தின் பிரதிபலிப்பு என்கிறது. பண்டைய கிரேக்கர்களின், மதுபான உருவாக்கம் மற்றும் பேரார்வத்தின் கடவுளான டயோனியஸை சித்தரிக்கும் மண்பாண்ட சித்திரங்கள், ஐவி இலைகளை பெருமளவில் உள்ளடக்கியிருப்பதால் "ஹார்ட்டின்" சின்னம் இப்படியும் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மருத்துவ சின்னம்.!

மருத்துவ சின்னம்.!

சொன்னால் நம்ப மாட்டீர்கள். மருத்துவத்தின் சின்னம் (இறக்கைகள் மற்றும் இரண்டு பாம்புகள் கொண்ட சின்னம்) முதலில் தவறுதலாகவே ஏற்கப்பட்டது. புராணத்தின் படி, கிரேக்க கடவுளான ஹெர்மெஸ், காடிசியஸ் என்ற ஒரு மாயாஜால சக்திகள் கொண்ட ஊழியரைக் கொண்டிருந்தார்.

எந்வொரு பிரச்சனையை தடுக்கவும்.!

எந்வொரு பிரச்சனையை தடுக்கவும்.!

அவர் பார்ப்பதற்கு தற்போது நாம் காணும் நவீன மருத்துவ சின்னத்தை போலவே இருந்துள்ளார். எந்வொரு பிரச்சனையை தடுக்கவும், எதிரிகளை சமாதானப்படுத்தவும் காடிசியஸுக்கு சக்தி இருந்தது, ஆனால் அது மருந்துகள் கொண்டு நிகழ்த்தப்படவில்லை. ஆகமொத்தம் இந்த மருத்துவ சின்னம் உண்மையில் ஒரு மாயாஜாலங்களின் சின்னமாகும்.!

சமாதான சின்னம்.!

சமாதான சின்னம்.!

சமாதான சின்னம் (பசிபிக் என்றும் அழைக்கப்படுகிறது) அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிரான எதிர்ப்புக்களை தெரிவிக்கும் நோக்கத்தில் 1958-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குறியீடானது "N" மற்றும் "D" ஆகிய எழுத்துக்களுக்கான செமாஃபோர் சிக்னல்களின் ( semaphore signal) கலவையாகும்.

இரண்டும் ஒருசேர சமாதான சின்னத்தின் வடிவம்.!

இரண்டும் ஒருசேர சமாதான சின்னத்தின் வடிவம்.!

இந்த செமாஃபோர் எழுத்துகளில், "N" எழுத்தானது ஒரு தலைகீழான "V" வடிவத்தில் இரண்டு கொடிகளை வைத்திருப்பது என்ற அர்த்தத்தையும், "D" எழுத்தானது நேராகவும் அதற்கு நேரெதிராக கீழாகவும் கொடிகளை வைத்திருப்பது என்ற அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறது . இந்த இரண்டும் ஒருசேர சமாதான சின்னத்தின் வடிவம் உருவானது.

பவர் பொத்தான் சின்னம்.!

பவர் பொத்தான் சின்னம்.!

கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் பார்க்கும் பவர் பட்டனில் 'ஐ' (I) மற்றும் 'ஓ' (O) என்ற எழுத்துக்கள் தெரிகிறதா ? அந்த குறியீட்டின் உடைந்த வட்டமும் அதன் உள்ளே உள்ள வரியும் அதை 1 மற்றும் 0 என்பது போல் காட்டுவதை உங்களால் பார்க்க முடிகிறதா ?

இரும முறைமை.!

இரும முறைமை.!

சரி, பவர் பட்டனின் அர்த்தத்தை புரிந்துகொள்ள நாம் இப்போது இரண்டாம் உலக யுத்த காலத்திற்கு செல்ல வேண்டும் வாருங்கள். இரண்டாம் உலகப்போர் பொறியாளர்கள் பயன்படுத்திய பவர் பட்டன்களில் இரும முறைமையை (Binary System) பயன்படுத்தின, அங்கிருந்து ஆரம்பித்தது தான் இந்த குறியீடு.

வெவ்வேறு வடிவமைப்பில்.!

வெவ்வேறு வடிவமைப்பில்.!

இரும முறைமையில் 1 என்றால் "ஆன்" (ON) உடன் 0 என்றால் "ஆஃப்" (OFF) என்று அர்த்தம். இறுதியாக, 1973-ல் இந்த குறியீடு ஒரு ஆற்றல் பட்டன் சின்னமாக சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission) மூலம் தரநிலைப்படுத்தப்பட்டது. நீங்கள் இதே மாதிரியான அர்த்தம் கொண்ட ஆற்றல் பட்டனை வெவ்வேறு வடிவமைப்பில் கூட காணலாம்.

ப்ளூடூத் சின்னம்.!

ப்ளூடூத் சின்னம்.!

பத்தாம் நூற்றாண்டில் டென்மார்க் நாடானது, மன்னர் ஹரால்ட் ப்ளாட்டான்ட் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. டேனிஷ் பழங்குடியினரை ஒற்றைப் பேரரசாக இணைப்பதற்காக மிகவும் பிரபலமாக வரலாற்றில் அறியப்படும் இந்த மன்னர் ப்ளூபெரிஸ் பழங்களின் மீதான ஆர்வத்தின் அடிப்படையில் "ப்ளூடூத்" என்று அழைக்கப்பட்டார், அதற்கு தகுந்தபடி அவருடைய பற்கள் குறைந்தபட்சம் ஒரு நிரந்தரமான நீல நிறத்திலேயே இருந்துள்ளன.

ஸ்காண்டிநேவிய ரூனிக் எழுத்துக்களின் கலவை.!

ஸ்காண்டிநேவிய ரூனிக் எழுத்துக்களின் கலவை.!

பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து, ஒரு பிணையத்தில் பல சாதனங்களை ஒன்றிணைக்க வடிவமைக்கப்படும் நோக்கத்தில் ப்ளூடூத் தொழில்நுட்பம் உருவானது. அதை குறிக்கும் சின்னம் இரண்டு ஸ்காண்டிநேவிய ரூனிக் எழுத்துக்களின் கலவையாகும். அதாவது ஹாகால் என்பதின் "எச்" மற்றும் "ப்ஜர்க்கன்" என்பதின் "பி" என்ற இரண்டு லத்தீன் வார்த்தைகளின் இணைப்பில் இருந்து, அதாவது ஹரால்ட் ப்ளாட்டான்ட் பெயரின் இரண்டு ஆரம்ப எழுத்துக்களில் இருந்து உருவாக்கம் பெற்றுள்ளது. சுவாரசியம் என்னவென்றால் முதல் தலைமுறை ப்ளூடூத் சாதனம் நீல நிறத்திலேயே உருவாக்கம் பெற்றன, அதுவும் பற்கள் போன்ற வடிவத்தில்.!

Best Mobiles in India

English summary
Well-Known Symbols Whose Meaning We Knew Nothing About. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X