Home
Scitech

நட்சத்திர மண்டலத்தில் நுழைந்த வோயாகர் 2 விண்கலம்!

விண்வெளியில் சூரியனின் ஆதிக்கம் இருக்கும் ஒரு பகுதியாக இது இருப்பதால், இந்த இரு விண்கலன்களும் இன்னும் சூரிய குடும்பத்தின் உள்ளே இருக்கின்றன என கூறலாம்.

நாசாவின் வோயாகர் 2விண்கலம் வெற்றிகரமாக இன்டர்ஸ்டெல்லார் ஸ்பேஸ் எனும் நட்சத்திர மண்டலத்தில் நுழைந்ததாக நாசா அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நட்சத்திர மண்டலத்தில் நுழைந்த வோயாகர் 2 விண்கலம்!

2012 ஆகஸ்ட்-ல் வோயாகர் 1 விண்கலத்திற்கு பிறகு, நட்சத்திர மண்டலத்தில் நுழையும் மனிதர்கள் தயாரித்த இரண்டாவது செயல்பாட்டில் உள்ள விண்கலம் என வரலாறு படைத்துள்ளது வோயாகர் 2. "முதலாவதாக அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும், இரண்டாவதாக நட்சத்திர மண்டலத்தை ஆராயும் திறன் கொண்ட சமூகமாக நாம் மாறி வருவதாக உணர்வதாகவும்" கூறுகிறார் மெசிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவரும், வோயாகர் திட்டத்தில் பங்கெடுத்த விஞ்ஞானியுமான ஜஸ்டின் காஸ்பர்.

சூரியனிலிருந்து வெளிவரும் துகள்

சூரியனிலிருந்து வெளிவரும் துகள்

வோயாகர்2ன் புதிய இன்டர்ஸ்டெல்லார் நிலை என்பது, சூரியனிலிருந்து வெளிவரும் துகள்களை விண்கலத்தைச் சுற்றி குறைக்கும், ப்ளாஸ்மா அறிவியல் சோதனையின்(பிஎல்எஸ்) தரவுகளை பொறுத்தே அமையும். வோயாகர்2 புறப்பட்ட நவம்பர் 5 அன்று சூரிய புயலின் பிஎல்எஸ் அளவீடுகள் பூஜ்ஜயமாக இருந்தது. முன்னோடியை போலவே இந்த விண்கலமும் ஹீலியோபேஸ் எனும் எல்லைக்கோட்டை கடந்து நட்சத்திர மண்டலத்தில் நுழையும் என திட்டக்குழு நம்பிக்கையுடன் இருக்கிறது.

ஹீலியோஸ்பியரிக்

ஹீலியோஸ்பியரிக்

"நவம்பர் 5 அன்று தான் காஸ்மிக் கதிர்களின் அடர்த்தி திடீரென அதிகரித்தது மற்றும் அதே நாளில் ஹீலியோஸ்பியரிக் துகள்களின் அடர்த்தி குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்தது. மேலும் அன்று காந்தபுலமும் அதிகரித்து. அந்த புள்ளியில் தான் ப்ளாஸ்மா கருவி சூரிய புயலை அளவீடுவதை நிறுத்தியது. எனவே அந்த தொடர்பை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்"என்கிறார் வோயாகர் திட்ட விஞ்ஞானி எட் ஸ்டோன்.

 விண்வெளியில் சூரியனின் ஆதிக்கம்

விண்வெளியில் சூரியனின் ஆதிக்கம்

ஹீலியோஸ்பேஸ் பகுதியில் தான் சூரியபுயலின் வெளிப்புற விரிவாக்கம், உள்வரும் இன்டர்ஸ்டெல்லார் துகள்களை சந்திக்கும். விண்வெளியில் சூரியனின் ஆதிக்கம் இருக்கும் ஒரு பகுதியாக இது இருப்பதால், இந்த இரு விண்கலன்களும் இன்னும் சூரிய குடும்பத்தின் உள்ளே இருக்கின்றன என கூறலாம். முன்னதாக, வோயாகர் 2விண்கலம் 2007ல் டெர்மினேசன் ஷோக் எனும் பகுதியை கடந்தது. அங்கு இன்டர்ஸ்டெல்லார் துகள்கள் மற்றும் கதிர்வீச்சை எதிர்கொண்டதால் சூரியபுயலின் தாக்கம் வெகுவாக குறைந்தது.

நாசா

நாசா

நாசா இந்த இரட்டை வோயாகர் விண்கலத்தை வெளி கிரகங்களை ஆராய 1977ல் விண்ணில் செலுத்தியது. அவையிரண்டும் வியாழன் மற்றும் சனியை ஆய்வு செய்த பிறகு, வோயாகர்2 பாதையை மாற்றி யுரேனஸ் மற்றும் நெப்டியூனிற்கும் பயணம் செய்து, பின்னர் இரண்டும் சூரிய மண்டலத்தில் விளிம்பை நோக்கி பயணத்தை துவங்கின. ஆகஸ்ட் 2012ல், வோயாகர்1 விண்கலமானது ஹீலியோஸ்பேஸை அடைந்து இன்டர்ஸ்டெல்லார் ஸ்பேஸில் நுழையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம் என்ற சாதனையை படைத்தது. ஆனால் இந்த இரண்டு மிஷன்களும், சூரிய குடும்பத்தை உண்மையான எல்லையைப் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளன.

 வோயாகர் 2

வோயாகர் 2

வோயாகர் 2 விண்கலம் சுமார் 120 வானியல் அலகுகள் பயணித்துள்ளது. ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவு.அதாவது 18 பில்லியன் கிலோமீட்டர் அல்லது ஒளி பயணிக்க ஆகும் நேரம் 16 மணிநேரம்.இது தொலைவாக இருந்தாலும், வோயாகர்1 சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறியதை விட ஒரு வானியல் அலகு அருகில் உள்ளது. நட்சத்திர மண்டலத்தில் நுழைந்த வோயாகர் 2 விண்கலமானது அதன் இணை விண்கலத்தை காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட பகுதியில் இன்டர்ஸ்டெல்லார் விண்வெளியில் நுழைந்துள்ளது. ஹீலியோஸ்பியரின் வட ஹீலியோஸ்பியரை கடந்து, தென் ஹீலியோஸ்பியரை நோக்கி பயணிக்கிறது. இங்கு காந்தப்புலம் வலுவில்லாமல் இருப்பதால், ஹீலியோஹேத்தின் வடிவத்தை பாதிக்கலாம் என தெரிகிறது.

சோலார்

சோலார்

இந்த இரண்டு விண்கலன்களிலும் காந்தப்புலத்தை அளவிடும் மேக்னெடோமீட்டர் மற்றும் சோலார் மற்றும் காஸ்மிக் ரே பார்டிகல் டிடெக்டர் இருக்கிறது. எனினும், நட்சத்திர மண்டலத்தில் நுழைந்த வோயாகர் 2 ல் மட்டுமே செயல்படும் ப்ளாஸ்மா கருவி இருப்பதால், ஆராயப்படாத பகுதியின் வெப்பநிலை, அடர்த்தி, திசைவேகம் போன்றவற்றை நமக்கு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Voyager 2 Spacecraft Enters Interstellar Space: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X