நிலவில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்காக பொருட்கள் இன்னமும் இருக்கின்றனவா?
இனிமேலும் இது உள்ளுணர்வாக மட்டுமே இருக்காது என கூறுகின்றன ஆய்வு முடிவுகள்.
நாம் வசிக்கும் இந்த பூமி நமக்கு சொந்தமானது, நாம் அனைவரும் பூமித்தாயின் பிள்ளைகள் என நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், உங்கள் நம்பிக்கையை சுக்குநூறாக்கும் வகையில் அமைந்துள்ளது அறிவியலாளர்கள் முன்வைக்கும் இந்த புதிய கோட்பாடுகள்.

தற்போது பூமியில் உள்ள உயிரினங்கள் யாவும் மற்றொரு கிரகத்தில் இருந்து வந்தவை என்றும், அக்கிரகம் பூமியுடன் மோதியதன் விளைவாக தற்போது அது நிலவாக மாறியுள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் நமது கிரகத்தில் உள்ள வல்லுநர்கள். ஆக அதன் அர்த்தம் எதைக் குறிக்கிறது? நீங்கள், நான் மற்றும் பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஏலியன்களா? ஆம் மற்றும் இல்லை.

சுமார் 4.4பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
சுமார் 4.4பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய குடும்பம் உருவாகிக்கொண்டிருந்த சமயத்தில், செவ்வாய் போன்றதொரு கிரகம் நமது கிரகத்துடன் மோதியதற்கு பின்னரே உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான இன்றியமையாத பொருட்கள் பூமியில் உருவாகின என்ற ஆதாரத்துடன், ரைஸ் பல்கலைகழகத்தின் மாணவரும் புவியியல் வல்லுநருமான தமன்வீர் கிரீவால் சமர்பித்த இந்த ஆச்சரியமளிக்கும் புதிய ஆய்வுமுடிவுகள் கடந்த வாரம் சயின்ஸ் அட்வான்ஸ்-ல் வெளியானது.

கம்ப்யூட்டர் சிமுலேசன்
இனிமேலும் இது உள்ளுணர்வாக மட்டுமே இருக்காது என கூறுகின்றன ஆய்வு முடிவுகள். ஏனெனில் கம்ப்யூட்டர் சிமுலேசன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வக பரிசோதனைகளில், பூமி மற்றும் அதன் அருகாமை கிரகம் மோதியதற்கு பின்பாக ஏற்பட்ட சிதைவுகள், பூமியல் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான சேர்மங்களை உருவாக்கியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்
செவ்வாய் போன்ற கிரகம் பூமியுடன் மோதி இங்கு உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை உருவாக்கின என்றால், தற்போது அந்த கிரகம் எங்கே? ஏன் நம்மால் தற்போது அதை காண முடியவில்லை? போன்ற ஆச்சரியமூட்டும் கேள்விகள் உங்களுக்குள் எழுகிறதா? அந்த கிரகத்தின் சிதறிய பாகங்கள் ஒன்றிணைந்து நிலவாக உருவாகியுள்ளது. ஆம், நம் பூமியை சுற்றி வரும் அதே நிலவு தான்.

பொருட்கள்
அப்படியென்றால் நிலவிலும் மனிதர்கள் உயிர்வாழ்வதற்காக அதே பொருட்கள் இன்னமும் இருக்கின்றனவா? எப்போது மனிதர்கள் மீண்டும் தங்களது சொந்த கிரகமான நிலவிற்கு திரும்பலாம் என்பதை வெகுவிரைவில் நாம் கண்டறிவோம் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications