உடலுக்குள் மருந்துகளைச் சரியாக கொண்டு சேர்க்கும் "கேட்டர்பில்லர்" ரோபோ: இனிமேல் இப்படி தான்.!

விஞ்ஞானிகள் மருத்துவ வசதிக்காக ஒரு புத்தம் புதிய சிறிய வகை கேட்டர்பில்லர் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

|

விஞ்ஞானிகள் மருத்துவ வசதிக்காக ஒரு புத்தம் புதிய சிறிய வகை கேட்டர்பில்லர் ரோபோவை உருவாக்கியுள்ளனர். ஆய்வக சோதனையின்படி, இந்த ரோபாட் தன்னை விட 100 மடங்கு அதிக எடையைச் சுமக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் மருந்துகளைச் சரியான இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இந்த கேட்டர்பில்லர் ரோபோவுக்கு கேட்டர்பில்லர் புழு போன்ற சிறிய மென்மையான கால்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறிய கால்களைப் பயன்படுத்தி உடலில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஊர்ந்து சென்று மருந்துகளைச் சரியான இடத்தில் சேர்த்துவிடுகின்றது.

ஹாங்காங் இன் சிட்டி யுனிவர்சிட்டி

ஹாங்காங் இன் சிட்டி யுனிவர்சிட்டி

ஹாங்காங் இன் சிட்டி யுனிவர்சிட்டி (சிட்டி யூ-CityU) ஆராய்ச்சியாளர்களால் இந்த கேட்டர்பில்லர் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேட்டர்பில்லர் ரோபோ இரத்தம் மற்றும் சளி போன்ற உடல் திரவங்களில், முழுமையாக மூழ்கி அல்லது உடலில் உள்ள மேற்பரப்புகளுக்குள் திறம்பட நகர்த்த மருந்துகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

 நூற்றுக்கணக்கான கால்கள்

நூற்றுக்கணக்கான கால்கள்

ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுடைய நூற்றுக்கணக்கான கூர்மையான கால்களைக் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்கள் கொண்ட இந்த கேட்டர்பில்லர் ரோபோவை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான விலங்குகளின் கால் கட்டமைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.

பலதரப்பட்ட ஆய்வு

பலதரப்பட்ட ஆய்வு

இதில் முக்கியமாக 2 கால்கள் கொண்ட விலங்கு, 4 கால்கள் கொண்ட விலங்கு, 8 கால் பூச்சி மற்றும் கேட்டர்பில்லர் புழு போன்ற அணைத்து உயிரினத்தின் கால் கட்டமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். விலங்குகளின் கால் செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக கால் நீளம் மற்றும் கால்களுக்கு இடையில் உள்ள இடைவெளி என பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான கேட்டர்பில்லர் கால்களை இந்த ரோபோவிற்காக உருவாக்கியுள்ளனர்.

ரோபோவின் அளவு

ரோபோவின் அளவு

இந்த ரோபோவின் உடல் தடிமன் சுமார் 0.15 மிமீ அளவு மட்டுமே கொண்டுள்ளது மற்றும் ரோபோவின் கால்களின் நீளம் சுமார் 0.65 மிமீ அளவுடன் கால்களுக்கு இடையே உள்ள இடைவெளி சுமார் 0.6 மிமீ அளவு கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. கேட்டர்பில்லர் ரோபோவின் கால்களுக்கு இடையே உள்ள அளவு வெறும் 1:1 என்ற விகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உதவி பேராசிரியர் ஷேன் யஜிங்

உதவி பேராசிரியர் ஷேன் யஜிங்

இந்த ரோபோ உடலின் ஈரம் மற்றும் உலர்ந்த சூழலிலும் எளிதில் நகரக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் உடல் அமைப்பு சிலிக்கான் மற்றும் காந்த துகள்களால் உருவாக்கப்பட்டிருப்பதாக , ஷேன் யஜிங் உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த ரோபோவில் பயன்படுத்தப்பட்டுள்ள காந்த துகள்களைத் தொலைதூர மின்காந்த சக்தியை பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கேட்டர்பில்லர் ரோபோ

கேட்டர்பில்லர் ரோபோ

உடலில் உள் செல்லும் பொழுது ஏற்படும் தடைகளை தானாகவே பூர்த்தி செய்து நகர்ந்து செல்லும் திறன் கொண்டது இந்த ரோபோ என்றும் கூறப்படுகிறது. உடலின் உள் செல்லும் வழிகள் மற்றும் வளைவுகளில் தடைகள் ஏற்பட்டால், அதன் உடலை வளைத்து மற்றும் கால்களை உயர்த்தி தன் எடையை விட அதிகமான எடை உடையத் தடைகளை தூக்கி நகர்ந்து செல்ல வழியை அமைத்து தடைகளை தாண்டி செல்கிறது என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இந்த கேட்டர்பில்லர் ரோபோக்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுமென்றும், இதன் உதவியுடன் மருந்துகளை மனித உடலில் சரியான இடத்திற்குக் கொண்டு சேர்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Watch: Robot caterpillar deliver drugs inside human body : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X