Home
Scitech

லேசர் ஆயுதத்தை பரிசோதித்த அமெரிக்க கடற்படை : அதிர்ச்சி வீடியோ!

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவானது அமெரிக்க கடற்படையினால் பதிவுசெய்யப்பட்டது ஆகும்.

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவானது அமெரிக்க கடற்படையினால் பதிவுசெய்யப்பட்டது ஆகும். அமெரிக்க கடற்படை பெர்சியன் வளைகுடாவில் உள்ள கப்பலில் இருந்து லேசர் ஆயுத அமைப்பின் (Laser Weapon System- LaWS) செயல்பாட்டை பரிசோதிப்பது இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. 30 கிலோவாட் திறன் கொண்ட இந்த அமைப்பானது யுஎஸ்எஸ் போன்ஸ் போக்குவரத்து கப்பலில் பொருத்தப்பட்டிருந்தது.

லேசர் ஆயுதத்தை பரிசோதித்த அமெரிக்க கடற்படை : அதிர்ச்சி வீடியோ!

போரின் போது கடலில் லேசர் ஆயுதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மதிப்பீடு செய்வதற்காக இந்த செயல்பாட்டு ஒத்திகை நடைபெற்றுள்ளது. அமெரிக்க இராணுவம் ஏற்கனவே விமானப்படையால் ரத்து செய்யப்பட்ட ஏர்போர்ன் லேசர் போன்ற இரசாயன லேசர்களை பரிசோதித்தது வந்தது. எனினும் அந்த லேசர்கள் சற்று சாத்தியமற்றதாகவும் விலையுயர்ந்ததாகவும்இருப்பதாக நிரூபிக்கப்பட்டது.

லேசர் ஆயுத அமைப்பு

லேசர் ஆயுத அமைப்பு

லேசர் ஆயுத அமைப்பு (LaWS) போன்ற புதிய லேசர்கள் சிறியதாகவும் மின்சாரம் தேவைப்படுபவையாகவும் உள்ளன. மற்றவற்றிலிருந்து இவற்றை பிரித்து காண்பிப்பது ஒருமுறை தாக்குவதற்கான செலவு ஆகும்; இது ஒரு தாக்குவதற்கு 1 டாலர் செலவாகும்! எனினும் இதிலுள்ள ஒரே ஒரு பிரச்சனை, இலக்கை அழிக்க போதுமான ஆற்றலை சேகரிப்பதாகும்.

 துல்லியமாக தாக்கமுடியும்

துல்லியமாக தாக்கமுடியும்

ஆறு வணிகரீதியிலான வெல்டிங் லேசர்களை ஒன்றிணைத்து, அவற்றின் லேசர்கதிர்களை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கை தாக்கி அந்த பிரச்சனை லேசர் ஆயுத அமைப்பில் சரிசெய்யப்பட்டது. இந்த வீடியோவின் விளக்கத்தில் 'MG 15 Phalanx Close-In ஆயுத அமைப்பு அல்லது பிற இலக்கு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட ரேடார் பாதைகளை வைத்து, லேசர் ஆயுத அமைப்பு இலக்குகளை துல்லியமாக தாக்கமுடியும்' என.குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பற்படை

கப்பற்படை

கப்பற்படையில் பயன்படுத்தப்படவுள்ள இந்த லேசர் ஆயுதங்களைப் பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க கடற்படை 300 மில்லியன் டாலர் நிதிக்காக காத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க கடற்படையில் பயன்படுத்தப்படுவதற்காக என்ன வகையான லேசர் அமைப்புகளை உருவாக்கி வருகிறது என அறிய அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

ஒத்திகையை வீடியோவாக வெளியிட்டுள்ளது

இருப்பினும் நம் உற்சாகத்தை குறையாமல் வைத்திருப்பதற்காக அமெரிக்க கடற்படை, லேசர் ஆயத அமைப்பின் செயல்பாட்டு ஒத்திகையை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நீங்களும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள் மற்றும் இந்த அற்புதமான லேசர் அமைப்பை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Best Mobiles in India

English summary
Watch US Navy Test It’s New Laser Weapon System In This Video : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X