Just In
- 4 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 5 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 6 hrs ago
சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.! சொன
Don't Miss
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- News
"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Lifestyle
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏலியன்களை தேடும் நோக்கத்தில் விண்வெளிக்கு சமிக்ஞை! பதில் வருமா? ஆபத்து வருமா?
இந்த மாபெரும் அண்டத்தில் நாம் (மனித இனம்) தனியாக இல்லை என்று நம்புவர்களுக்கு ஆர்வத்தையும், என்னது ஏலியன்களா? உங்களுக்குலாம் வேற வேலை இல்லையா என்பவர்களுக்கு கடுப்பையும் கிளப்பும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆம், ஏலியன்களை தேடும் நோக்கத்தின் கீழ் விண்வெளிக்கு சமிக்ஞை ஒன்று அனுப்பட்டு உள்ளது.

பூமியில் இருந்து சுமார் 12 ஒளியாண்டுகள் தொலைவில்
பூமியில் இருந்து சுமார் 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்திற்கு தான் அந்த சமிக்ஞை அனுப்பட்டு உள்ளது. அனுப்பட்ட சமிக்ஞையில் என்ன "மெசேஜ்" உள்ளது? குறிப்பிட்ட கிரகத்திற்கு அந்த "மெசேஜை" அனுப்ப என்ன காரணம்? இதுதான் வேற்றுகிரகவாசிகளுடன் மனிதகுலத்திற்கு நிகழும் முதல் தொடர்பா? ஏலியன் இருக்கலாம் என்று நம்புவதற்கான ஆணித்தனமான காரணம் தான் என்ன? போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை ஆராய்வோம் வாருங்கள்.

வெவ்வேறு முறையின் கீழ் அனுப்பப்பட்டு
அனுப்பட்ட சமிக்ஞை ஆனது ஒரு நேரலை சமிக்ஞை ஆகும், அதில் மிக்ஸ்டேப் ஒன்றும் உள்ளதாம். வானொலி அலைகள் வழியாக அனுப்பட்ட அந்த மெசேஜ் ஆனது மொத்தம் 9 வெவ்வேறு முறையின் கீழ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த குறிப்பிட்ட முறை ஆனது எல்லா தகவல்களும் அதன் இலக்கை அடைகின்றன என்பதை கூடுதலாக உறுதி செய்ய உதவுமாம்.
உஷரா இருங்க: கூகுளில் மறைந்து உங்கள் பணத்தை அபேஸ் செய்யும் சைபர் கொள்ளையர்.!

அனுப்பட்ட மெசேஜில் என்ன இருக்கின்றது?
நம்பினால் நம்புங்கள் அதில் முப்பத்து மூன்று இசைத் துண்டுகள் உள்ளன.சரியாக 10 வினாடிகள் நீளம் கொண்ட அந்த இசைத் துண்டுகள் ஒவ்வொன்றும், மனிதர்கள்எவ்வாறு நேரத்தை கடைபிடிக்கிறார்கள், எப்போது ஒரு பதிலை கேட்பார்கள் என்பது பற்றிய டூட்டோரியல்களை உள்ளடக்கி வைத்துள்ளன.

அனுப்பட்ட கிரகத்தின் விவரங்கள்!
இந்த செய்தி ஆனது பூமி கிரகத்தின் அருகிலுள்ள "எக்ஸோபிளான்ட்களில்" ஒன்றான ஜி.ஜே. 273 பி என்ற பெயர் கொண்ட ஒரு கிரகத்திற்கு அனுப்பட்டு உள்ளது. ஜி.ஜே 273 பி கிரகத்தை வானியலாளர்கள் "சூப்பர் எர்த்" என்றும் அழைக்கின்றனர். பூமியை விட சற்று மிகப்பெரிய கிரகமான ஜி.ஜே 273 பி ஆனது வாழ்வாதாரம் மிக்க நட்சத்திர மண்டலத்திற்குள் உள்ளது. இதனாலேயே ஜி.ஜே 273 பி ஆனது ஏலியன்கள் (அன்னிய ஜீவராசிகள்) வாழலாம் என்று நம்பப்படும் மிகசிறந்த கிரகங்களுள் ஒன்றாக திகழ்கிறது.
3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.!
இது ஏலியன்களுக்கான முதல் மெசேஜா?
கிடையாது. ஏலியன் தேடலின் கீழ் மனித இனம் பல "வேலைகளை" செய்து உள்ளது. இருந்தாலும் இந்த மெசேஜ் ஆனது மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். இது குறிப்பிட்ட நேரத்தில் நேரடி பதிலுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் வானொலி செய்தி ஆகும். ஆகமொத்தம் இந்த மெசேஜிற்கு பதில் வரும் பட்சத்தில், இத்தனை ஆண்டுகளாக நாம் தேடும் அறிவார்ந்த வாழ்க்கை ஆனது வெறும் 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் இருக்கிறது என்பது உறுதி செய்யப்படும்.

சரி, பதிலுக்கு பதிலாக ஏலியன்களே வந்தால் என்னவாகும்?
அதாவது வேற்று கிரக வாசிகள் பூமியை ஆக்கிரமிக்க முடிவு செய்தால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கான பதிலை நிபுணர்களிடம் கேட்டபோது, அவர்கள் ஒரு திகில் பட பாணியிலான பதிலை கொடுத்து உள்ளனர்.
ஒருவேளை அஏலியன்கள் பூமியின் மீது படையெடுத்தால், முதலில் நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் கிராமப்புறங்களுக்கு கூட்டம் கூட்டமாக வெளியேற்றப் படுவார்கள். அதனை தொடர்ந்து எமர்ஜென்சி யுத்தம் நடத்துவதற்கான கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெறும், பின்னர் யுத்தம் நடக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"யுத்தம் உறுதி செய்யப்படுமே ஒழிய துல்லியமாக என்ன நடக்கும் என்பதை சரியாகச் சொல்வது கடினம் ஏனெனில் அப்படி ஒன்று இதுவரை நடந்ததே இல்லை - அது ஒருபோதும் நிகழவும் கூடாது." என்றும் பதில் அளித்து உள்ளனர்.

ஏலியன் இருக்கலாம் என்று நம்புவதற்கான ஆணித்தனமான காரணம் தான் என்ன?
முதலில் ஏலியன்கள் இருக்கிறதா? இருந்தால் தானே படையெடுப்பு, போர் மற்றது எல்லாம்? என்று கேட்பவர்களுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதையும் கொடுக்க முடியாது. ஆனால் அதே அறிவியலின் கீழ் அண்டத்தை பற்றிய விளக்கம் ஒன்றை வேண்டுமானால் கூறலாம். பிரபஞ்சத்தில் சுமார் 10 ^ 22 நட்சத்திரங்கள் உள்ளன. இது பூமியில் உள்ள ஒவ்வொரு மணலும் சுமார் 10,000 நட்சத்திரங்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த நட்சத்திரங்களில் சுமார் 5 சதவீதம் நட்சத்திரங்கள் ஆனது நமது சூரிய மண்டலத்தில் உள்ள சூரியனைப் போன்றது என்று சொல்லலாம்.
ரூ.14,000-விலையில் ஹுவாய் அறிமுகப்படுத்தும் மீடியாபேட் டி5 சாதனம்.!

அன்னிய வாழ்வின் நிகழ்தகவு!
அந்த கணக்கின் படி பார்த்தால், மொத்தம் 500 பில்லியன் பில்லியன் சூரியன்கள் இருக்கலாம் (ஆம், பில்லியன் பில்லியன் தான், அது ஒன்றும் எழுத்துப்பிழை அல்ல.) அந்த சூரியன்களில் 5 இல் 1 க்கு பூமி போன்ற கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இந்த எண்களைப் பொறுத்தவரை, பல விஞ்ஞானிகள் பூமிக்கு அப்பால் காணப்பட வேண்டிய வாழ்க்கை இருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆகவே, பிரபஞ்சத்தில் அன்னிய வாழ்வின் நிகழ்தகவு மிக அதிகமாக இருக்கிறது. ஒருவேளை அப்படி இல்லையென்றால், நாம் வாழும் இந்த பூமி ஆனது ஒரு அறிவியல் அதிசயம் என்று அர்த்தம்!
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090