துப்பாக்கியை தூக்கி கொண்டு ஓடும் சீனாவின் ரோபோட் நாய் - வைரல் வீடியோ!

|

ட்விட்டர் மற்றும் ரெடிட் போன்ற தளங்களில், தற்போது ஒரு வீடியோ மிகவும் வைரல் ஆக ஷேர் செய்யப்பட்டு வருகிறது!

அதை ஒரு வைரல் வீடியோ என்று சொல்வதை விட உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கான ஒரு எச்சரிக்கை என்றே கூறலாம்!

அச்சுறுத்தும் காரியம்!

அச்சுறுத்தும் காரியம்!

குறிப்பிட்ட வீடியோவில் பாஸ்டன் டைனமிக்ஸின் (Boston Dynamics) ஸ்பாட் (Spot) ரோபோட்டை போலவே தோற்றமளிக்கும் ஒரு ரோபோட்டை நாம் காண முடிகிறது.

அது சீனா உருவாக்கிய ஒரு ரோபோட் நாய் ஆகும். பார்க்க ஒரு நாயை போலவே இருக்கும் அந்த நான்கு கால் ரோபோட் ஆனது அச்சுறுத்தும் காரியம் ஒன்றை செய்கிறது!

கிரகணங்களால் கிரகணங்களால் "கொலை" செய்யப்பட்ட மங்கள்யான்.. மறைக்கப்படும் உண்மை!

அப்படி என்ன செய்தது?

அப்படி என்ன செய்தது?

வெளியான வீடியோவில், சீனாவின் ரோபோட் நாய் ஆனது, தன் முதுகில் பெரிய துப்பாக்கி ஒன்றை தூக்கி கொண்டு ஓடுவதை தெளிவாக பார்க்க முடிகிறது.

அதைவிட திகிலான விஷயம் என்னவென்றால், அந்த ரோபோட் நாய் ஆனது, ஒரு பெரிய ட்ரோன் வழியாக சுமந்து வரப்பட்டு, தரையில் இறக்கி விடப்படுகிறது!

இந்த வீடியோவை வெளியிட்டது யார்?

இந்த வீடியோவை வெளியிட்டது யார்?

அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட சமூக ஊடக தளங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ, சீனாவின் சமூக ஊடகத்தளமான வெய்போவில் (Weibo), சீனா கெஸ்ட்ரல் டிஃபென்ஸ் என்கிற பக்கத்தில் தான் முதன் முதலில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அந்த வீடியோவோடு சேர்த்து, ப்ளட்-விங் (Blood-Wing) என்கிற ஆங்கில வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

உயிர்களை பலி வாங்கும்!

உயிர்களை பலி வாங்கும்!

"பிளட்-விங்" என்கிற வார்த்தை சரியாக எதை குறிக்கிறது என்பது பற்றி போதுமான தகவல் இல்லை. ஆனால் இதுவொரு ஆயுதம் என்பதிலும், இது போரின் போது உயிர்களை பலி வாங்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்!

ஏனென்றால், வீடியோவில் நீங்கள் பார்க்கும் ட்ரோனின் பெயர் ரெட் விங் (Red Wing) ஆகும். இது எதிரிகளின் எல்லைகளுக்கு அப்பால் பயணித்து, தான் சுமந்து செல்லும் ரோபோட் நாயை இறக்கி விடுவதன் மூலம் "வியக்கத்தக்க தாக்குதலை" நடத்த முடியும்.

எதிரியின் கூரையின் மீது இறக்கி விடப்படும்!

எதிரியின் கூரையின் மீது இறக்கி விடப்படும்!

குறிப்பிட்ட வீடியோவின் தலைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, இன்னும் சில திகிலான விவரங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

அந்த மொழிப்பெயர்ப்பானது "வானிலிருந்து இறங்கும் ரோபோட் நாய்கள் ஆனது வான்வழித் தாக்குதலை நடத்த முடியும்.

ரெட் விங் வழியாக தரை இறக்கப்படும் ரோபோட் நாய்கள் ஆனது எதிரியின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள பலவீனமான இடங்களில் நேரடியாக நுழைக்கப்படலாம் அல்லது எதிரியின் கூரையின் மீது இறக்கி விடப்படலாம்" என்கிறது.

சீனாவிற்கு கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!சீனாவிற்கு கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

சீரியஸ் மேட்டர் ஆன காமெடி பீஸ்!

சீரியஸ் மேட்டர் ஆன காமெடி பீஸ்!

சீனாவின் ரோபோக்கள் பேசுபொருளாவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் கூட சீனாவின் ரோபோட்கள் வைரல் ஆகி உள்ளன.

அவைகள் எல்லாம் மிகவும் நகைச்சுவையான, ஆபத்துகள் இல்லாத ரோபோட்களாக இருந்தன. ஆனால் தற்போது வைரல் ஆகிவரும் இந்த "சீன ரோபோட் நாய்" அப்படிப்பட்ட ஒரு ரோபோட் அல்ல!

"புதிய" பனிப்போர் பதட்டங்கள்!

புதிய பனிப்போர் தொடர்பான பதட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போக.. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருபுறம் இருக்க, மறுபக்கம் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் இருக்க.. இது போன்ற கொடிய ரோபோக்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

பதிலடி கொடுக்குமா அமெரிக்கா?

பதிலடி கொடுக்குமா அமெரிக்கா?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்.. சீனாவிடம் இருப்பதை விட, மிகவும் பயங்கரமான ரோபோக்கள் அமெரிக்காவிடம் உள்ளன.

ஏனென்றால், அமெரிக்காவிடம் பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) உள்ளது. பாஸ்டன் டைனமிக்ஸ் என்பது அமெரிக்காவின் சாத்தியமான ரோபோட் எழுச்சியுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய ஒரு பெயர் ஆகும்.

அறியாதோர்களுக்கு பாஸ்டன் டைனமிக்ஸ் என்பது 1992-இல் இருந்து செயல்பட்டு வரும் ஒரு அமெரிக்க பொறியியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் வடிவமைப்பு நிறுவனமாகும்!

Photo Courtesy: Weibo, Wikipedia, bostondynamics.com

Best Mobiles in India

English summary
Viral Video Shows China Robot Dog Which Transported Via Drone Carrying A Gun and Run

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X