Home
Scitech

மிஷன் சக்தி-விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது: அமெரிக்கா.!

குறிப்பாக உலகின் 4 வது நாடாக இந்தியா இந்தச் சாதனையை நாம் செய்துள்ளது பெருமைக்குரியாதாகப் பார்க்கப்படுகிறது. மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், விண்வெளியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை
படைத்துள்ளதாக தெரிவித்தார்.

விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது: அமெரிக்கா.!

குறிப்பாக உலகின் 4 வது நாடாக இந்தியா இந்தச் சாதனையை நாம் செய்துள்ளது பெருமைக்குரியாதாகப் பார்க்கப்படுகிறது. மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்றார் பிரதமர் மோடி.

இந்திய விஞ்ஞானிகள்

இந்திய விஞ்ஞானிகள்

மேலும் 2019-மார்ச் 27-ம் தேதி ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவுவில் இருந்து செயற்கைக்கோள் ஒன்றைத் தாக்கிய திட்டத்தின் பெயரே மிஷன் சக்தி. இந்தியாவின் மிகக் குறுகிய சுற்று வட்டப் பாதையில் பயன்படுத்தாமல் உள்ள ஒரு செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தன.

ஏவுகணை உதவியுடன் தாக்கி அழித்துள்ளன

ஏவுகணை உதவியுடன் தாக்கி அழித்துள்ளன

பின்பு இது ஒரு ஆன்டி சாட்டிலைட் தாக்குதல் சோதனை முயற்சி, முன்னதாக இது போன்ற தேவை இல்லாமல் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் பாதுகாப்பு கருதி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே ஏவுகணை உதவியுடன் தாக்கி அழித்துள்ளன.

நீண்ட காலம் பயன்படுத்தமால் இருந்த ஒரு செயற்கைக்கோள்

நீண்ட காலம் பயன்படுத்தமால் இருந்த ஒரு செயற்கைக்கோள்

இந்தியாவில் நீண்ட காலம் பயன்படுத்தமால் இருந்த ஒரு செயற்கைக்கோள் தாக்கி அழிக்கப்பட்டது என்றும், அது பிற நாட்டுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை

பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை

பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டதால் செயற்கைக்கோள் நொடியில் சாம்பலாக்கி காற்றில் கரைந்துவிடும். பழைய செயற்க்கைகோள்கள் அதிகமாக இருக்கும் போது எதிர் நாட்டவர்கள் அதை யாருக்கும் தெரியாமல்
திருடி ஒரு நாடு குறித்த தகவல்களைத் திருடவும் வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் வரும் நாட்களில் போர் என்று இருந்தால் பொருளாதாரம், செயற்கைக்கோள், விண்வெளி சார்ந்ததாகத் தான் இருக்கும். அப்படியொரு சூழலில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு நோக்கத்தில் தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

சாட்டிலைட் எதிரான போர் நிகழ்ந்தால்..

சாட்டிலைட் எதிரான போர் நிகழ்ந்தால்..

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் சாட்டிலைட் எதிரான போர் நிகழ்ந்தால், எதிரிகளின் செயற்கைக்கோளைத் தாக்க என்பது மட்டுமில்லாமல், எதிரிகள் தாக்கிய செயற்கைக்கோள்கள் நம் மீது விழாமல் தற்காத்துக்கொள்ளவும் இந்த பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை நமக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை

அமெரிக்க வெளியுறவுத்துறை

இந்நிலையில் மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்தது பற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது என்னவென்றால், செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம்.

குப்பைகள்

குப்பைகள்

விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் எனவும், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது, விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் சோதனை வடிவமைக்கப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம் என்று கூறியது அமெரிக்க வெளியுறவுத்துறை.

More from GizBot

Best Mobiles in India

English summary
US-State-Dept-on-MissionShakti-Saw-PM-Modis-statement: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X