UFO வீடியோ பற்றி பென்டகன் ஒப்புக்கொண்ட உண்மை.. இன்னும் என்னவெல்லாம் நமக்கு தெரியாம இருக்கோ?
பூமியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை அடையாளம் காணும் நிகழ்வுகள் சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது. அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை யுஎஃப்ஒ (UFO) என்று அழைக்கின்றனர். சமீபத்தில் கடலுக்கு நடுப்பகுதியில் சுற்றுகிற ஒரு பந்து போன்ற கோள வடிவ பறக்கும் பொருளை அமெரிக்க கடற்படை வீரர்கள் பார்த்துள்ளனர். நடுவானில் பக்கவாட்டாக நகர்ந்து பின்னர் கடலுக்குள் நுழையும் UFO வீடியோவை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் என்ன தெரிவித்தார் என்று பார்க்கலாம்.

யுஎஃப்ஒ பற்றிய வீடியோ ஆதாரங்கள்
யுஎஃப்ஒக்களைப் பற்றிய ஆவணப்படங்களைத் தயாரிக்கும் ஒரு திரைப்பட தயாரிப்பாளரால் சமீபத்தில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட காட்சிகளில் தான் இந்த வீடியோ ஆதாரங்கள். வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர், பென்டகனின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க கடற்படை வீரர்களால் இந்த வீடியோ காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பென்டகன் ஒப்புக்கொண்ட உண்மை
அமெரிக்கக் கடற்படையால் இந்த வீடியோ கைப்பற்றப்பட்டது என்று உறுதிப்படுத்திய பின்னரும், இது எங்கு, எப்போது படமாக்கப்பட்டது என்பது குறித்து செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கவில்லை.
மே 14 அன்று, ஜெர்மி கோர்பெல் என்ற நபர் தனது இணையதளத்தில் இந்த மர்மமான பறக்கும் பொருளைப் பற்றி விவரித்துள்ளார். "அமெரிக்க கடற்படை 'கோள' வடிவ யுஎஃப்ஒக்கள் மற்றும் மேம்பட்ட டிரான்ஸ்மீடியம் வாகனங்களைப் புகைப்படம் எடுத்து படமாக்கியுள்ளது".

காற்று மற்றும் நீர் வழியாகப் பயணிக்கக்கூடிய UFO-ஆ இது?
இது காற்று மற்றும் நீர் வழியாகப் பயணிக்கக்கூடிய ஒரு வகையான மர்ம பறக்கும் பொருள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கந்த கிளிப் ஒரு மானிட்டரில் இருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இருண்ட, வட்டமான குமிழ் அடிவானத்திற்கு மேலே அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
கோர்பலின் கூற்றுப்படி, இந்த காட்சிகள் 2019 ஜூலை 15 ஆம் தேதி சுமார் 11 மணி அளவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட உண்மை இணையத்தில் வெளியானது
இன்னும் சரியாகச் சொல்லப்போனால், இது சான் டியாகோ கடற்கரைக்கு அருகிலுள்ள யுஎஸ்எஸ் ஒமாஹாவின் போர் தகவல் மையத்திற்குள் இருந்து படமாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. யுஎஃப்ஒவின் ரேடார் படங்கள் ஒரு திடமான கோள வடிவ பொருளைக் காட்டுகின்றது. இது சுமார் 2 மீட்டர் (6 அடி) விட்டம் கொண்டது.
இந்த பறக்கும் மர்ம பொருள் மணிக்கு 74 முதல் 254 கிமீ / மணி (46 முதல் 158 மைல்) வேகத்தில் பறந்துள்ளது.

மர்ம பொருள் கடலுக்குள் சென்ற இடத்தில் என்ன கிடைத்தது?
அதன் விமானம் பயணம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது, பின் அலைகளின் அடியில் கோள வடிவ பறக்கும் பொருள் நொடியில் மறைந்து போனது. அந்த மர்ம பொருள் கடலுக்குள் சென்ற இடத்தில் சிதைவுகள் எதுவும் காணப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த தேடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நடத்தப்பட்ட தேடலில் எதுவும் மீட்டெடுக்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

விசாரணை
ஜெர்மி கோர்பெல் கூறியதாவது, "யுஎஸ்எஸ் ஒமாஹா சம்பவம் பற்றி அமெரிக்கக் கடற்படை மற்றும் பென்டகன் இன்னும் என்ன சொல்லத் தயாராக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் இந்த சம்பவம் ஒரு முறையான மர்மம் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதனால் எந்த தகவலும் வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்". என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications