30கிராம் எடை சேட்லைட்:தமிழக அரசுபள்ளி மாணவர்கள் சாதனை: குவியும் பாராட்டு!

30 கிராம் எடையில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைகோளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகம் செயற்கைகோள் விவசாயத்திலும் செ

|

30 கிராம் எடையில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைகோளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

30கிராம் எடை சேட்லைட்:தமிழக அரசுபள்ளிமாணவர்கள்சாதனை:குவியும் பாராட்டு!

தமிழகம் செயற்கைகோள் விவசாயத்திலும் செழித்து விளங்குகின்றது. இஸ்ரோவிலும் தனி ஆளுமையாக தமிழர்களே தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் பதவிகளையும் வகித்து வருகின்றனர்.

தமிழர்கள் விஞ்ஞானத்திற்கு முன்பும் வானியல் சாஸ்திரத்திலும் சிறந்து விளங்கியுள்ளார் என்பது தற்போது, தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செய்த செயற்கைகோளால் இருந்தே புரிந்து கொள்ள முடிகின்றது.

வாட்டர் சாட் செய்கைகோள்:

வாட்டர் சாட் செய்கைகோள்:

கரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் (வாட்டர் சாட் 30) என்ற செயற்கைகோளை வடிவமைத்து அசத்தியுள்ளார். இதை விஞ்ஞானிகளும் சாதனையாக பார்க்கின்றனர்.

இந்நிலையில், சந்திராயன் 1 செயற்கைக்கோளின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியிருக்கிறார். அதோடு, அந்த செயற்கைகோள் ராட்சத பலூன் மூலம் 15 கிலோமீட்டர் உயரத்துக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

ஸ்பேஸ் கிட் நிறுவனம் செய்தி:

ஸ்பேஸ் கிட் நிறுவனம் செய்தி:

கரூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோளை தயாரித்து விண்ணுக்க அனுப்ப இருப்பதாக ஸ்பேஸ் கிட் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்கள் தயாரித்த செயற்கை கோளை சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை இதுகுறித்து அந்த குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். அவர் மாணவர்களை வியந்து பாராட்டினார். இதை செய்தியாளர்களிடம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

விண்ணிற்கு பாய்கின்றது:

விண்ணிற்கு பாய்கின்றது:

இந்த மாணவர்கள் தயாரித்துள்ள சிறிய செயற்கோள் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணிற்கு செலுத்தப்பட இருக்கின்றது. இந்த குட்டி செயற்கைகோள் ராட்சத பலூன் உதவியுடன் விண்ணிற்கு செலுத்தப்படுகின்றது. தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைகோள் தயாரித்து இருப்பது பெரும் சாதனையாகவும் பார்ப்படுகின்றது.

உலகின் மூத்த மொழியே தமிழ் எனக் கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.!உலகின் மூத்த மொழியே தமிழ் எனக் கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.!

செயற்கைகோள் செய்யும் ஆய்வு:

செயற்கைகோள் செய்யும் ஆய்வு:

நீர்பற்றாக்குறை , நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, விவசாய நிலங்களின் மண் வளம் பாதிப்பு, நீர், ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கும் பரவியிருக்கும், வெட்ட வெட்ட மீண்டும் வளரும் ப்ரோசோபிஸ் ஜுலிபுளோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சீமைக்கருவேலமரம் குறித்து ஆய்வை செய்கின்றது.

 ஆசியர் வழிகாட்டுதலுடன் சேட்லைட்:

ஆசியர் வழிகாட்டுதலுடன் சேட்லைட்:

9-ம் வகுப்பு பயிலும் நவீன்குமார், சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் (8-ம் வகுப்பு) ஆகிய மாணவர்கள், தங்களின் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலுடன் 3.5 செ.மீ கன சதுரம் கொண்ட கலனில் 30 கிராம் செயற்கைகோளை வடிவமைத்து, அதற்கு நீர் செயற்கைகோள் - 30, (வாட்டர் சாட் - 30 , ws_30) என பெயர் வைத்துள்ளனர்.

ஜியோவுக்கு போட்டியாக மலிவு விலையில் புதிய பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்.!ஜியோவுக்கு போட்டியாக மலிவு விலையில் புதிய பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்.!

மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்:

மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அறிவியல் பலகை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இஸ்ரோ துணைக் கோள் மைய முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை,
சிறப்புரையாற்றினார்.

அதில் கூறியிருப்பதாவது: `அறிவியல் கருத்துகளை, தமிழ் மொழியில் மக்களிடமும், மாணவர்களிடமும் எடுத்துச் செல்வதன் நோக்கம்தான் அறிவியல் பலகை திட்டம். இதன் மூலம் நிலத்திலும், நிலவிலும், விண்வெளியிலும் அறிவியலை விதைப்போம். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழகத்தைச் சார்ந்த 12 அரசுப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பான 30 கிராம் அளவிலான செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளோம்' என்று பாராட்டிப் பேசினார்.

மாணவர்களுக்கு சிக்னல் பயிற்சி:

மாணவர்களுக்கு சிக்னல் பயிற்சி:

அரசுப் பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைகோளை (30 கிராம்) ராட்சத பலூன் உதவியுடன் சுமார் 15 கி.மீ உயரத்துக்கு விண்ணில் செலுத்தவும், செயற்கைகோள் செயல்பாட்டையும், அது அனுப்பும் படம் மற்றும் சமிக்ஞைகளை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

செயற்கைகோளில் தென்பட்ட ஏலியன் ஸ்பேஸ்ஷிப்-புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!செயற்கைகோளில் தென்பட்ட ஏலியன் ஸ்பேஸ்ஷிப்-புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பாடு:

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பாடு:

இந்தப் பயிற்சியின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் நிஜமான விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதற்கான உத்வேகம் கிடைக்கும்' என பாராட்டி வாழ்த்தினார். அதோடு, வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர்கள் தயாரித்த ws-30 செயற்கைகோளில் கையொப்பமிட்டார்.

Best Mobiles in India

English summary
water saad 30 discovery of karur government school students chandrayaan 1 smayilsamy annadurai:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X