ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!

|

ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்ற மர்மம் நீண்டகாலமாகவே நீடித்து வருகிறது. ஏலியன்ஸ் இருப்பது உண்மை அவர்களுக்கு மனிதகுலம் குறித்து தெரியாமல் இருப்பது நல்லது என்ற விவாதங்களும் ஏலியன்ஸ் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற விவாதங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஏலியன்ஸ்கள் இருப்பது உண்மை

ஏலியன்ஸ்கள் இருப்பது உண்மை

வேற்றுகிரகவாசிகள், ஏலியன்ஸ்கள் இருப்பது உண்மை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல தகவல்கள் வெளிவந்தாலும். அதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றே கூறலாம்.

விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட்

அதன்படி சமீபத்தில் ஏலியன்ஸ் இருப்பது உண்மைதான் எனவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு இதுகுறித்து தெரியும் எனவும் இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் தெரிவித்தார்.

கேலடிக் கூட்டமைப்பு ஒப்பந்தம்

கேலடிக் கூட்டமைப்பு ஒப்பந்தம்

அமெரிக்க அரசாங்கத்திற்கும் வேற்றுகிரக வாசிகளின் கேலடிக் கூட்டமைப்பு இடையிலான ஒரு ஒப்பந்தம் குறித்து விவரித்தார். அதோடு இஸ்ரேலிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆதாரங்களை வெளியிட அமெரிக்கா முயற்சித்தாலும் மனிதர்கள் அதற்கு தயாராக இல்லை எனவும் தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி வேற்றுகிரகவாசிகள் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விண்மீன் பொருளின் அசாதாரண குணாதிசயங்கள்

விண்மீன் பொருளின் அசாதாரண குணாதிசயங்கள்

இந்தநிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியலாளரான ஏவி லோயப் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் வெளியான தகவல் குறித்து பார்க்கையில் 2017 ஆம் ஆண்டு நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாக சென்ற ஒரு விண்மீன் பொருளின் அசாதாரண குணாதிசயங்கள் மற்றும் விளக்கம் குறித்து விவரித்தார்.

வானியல் வல்லுநர் ஏவி லோயப்

வானியல் வல்லுநர் ஏவி லோயப்

வானியல் வல்லுநர் ஏவி லோயப் ஹார்வர்டில் நீண்ட காலமாக வானியல் தலைவராக இருந்தார். அவர் எழுதிய புத்தகத்தில் Oumuamua என்று பெயரிடப்பட்டுள்ள பொருள் குறித்தும், ஏலியன் பூமிக்கு வந்துள்ளதா என்பது குறித்தும் விளக்கியிருக்கிறார்.

வேகமாக நகர்ந்த பொருள்

வேகமாக நகர்ந்த பொருள்

58 வயதான ஏவி லோயப்., அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வானியலாளர்கள் ஒரு பொருள் வேகமாக நகர்வதை கவனித்தார்கள். அது மற்றொரு நட்சத்திரத்தில் இருந்து மட்டுமே வந்திருக்க கூடும் ஒரு சாதாரண பாறை போல் தெரியவில்லை.

ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: ஏர்டெல் பயனர்களை அசைக்கமுடியாமல் திணறும் ஜியோ!ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: ஏர்டெல் பயனர்களை அசைக்கமுடியாமல் திணறும் ஜியோ!

வேகமாக பயணித்து விலகியது

அந்த பொருள் சூரியனை சுற்றி ஸ்லிங்ஷாட் செய்தபிறகு, அது ஒரு மர்ம சக்தியாால் செலுத்தப்பட்டிருக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு பாதையில் இறுந்து வேகமாக பயணித்து விலகியதாக அவர் கூறினார். இது பிரகாசமாகவும், மங்கலாகவும் வழக்கத்திற்கு மாறாக ஒளிர்ந்தது.

துல்லியமான விளக்கங்கள் இல்லை

இது விண்மீன் வெளியேற்றும் வாயு மற்றும் குப்பைகள் என்றால் அதற்கு தெளிவான சான்றுகள் இல்லை. இது ஒரு பிரகாசமான உலோகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறலாம். அப்போது என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு, வானியலாளர்கள் புதிய கோட்பாடுகளை கொண்டு வரே வேண்டியிருந்தது என குறிப்பிட்டார்.

ஓமுவாமுவாவின் குறிப்பிட்ட பண்புகள்

ஓமுவாமுவாவின் குறிப்பிட்ட பண்புகள்

ஓமுவாமுவாவின் குறிப்பிட்ட பண்புகள் விளக்குவதற்கான சிந்தனைகள் முன்பு பார்த்திராக வகையில் இருந்தது என லோப் தெரிவித்தார். மனிதர்கள் மட்டும் சிறந்தவர்கள், தனித்துவமானவர்கள் இல்லை எனவும் வேறு பல உயிரினங்களும் இருக்கின்றன எனவும் அவற்றை நாம் கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.

செயற்கைகோள்களால் புகைப்படம் எடுக்க முடியவில்லை

செயற்கைகோள்களால் புகைப்படம் எடுக்க முடியவில்லை

ஓமுவாமுவா 2017 ஆம் ஆண்டில் சூரிய குடும்பத்தில் நுழைந்தபோது அதை சரியாக செயற்கைகோள்களால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அது சூரியகுடும்பத்தில் இருந்து வெளியேறும் போதுதான் அதன் இருப்பு குறித்து அறிய முடிந்தது.

விண்வெளியில் இருந்து ஏவப்பட்ட பயணக்கப்பல்

அது தட்டையான மற்றும் ஒரு கேக்கை போன்று வட்டமாக இருந்தது என்று குறிப்பிட்ட ரோஸர் அது விண்வெளியில் இருந்து ஏவப்பட்ட ஒரு பயணகப்பல் போல் இருந்தது என கூறினார். அதேபோல் அந்த பொருள் நகர்த்தப்பட்ட விதம் அதன் வித்தியாசத்தை காட்டுகிறது. பேராசிரியர் லோய்பின் கருத்துக்களுக்கு அவரது சக வானியலாளர்கள் முரண்படுகின்றனர்.

Source: news18.com

Best Mobiles in India

English summary
We are Nothing Special- Aliens Vessel Already Visiting Earth: Top Astronomer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X