மேகத்திற்குள் போர் விமானத்தை மறைத்து ஓட்டுபவர்களின் கவனத்திற்கு!
கடந்த 60 ஆண்டுகளில், ஹைபர்சோனிக் ஏவுகணை மீதான அமெரிக்காவின் ஆர்வம் மற்றும் வெற்றி ஆனது பல ஏற்றங்களையும் இறக்கங்களை கண்டுள்ளது.
ஏரோடைனமிக்ஸ் துறையில், ஒலியின் வேகத்தை மிஞ்சக்கூடிய ஒரு வேகத்தை ஹைபர்சோனிக் என்பார்கள். அதாவது மேக் 5 அல்லது அதற்கும் மேலான வேகம் ஆகும். இந்த அளவிலான வேகத்தில் செல்லக்கூடிய ஆயுதங்களை (ஆயுத தாங்கிய ஏவுகணைகளை) தான் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் என்பார்கள்.

இம்மாதிரியான ஹைபர்சோனிக் ஆயுத தயாரிப்பில் ரஷ்யா மற்றும் சீனா போட்டிபோட்டுக்கொண்டு வேலை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த இரண்டு நாடுகளும் தங்கள் ஹைபர்சோனிக் ஆயுதங்களின் வேகத்தை அதிகரித்தன, அதாவது இதுவரையில் எட்டாத அதிகபட்ச வேகமான மணிக்கு 767 மைல்கள் எனும் வேகத்தை அடைந்தனர்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்
கடலில் இருந்தோ அல்லது தரையில் இருந்தோ செலுத்தப்படக்கூடிய, ராக்கெட் பூஸ்டட் மூலம் உந்து சக்தி பெரும் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஆனது மிகவும் உயரமாக பறக்க கூடிய வல்லமையை கொண்டுள்ளன. பொதுவாக இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஆனது வேறு எந்த ஆயுதங்களை விடவும் வேகமாக பறக்கும் திறனை கொண்டது. அதாவது மணிக்கு 3,000 மைல்கள் முதல் (உச்சகட்ட திறன் கொண்ட ஏவுகணை ஆனது) மணிக்கு 10,000 மைல்கள் வரை சீறிப்பாயலாம்.

அமெரிக்கா
இம்மாதிரியான ஒரு வேகத்தின் கீழ், அவற்றை அடையாளம் காண்பதோ, தடுப்பதோ அல்லது சுட்டு வீழ்த்துவதோ மிகவும் கடினமாக இருக்கும் (சாத்தியம் இல்லை என்று கூட கூறலாம்). இந்த தொழில்நுட்ப பகுதியை பல தசாப்தங்களாக அபிவிருத்தி செய்து வரும் அமெரிக்கா, இதன் பின்னால் இருக்கும் சாத்தியங்களையும் மற்றும் சக்திகளையும் கண்டறிந்து இந்த தொழில்நுட்பத்தின் கீழ் பெரிய அளவிலான முதலீடுகளை செய்து வருகிறது மற்றும் மேலும் செய்ய முயற்சிக்கிறது.

500 மைல்கள் என்கிற வேகத்தை அடைந்தது
கடந்த 60 ஆண்டுகளில், ஹைபர்சோனிக் ஏவுகணை மீதான அமெரிக்காவின் ஆர்வம் மற்றும் வெற்றி ஆனது பல ஏற்றங்களையும் இறக்கங்களை கண்டுள்ளது. அதன் ஆரம்ப கால சோதனை ஆன எக்ஸ் 15 ஆனது ஒரு மாபெரும் வெற்றி ஆகும். அந்த சோதனை ஆனது மணிக்கு 4500 மைல்கள் என்கிற வேகத்தை அடைந்தது என்பதும், அந்த சோதனை ஆனது 1959 தொடங்கி 1968 வரை நடந்தது என்பதும் குறிப்படத்தக்கது.

எக்ஸ் 15
மொத்தம் 199 முறை விண்ணில் பறக்கவிடப்பட்ட எக்ஸ் 15 ஆனது வெறும் இரண்டு முறை மட்டுமே தோல்வியை தழுவியது என்பதும் அதில் ஒன்று விமான போட்டியின் உயிரை பறித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, இவ்வகை ஆயுதங்கள் ஆனது 1981 முதல் 2011 வரையிலாக வளர்ச்சிக்கான கட்டத்தில் இருந்தது. பிறகு 2005 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலாக எடுக்கப்பட்ட முயற்சியின் கீழ் எக்ஸ் 51 ஏ உருவானது. எக்ஸ் 51 ஏ ஆனது ஒரு அதிவேக உந்துவிசை இயந்திரம் கொண்ட, ஸ்கிராம்ஜெட் என்று அழைக்கப்படும் ஒரு அதிவேக வாகனம் ஆகும். உலகமே பொறாமை கொள்ளும் அளவிலான வேகத்தை இது எட்டியது.

ஆயுத வளர்ச்சியின் கீழ் முழுவீச்சில் களமிறங்கி பணியாற்றி வருகிறது
இருப்பினும், இவ்வகையின் கீழ் மொத்தம் நான்கு விமானங்கள் மட்டுமே சோதனை செய்ய பட்டன. அவற்றுள் இரண்டாம் மற்றும் மூன்றாம் விமானங்கள் வெற்றிகரமாக அமையவில்லை. அதற்கு அடுத்தபடியாக, அதாவது எக்ஸ் 51 ஏ விமானத்திற்கு அடுத்தபடியாக எந்தவொரு பின்தொடர்வும் இல்லை என்பதும், எந்தவொரு அடுத்தகட்ட திட்டமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக அமெரிக்கா அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டது என்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டில், தற்போது, அமெரிக்கா ஹைபர்சோனிக் ஆயுத வளர்ச்சியின் கீழ் முழுவீச்சில் களமிறங்கி பணியாற்றி வருகிறது.

தொழில்நுட்ப ஆராய்ச்சி
அதை உறுதிப்படுத்தும் வண்ணம், பென்டகன் ஆனது ஹைபர்சோனிக்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பிராதான முன்னுரிமை என அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் அண்மைய வரவு செலவுத் திட்ட கோரிக்கையானது ஹைபர்சோனிக் ஆயுதங்களுக்கும் மற்றும் சில எதிர்ப்பு ஆயுதங்களும் கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்டுள்ளது.

சீனா மற்றும் ரஷ்யா
ஹைப்சோனிக் மேலாதிக்கத்திற்கான போட்டியை பொறுத்தவரை, அமெரிக்காவை தவிர்த்து, சமீபத்திய ஆண்டுகளாக சீனா மற்றும் ரஷ்யாவும் கூட ஹைபர்சோனிக் ஆயுதங்களின் மீது தங்களின் அதிகப்படியான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து, வேறு எந்த ஒரு நாடும் நிகழ்த்திராத அளவிலான ஹைபர்சோனிக் மாநாடுகளை சீனா நிகழ்த்தி உள்ளது. தவிர சீனர்கள் பல புதிய மற்றும் கவர்ச்சிகரமான பரிசோதனை முறைகளில் முதலீடு செய்தும் வருகின்றனர். மேலும், சீனா சமீபத்தில் அதிகப்படியான அதிவிரைவு விமான சோதனைகளை நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அவான்டார்டு
மறுகையில் உள்ள ரஷ்யாவை பொறுத்தவரை, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் சமீபத்தில் தன்னுடைய நாட்டின் இராணுவத்தில் அவான்டார்டு என்றழைக்கப்படும் ஒரு அதிரடி ஆயுதத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications