Home
Scitech

செய்தி வாசிப்போர் வேலைக்கு ஆப்பு வைக்கும் மற்றொரு அழகான ரோபோட்.! இவள் கன்னம் சரவணா ஸ்டோர்ஸ் கிண்ணம்!

ஸ்மார்ட்போன் கேமரா முதல் பல தொழிற்சாலைகளில் கூட ஏ.ஐ ரோபோட்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பெண் ஏ.ஐ செய்தியாளர் மாதிரியை தற்பொழுது உருவாகியுள்ளது

தற்போதைய காலகட்டத்தில் பல துறைகளில் ஏ.ஐ- 'செயற்கை நுண்ணறி' ரோபோட்களின் செயல்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செய்தி வாசிப்போர் வேலைக்கு ஆப்பு வைக்கும் அழகான பெண் ரோபோட்.!

ஸ்மார்ட்போன் கேமரா முதல் பல தொழிற்சாலைகளில் கூட ஏ.ஐ ரோபோட்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பெண் ஏ.ஐ செய்தியாளர் மாதிரியை தற்பொழுது உருவாகியுள்ளது.

புதிய பெண் ஏ.ஐ  செய்தியாளர்

புதிய பெண் ஏ.ஐ செய்தியாளர்

சீனா, தொழில்நுட்ப துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு, பல புதிய தொழில்நுட்பத்தை உலகிற்கு வழங்கி வருகிறது. அதே போல் தற்பொழுது சீனாவின் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சின்ஹூவா தொலைக்காட்சி நிறுவனம் புதிய பெண் செய்தியாளரை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பெண் செய்தியாளர் முழுதும் ஏ.ஐ சக்தியினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜ மனிதர்களைப் போல் ஏ.ஐ ரோபோட்

நிஜ மனிதர்களைப் போல் ஏ.ஐ ரோபோட்

இந்த ஏ.ஐ செய்தியாளர் ரோபோட் பார்ப்பதற்கு அப்படியே அழகிய பெண் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.ஐ செய்தியாளர் நிஜ மனிதர்களைப் போல் முகபாவங்களுடன் அழகாய் செய்திகளை வாசிக்கிறது. தற்பொழுது சின்ஹூவா தொலைக்காட்சி நிறுவனம் இந்த ஏ.ஐ ரோபோட் செய்தியாளர் செய்திகளை வழங்கும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற கியூ மெங்

புகழ்பெற்ற கியூ மெங்

அழகான தோற்றத்தில், பிங்க் நிற உடை அணிந்து வெட்கப்பட்டு கொண்டே செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது. இந்த பெண் ரோபோட்டிற்கு ஜின் ஜியோமெங் என்று பெயரிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கியூ மெங் என்னும் செய்தியாளர் மாதிரியாகக் கொண்டு ஜின் ஜியோமெங் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண் ஏ.ஐ செய்தியாளர் ரோபோட்கள்

இரண்டு ஆண் ஏ.ஐ செய்தியாளர் ரோபோட்கள்

இதேபோல் கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், சின்ஹூவா தொலைக்காட்சி நிறுவனம் இரண்டு ஆண் ஏ.ஐ செய்தியாளர் ரோபோட்களை அறிமுகம் செய்திருந்தது. தற்பொழுது ஜின் ஜியோமெங் உடன் சேர்த்து 3 ஏ.ஐ ரோபோட்கள் சீனா செய்திகளைத் தொகுத்து வழங்கிவருகிறது.

 ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

இந்த ரோபோட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஜின் ஜியோமெங்கிற்கு தனியாய் ரசிகர் மன்றமும் திறக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Watch World's First Female Robotic News Anchor On Chinese Channel : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X