இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய நீர்மூழ்கிகப்பல் 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!

|

இரண்டாம் உலகப் போரின் போது தொலைந்துபோன யுஎஸ்எஸ் க்ரூனியான் நீர்மூழ்கிகப்பலின் முன்பகுதியை, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பின்னர் அலாஸ்காவின் கடற்கரையோரத்தில் கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லாஸ்ட் 52 ப்ராஜெக்ட்

லாஸ்ட் 52 ப்ராஜெக்ட்

லாஸ்ட் 52 ப்ராஜெக்ட்-ஐ சேர்ந்த ஒரு குழு, முன்னோடி ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அலூட்டியன் தீவுகளுக்கு அருகே நீரில் 2,700 அடி (820 மீ) ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் இப்பகுதியை கண்டறிந்தது.

 கப்பலின் கேப்டன்

கப்பலின் கேப்டன்

மூழ்கும்போது 70 பயணிகளை கொண்டிருந்த இந்த கேடோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் கடைசியாக 1942 ஜூலை மாதம் தொடர்புகொள்ளப்பட்டது.

2006 ஆம் ஆண்டில், கப்பலின் கேப்டன் லெப்டினன்ட் கமாண்டர் மேனெர்ட் 'ஜிம்' அபேல் - புரூஸ்-ன் மகன்களான பிராட் மற்றும் ஜான் இருவரும் தொலைந்துபோன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடத் தொடங்கி, பின்னர் ஒரு வருடம் கழித்து அதைக் கண்டுபிடித்தனர்.

காஷ்மீருக்குள் கால் பதிக்கும் முதல் நபர் அம்பானி! ஜியோவின் மாஸ்டர் பிளான் என்ன?<br />காஷ்மீருக்குள் கால் பதிக்கும் முதல் நபர் அம்பானி! ஜியோவின் மாஸ்டர் பிளான் என்ன?

ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தனர்

ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தனர்

கடந்த ஆண்டு மீண்டும் அதே இடத்திற்கு பயணித்த அக்குழு, 3 டி மாடல்களை உருவாக்க ஃபோட்டோகிராமெட்ரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விபத்தில் சேதமடைந்த கப்பலை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தனர்.

 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்

பின்னர் இந்த மாத தொடக்கத்தில், இடிபாடுகளின் முக்கிய இடத்திலிருந்து கால் மைல் தொலைவில் கப்பலின் முன்பகுதியையும் கண்டுபிடித்தனர்.


தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் அந்த கப்பலுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்காக இந்த புனரமைப்புகளை ஆராய்வதற்கு நேரத்தை செலவிட முடியும் என்று நம்பப்படுகிறது.

அம்பானி அறிவிப்பிக்குபின் : ஆடிப்போகும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!அம்பானி அறிவிப்பிக்குபின் : ஆடிப்போகும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!

 டிம் டெய்லர் கூறுகையில்..

டிம் டெய்லர் கூறுகையில்..

இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன கப்பல்களைத் தேடும் லாஸ்ட் 52 குழுவின் உறுப்பினரான டிம் டெய்லர் கூறுகையில் 'இது இதுவரை கடந்த கால வீடியோ அல்லது இன்னும் கற்பனை என்பதை தாண்டி, வரலாற்றுரீதியான நீருக்கடியில் உள்ள கண்டுபிடிப்புகளை பதிவு செய்வதற்கான எதிர்காலமாகும்.'

லாஸ்ட் 52 வலைத்தளத்தின்படி, இந்த சாதனை 'இரண்டாம் உலகப்போரின் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக இதுவரை நிகழ்த்தப்பட்டதிலேயே மிக விரிவான புகைப்படக் கணக்கெடுப்பு' ஆகும்.


ஏப்ரல் 1942 இல் யுஎஸ்எஸ் க்ரூனியன் (எஸ்எஸ் -216) இல் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் அபேல் , ஒரு மாதத்திற்குப் பிறகு கரீபியன் கடலில் யு.எஸ்.ஏ.டி ஜாக்-ல் உயிர் தப்பிய 16 பேரை மீட்டார்.

அலாஸ்காவில் உள்ள டச்சு...

அலாஸ்காவில் உள்ள டச்சு...

ஜூலை 30 இல் அதன் முதல் போர் ரோந்து காலத்தில்,இந்த நீர்மூழ்கி கப்பலானது ஜப்பானியர்களால் தாக்கப்பட்ட பின்னர் அலாஸ்காவில் உள்ள டச்சு துறைமுகத்திற்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு அந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை மற்றும் அது எவ்வாறு மூழ்கியது என்றும் தெரியவில்லை.

டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது?இப்போதே முயற்சி செய்யுங்கள்.!டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது?இப்போதே முயற்சி செய்யுங்கள்.!

 52 நீர்மூழ்கிக் கப்பல்கள் தொலைந்துபோயுள்ளன

52 நீர்மூழ்கிக் கப்பல்கள் தொலைந்துபோயுள்ளன

2007 ஆம் ஆண்டில் இக்குழு முதன்முதலில் இந்த கப்பலைக் கண்டுபிடித்தபோது, ​​ஜான் அபேல் அந்த இடத்திற்கு மேலே ஒரு நினைவு விழாவை நிகழ்த்தினார்.மேலும் அவர் அப்பகுதியிலிருந்து கடல்நீரை சேகரித்து பின்னர் அதை குப்பிகளில் அடைத்து உறவினர்களுக்கு அனுப்பினார்.


யு.எஸ். கடற்படையின் கூற்றுப்படி, இரண்டாம் உலகப்போரின் போது 52 நீர்மூழ்கிக் கப்பல்கள் தொலைந்துபோயுள்ளன மற்றும் சுமார் 3,500 மாலுமிகள் அந்த கப்பல்களில் இருந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
USS Grunion's Bow Discovered In Alaska Coast 80 Years After Submarine Sink During WWII : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X