நிமிடத்தில் விமானமாக மாறிய ஸ்போர்ட்ஸ் கார் வீடியோ.. மிரளவைத்த ஏர்கார் தொழில்நுட்பம்..

|

உலகளவில் வணிக ரீதியாக விற்பனைக்கு கிடைக்கக்கூடிய முதல் பறக்கும் காருக்காக உலகம் காத்திருக்கிறது. அதைவிட உலகின் முதல் பறக்கும் காரை விற்பனை செய்யும் முதல் நிறுவனம் என்ற தலைப்புக்காகப் பல நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக வேலை செய்துவருகிறது.

க்ளைன் விஷன் நிறுவனத்தின் பறக்கும் கார்

க்ளைன் விஷன் நிறுவனத்தின் பறக்கும் கார்

அப்படியான வரிசையில், ​​ஸ்லோவாக்கிய நிறுவனமான க்ளைன் விஷன் (KleinVision) முன்னோக்கி பந்தயத்தில் தனது பறக்கும் காரின் சிறகுகளை வானத்தில் விரித்திருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் தனது ஏர்காரின் (AirCar) முதல் சோதனை விமானத்தை நிறைவுசெய்துள்ளது. சோதனை ஓட்டத்தின் வீடியோவையும் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த ஏர்கார் 2021ம் ஆண்டில் விற்பனைக்கு தயாராகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏர்காரின் ஐந்தாவது ப்ரோடோடைப்

ஏர்காரின் ஐந்தாவது ப்ரோடோடைப்

ஏர்காரின் ஐந்தாவது ப்ரோடோடைப் மாடலின் சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த காரின் விமான சிறகுகள் காரின் உட்புறத்திலிருந்து விரியக்கூடியது. இந்த வாகனம், காரில் இருந்து ஒரு விமானமாக மாறுவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. முதல் சோதனை ஓட்டத்தில் வெற்றிகரமாக 1,500 அடி உயரத்தில் காற்றில் உயரப் பறந்துள்ளது. இந்த வீடியோ பதிவை நீங்களே பாருங்கள், விஷயம் தெளிவாகப் புரியும்.

மாணவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்.! இனி ஆணியடிக்கமால் பொருள்களை தொங்கவிடலாம்.!மாணவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்.! இனி ஆணியடிக்கமால் பொருள்களை தொங்கவிடலாம்.!

1,000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் ஏர்கார்

1,000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் ஏர்கார்

முதற்கட்ட சோதனை வெற்றிபெற்றதை தொடர்ந்து, நிறுவனம் மேலும் சில சோதனைகளைத் தொடரும் என்று தெரிவித்துள்ளது. ஏர்கார் ஒரு விமானமாக 620 மைல், அதாவது சுமார் 1,000 கிலோமீட்டர் பரப்பளவு பயணிக்கக்கூடியது. இந்த ஏர்கார் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 1.6l எஞ்சினை அதன் இதயமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.

நீட்டி சுருங்கும் வால் மற்றும் மடங்கக்கூடிய இறக்கைகள்

நீட்டி சுருங்கும் வால் மற்றும் மடங்கக்கூடிய இறக்கைகள்

ஏர்கார் பல செயல்பாட்டு மோடுகளை கொண்டுள்ளது என்று க்ளைன்விஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மடக்கக்கூடிய இறக்கைகள், நீட்டி சுருங்கும் வால், உறுதியான பாதுகாப்பு கண்ணாடிகள் மற்றும் பாராசூட் அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதன் ஏரோடைனமிக் ஃபியூஸ்லேஜ் பயணிகளுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது.

ஏர்காரின் டேக்ஆஃப் பாருங்க..

ஏர்காரில் 2 இருக்கைகள் மற்றும் 4 இருக்கைகள் கொண்ட வெர்ஷன்கள் உள்ளது. விமான மோடின் போது சிறந்த லிப்ட் பண்பையும் இந்த ஏர்கார் பங்களிக்கிறது. புறப்படுவதற்குக் குறைந்தபட்சம் 984 அடி நீளம் டேக்ஆஃப் ட்ராக் தேவை என்று நிறுவனம் கூறியுள்ளது. ஆட்டோமொபைல் பயன்முறையில் இருக்கும்போது, ​​காரின் வால் மிகவும் சிறிய அளவில் சுருங்கிவிடுகிறது.

நீருக்குள் பயணிக்கும் ஏர்கார் வெர்ஷனா?

நீருக்குள் பயணிக்கும் ஏர்கார் வெர்ஷனா?

நிறுவனம் நீருக்குள் பயணிக்கும் ஏர்கார் வெர்ஷனையும் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏர்காரின் முதல் சோதனை ஓட்டம் ஸ்லோவாக்கியாவில் உள்ள பியஸ்டனி விமான நிலையத்தில் நிறைவடைந்தது, வர்த்தக விலை கட்டமைப்பு எவ்வாறு செயல்படும் என்பதற்கான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த பறக்கும் விமான கார் அடுத்த ஆண்டு ஏதேனும் ஒரு கட்டத்தில் சாலைகள் மற்றும் வானங்களில் ஒரு யதார்த்தமாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Watch Sports Car Turns Into Airplane In Minutes, Aircar Completes Maiden Test Flight : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X