அண்டார்டிகா பனிக்கடலில் மர்ம துளைகள்! ஆய்வு தொடக்கம்..!

தற்போதும் மீண்டும் மீண்டும், ஒரு மிகப்பெரிய துளை தோன்றி கீழே உள்ள இருண்ட பகுதியையுய் பனிக்கட்டி நீரையும் அம்பலப்படுத்துகிறது.

|

ஒவ்வொரு குளிர்காலத்திலும் அண்டார்டிகாவின் வெட்டெல் கடலின் மீது உருவாகும் மிதக்கும் பனியிலான மேற்பரப்பு புரிந்துகொள்ள சாத்தியமில்லாத மர்மங்களுக்கு வழிவகுக்கின்றன. தற்போதும் மீண்டும் மீண்டும், ஒரு மிகப்பெரிய துளை தோன்றி கீழே உள்ள இருண்ட பகுதியையுய் பனிக்கட்டி நீரையும் அம்பலப்படுத்துகிறது.

ஏன் இந்த துளைகள் சில ஆண்டுகளில் தோன்றி பிற ஆண்டுகளில் தோன்றுவதில்லை?

ஏன் இந்த துளைகள் சில ஆண்டுகளில் தோன்றி பிற ஆண்டுகளில் தோன்றுவதில்லை?

ஏன் இந்த துளைகள் சில ஆண்டுகளில் தோன்றி பிற ஆண்டுகளில் தோன்றுவதில்லை? ஏன் அவை தோன்றுகின்றன ? அது எப்போதும் உண்மையில் தெளிவாகவே இல்லை. ஆனால் இப்போது ​​மிதக்கும் ரோபோக்கள், செயற்கைக்கோள் படங்கள், மற்றும் சிறிய தொப்பிகள் அணிந்த கடல்நாய் ஆகியவை இணைந்து, விஞ்ஞானிகள் அதை கண்டுபிடிக்க தொடங்கியுள்ளனர்.

பாலினியா

பாலினியா

பாலினியா என்று அழைக்கப்படும் இந்த துளைகள் நன்கு அறியப்பட்டவை மற்றும் பொதுவானவை . அண்டார்டிக் மிருகங்களுக்கான கடல்நாய்கள், திமிங்கலங்கள் மற்றும் பெங்குவின் போன்றவை பனிக்கடலின் கீழே நீந்தி, சுவாசிக்கவும் ஓய்வெடுக்கவும் மேற்பரப்பிற்கு வர இந்த துளைகள் உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

செயற்கைக்கோள் படங்களில் கண்டுபிடிக்கப்பட்டது

செயற்கைக்கோள் படங்களில் கண்டுபிடிக்கப்பட்டது

ஆனால் வெட்டெல் கடலில் உள்ள பாலினியா துளை சற்று விசித்திரமாக உள்ளது. இது முதன்முதலில் 1944 ஆம் ஆண்டில் மாட் ரைஸ் என்றழைக்கப்படும் ஒரு நீருக்கடியில் உள்ள மலை அருகே ஆரம்பகால செயற்கைக்கோள் படங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது நியூசிலாந்தின் அளவிற்கு மிக பிரம்மமாண்டமாக இருந்தது.

காற்றின் வெப்பநிலை

காற்றின் வெப்பநிலை

இப்பகுதியில் காற்றின் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே இருந்த போதும் 1975 மற்றும் 1976 ஆம் ஆண்டில் மீண்டும் தோன்றின் . 1976 க்குப் பின்னர், அது மீண்டும் தோன்றாமல் இருந்தது.

ஈதன் கேம்ப்பெல்

ஈதன் கேம்ப்பெல்

"பனிக்கடலில் இருந்த இந்த பெரிய துளை அரிதாக இருந்த ஒன்று, ஒருவேளை அந்த செயல்முறை அழிந்துவிட்டது என நாங்கள் நினைத்தோம். " என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கடல் ஆராய்ச்சியாளர் ஈதன் கேம்ப்பெல்.

2017 இல் மீண்டும் தோன்றியது

2017 இல் மீண்டும் தோன்றியது

ஆனால் 2016ல் மீண்டும் தோன்றிய அந்த துளை அப்போது மெய்னேவின் அளவிற்கு சிறியதாக இருந்தாலும் ஐயத்திற்கிடமற்றதாக இருந்தது. பின்னர் அது 2017 இல் மீண்டும் தோன்றியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஆய்வுமுடிவுகள், 2017ஆம் ஆண்டின் பாலினியாவை சூறாவளி நடவடிக்கைக்கு சம்மந்தப்படுத்தினர்; இருப்பினும் பல உலகளாவிய நிகழ்வுகள் போல இதுவும் ஒரு ஒற்றை காரணியால் நிகழ்ந்ததல்ல.

 பாலினியாவை பெறமுடியாது

பாலினியாவை பெறமுடியாது

"இந்த ஆய்வின் படி பாலினியா உண்மையில் பல காரணிகளால் ஏற்படுகிறது என்பதை இது காட்டுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இது போன்ற பல நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் நீங்கள் பெறாவிட்டால், பாலினியாவை பெறமுடியாது "என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கடலியல் ஆய்வாளர் ஸ்டீபன் ரைஸர்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

1970 களில் இருந்ததை விட நமது தொழில்நுட்பம் மிகச் சிறந்ததாக உள்ளது. காலநிலை விளைவுகள் இந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் எப்படி அது உலகின் மற்ற பகுதிகளை பாதிக்கக்கூடும் என்பதால் அன்டார்க்டிக் சில காலமாக ஆர்வமூட்டும் ஒரு பகுதியாக உள்ளது.

இக்குழு பல தசாப்தங்களுக்கான செயற்கைக்கோள் தரவு உட்பட, பல தரவுகளை கொண்டுள்ளன.இதுபோன்ற பல்வேறு தரவுகளை ஒருங்கிணைத்து, இந்த மர்மமான துளைகள் எதனால் ஏற்படுகிறது என்பதை அக்குழு கண்டறிந்துள்ளது.


"அண்மையில் ஏற்பட்ட பாலினியா துளைகள் பல்வேறு காரணிகள் இணைந்து உருவாக்கியுள்ளன. அவற்றில் ஒன்று அசாதாரண கடல் சூழ்நிலைகள்,மற்றொன்று மிக சக்தி வாய்ந்த சூறாவளி காற்று இந்த கடல் மீது சூழன்று மிகவும் கடுமையான புயல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தியது" என காம்ப்பெல் கூறினார்.

Best Mobiles in India

English summary
we-re-starting-to-figure-out-why-there-are-mysterious-holes-in-the-antarctic-sea-ice : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X