3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெர்குரி - ஒரு நெருப்புடா..!

Written By:

புதன் கிரகத்தின் புவியியல் பரிணாம வளர்ச்சி சார்ந்த ஒரு புதிய ஆய்வில் இருந்து, மெர்குரி கிரகத்தில் பெரிய அளவிலான எரிமலை நடவடிக்கைகள் இருந்துள்ளது என்பதும் அது பெரும்பாலும் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டதென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெர்குரி - ஒரு நெருப்புடா..!

சுமார் 40 ஆண்டு கால எரிமலையாக்கத்தை அணைக்கும் புவிமயமான குளிர்ச்சி மற்றும் சுருங்குதலின் கணிப்புகளை பரிசோதனை செய்ததில் இருந்து இந்த புதிய தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதன் கிரகத்தின் எரிமலை மற்றும் டெக்டானிக் பண்புகளை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் மற்றும், புவியியல் தோற்றம் மற்றும் அதன் பரிணாமம் பற்றிய ஒரு சீரான கதை நம்மிடம் உள்ளது அத்துடன் சேர்த்து கிரகங்கள் குளிர்ச்சி அடைந்து சுருங்கும் பொது என்ன நடக்கும் என்பதை பற்றிய ஒரு புதிய பார்வையையம் பெற முடியும்.

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெர்குரி - ஒரு நெருப்புடா..!

எரிமலை இரண்டு வகைப்படும் ஒன்று பீறிடும் எரிமலைகள் மற்றொன்று வெடிக்கும் எரிமலைகள். பீறிடும் எரிமலைகளின் வைப்பு மூலம் ஒரு கிரகத்தின் புவியியல் வரலாற்றை ஆய்வாளர்களால் தீர்மானிக்க முடியும்.

உதாரணமாக, பீறிடும் எரிமலையாக்கத்தின் வீனஸ் கிரகத்தில் ஒரு சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது, செவ்வாய் கிரகத்தில் ஒரு சில நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அவரை இருந்தது, பூமியிலோ இன்றுவரை இருக்கிறது.

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெர்குரி - ஒரு நெருப்புடா..!

இந்த ஆய்வில் இருந்து புதனின் எரிமலையாக்கம் நிறுத்தப்பட்டு சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பதும் வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியில் காணப்படாத அளவிலான முற்றிலும் மாறுபட்ட வயதை புதன் எரிமலைகள் கொண்டுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது புதன், பூமி, செவ்வாய் மற்றும் வீனஸ் கிரகங்களுக்கு இடையே பெரிய புவியியல் வித்தியாசம் உள்ளது.

மேலும் படிக்க :

கெப்ளர் மிஷன் : 4000+ எக்ஸோபிளானட்ஸ், அதில் 20 எர்த்-லைக் பிளானட்ஸ்..!
தீர்ப்பு வந்ததும் முகமூடியை கழட்டிய சீனா, நேரடியாக மிரட்டுகிறது..!
ஆண்ட்ராய்டு போன்களுக்கான டாப் 10 போட்டோ எடிட்டர் ஆப்ஸ்!

English summary
Volcanic activity on Mercury stopped 3.5 bn years ago. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot