வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் ரோபோ: இது புதுசா இருக்கே.!

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இந்த ரோபோ மாடல் இயங்குகிறது, மேலும் இந்த ரோபோமாடலை ரஷ்யாவில் 200 நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

|

இப்போது வரும் சில தொழில்நுட்பம் அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனால் பல தொழில்நுட்பங்களில் பாதுகாப்பு வசதி மிகவும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் ரோபோட்டை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இதைத் தொடர்ந்து ரஷ்யா விஞ்ஞானிகளுக்கு பல்வேறு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது, மேலும் இந்த ரோபோட்டை 2017-ம் ஆண்டு நேர்முகத் தேர்வு செய்வதற்கு மட்டுமே கண்டுபிடித்துள்ளர் விஞ்ஞானிகள். குறிப்பாக விஞ்ஞானிகள் இந்த ரோபோட் மாடலுக்கு வேரா எனும் பெயர் வைத்துள்ளனர்.

இன்டர்வியூ :

இன்டர்வியூ :

வேரா எனப்படும் இந்த ரோபோ தினசரி 1500 பேர் வரை இன்டர்வியூ செய்கிறதாம், குறிப்பாக அதிநவீன தொழில்நுட் அம்சங்களை கொண்டு இந்த ரோபோ மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இந்த ரோபோ மாடல் இயங்குகிறது.

 தகுதியானவர்கள்:

தகுதியானவர்கள்:

ப்ரோக்ராம் ( program) செய்யப்பட்டபடி நேர்முகத் தேர்வுகளை சரியாக நடத்தி வந்த வேரா ரோபோட், தற்சமயம் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அதுவே போன் மூலம் அழைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 200 நிறுவனங்கள்:

200 நிறுவனங்கள்:

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இந்த ரோபோ மாடல் இயங்குகிறது, மேலும் இந்த ரோபோ மாடலை ரஷ்யாவில் 200 நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக தினசரி 5300 இன்டர்வியூக்கள் எடுக்கும் இந்த ரோபோட்கள்
95 சதவிகிதம் மிகச் சரியான மற்றம் தகுதியான ஆட்களை தேர்வு செய்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரியா, தவறா:

சரியா, தவறா:

இந்த வேரா ரோபோட் மாடல் நேர்முகத் தேர்வுகளில் கேள்விகள் கேட்டு பதில் சரியா அல்லது தவறா என்பதை வைத்து ஆட்களை வேலைக்கு தேர்ந்தேடுக்கிறது. மேலும் விஞ்ஞானிகள் தெரிவித்தது என்னவென்றால் இந்த ரோபோட் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்கள் அனைவரும் மிகத் திறமையானவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

குரல்:

குரல்:

வேரா ரோபோட் மாடல் பொறுத்தவரை ஆண் மற்றும் பெண் குரல்களிலும் பேசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் கணனி குரலில் இந்த ரோபோட் பேசாது என்து தகவல் வெளிவந்துள்ளது.

சிறப்பம்சம்:

சிறப்பம்சம்:

இந்த வேரா ரோபோட் சிறப்பம்சம் பொறுத்தவரை என்ன வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறினால் மட்டும் போதும், அதுவே கணினியைப் பயன்படுத்தி இணையம் மூலம் கேள்விகளை தயார் செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Want To Work For Ikea Your Next Interview Could Be Conducted By A Russian Robot; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X