ட்ரிபிள் ராக்கெட் லேண்டிங்-ஐ முயற்சிக்கும் ஸ்பேஸ் எக்ஸ்..

வியாழக்கிழமை செலுத்தப்படவுள்ள ஃபான்கான் ஹெவி இராக்கெட் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது இராக்கெட் ஆகும்.

|

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது முதல் வணிகரீதியிலான பால்கான் ஹெலி ப்ளைட் மிஷனின் போது உலகின் முதல் வெற்றிகரமான ட்ரிபிள் ராக்கெட் லேண்டிங்-ஐ பரிசோதிக்க முயற்சிக்கவுள்ளது மற்றும் அதை நாம் ஆன்லைன் வழியாக நேரிடையாக காண முடியும்.

ட்ரிபிள் ராக்கெட் லேண்டிங்-ஐ முயற்சிக்கும் ஸ்பேஸ் எக்ஸ்..

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின்னர், ஃபால்கான் ஹெவி ராக்கெட்டின் இரு பக்க பூஸ்டர்கள் மற்றும் மத்திய கோர் பகுதி ட்ரிபிள் லேட்டிங்கிற்காக பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஸ்டர்கள்

பூஸ்டர்கள்

"பூஸ்டர்கள் பிரிந்த பின்னர், ஃபால்கானீ ஹெவியின் இரு பூஸ்டர்களும் புளோரிடாவில் உள்ள கேப் கனாவேரல் விமானப்படை நிலையத்தின் ஸ்பேஸ் எக்ஸ் லேண்டிங் மண்டலங்கள் 1 மற்றும் 2 (LZ-1 மற்றும் LZ-2) இல் தரையிறங்க முயற்சிக்கும்" என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. "ஃபால்கான் ஹெவி சென்டர் கோர் பகுதியானது அட்லாண்டிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள 'Of Course I Still Love You' என்ற டரோன்ஷிப்-ல் தரையிறங்க முயற்சிக்கும்" எனவும் ஸ்பேஸ்எக்ஸ் கூறியுள்ளது.

ஃபான்கான் ஹெவி

ஃபான்கான் ஹெவி

வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ஃபான்கான் ஹெவி இராக்கெட் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது இராக்கெட் ஆகும். முதலாவது பரிசோதனை இராக்கெட் 2018 பிப்ரவரி மாதம் வெற்றிகரமான பரிசோதிக்கப்பட்ட நிலையில், அதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலன்மஸ்க்கு சொந்தமான ரெட் டெஸ்லா ரோட்ஸ்டர் விண்ணில் செலுத்தப்பட்டது மற்றும் அதன் முதல்-நிலை மூன்று பூஸ்டர்களில் தரையிறங்கலில் தோல்வியடைந்தது. மூன்றில் இரு இன்ஜின்களின் எரிபொருள் தீர்ந்ததால், சென்டர் கோர் அதன் ட்ரோன் கப்பல் தரையிறங்கமுடியவில்லை. (அப்போது எலன் மஸ்க் இந்த பிரச்சனைக்கான தீர்வு மிகவும் தெளிவானது என்று கூறினார்)

சவூதி அரேபிய சேட்டிலைட்

சவூதி அரேபிய சேட்டிலைட்

இம்முறை ஃபால்கான் ஹெவி 13,200எல்பி (6000கிலோ) என்ற மிகப்பெரிய எடையை சுமந்து செல்வதால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ட்ரிபிள் லேண்டிங்கிற்காக அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துள்ளது. இது சுமந்துசெல்லவுள்ள அராப்சாட் -6A சவூதி அரேபிய சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமான அராப்சாட்டிற்கு சொந்தமானது.

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா

திறன்வாய்ந்த தொலைத்தொடர்பு சேட்டிலைடான அராப்சாட் 6A, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொலைக்காட்சி, வானொலி, இணைய மற்றும் மொபைல் தகவல்தொடர்பு சேவைகளை வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Watch SpaceX Attempt a Triple Rocket Landing During Falcon Heavy Launch Today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X