அமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.!

|

அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை தடுப்பு கவன் போட்ரெட் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்காமல், செயல்படாமல் போனது சவுதியை பதற வைத்துள்ளது. இதனால் தனது எஸ்-400 ஏவுகணை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய ரஷ்யா குஷியடைந்துள்ளது.

டிரோன்கள் மூலம் தாக்குதல்

டிரோன்கள் மூலம் தாக்குதல்

சவுதி அரேபியா எண்ணெய் வளமிக்க நாடாகும். இங்கு அப்காய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறி வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மற்றும் தடுத்தர தூர தொலைவு சென்று அழிக்கும் ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தினர்.

50 சதவீதம் பெட்ரோல் உற்பத்தி பாதிப்பு

50 சதவீதம் பெட்ரோல் உற்பத்தி பாதிப்பு

தாக்குதல் நடத்தியதால், 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் சுமார் 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா? மாஸ் காட்டிய கூகுள்!Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா? மாஸ் காட்டிய கூகுள்!

டிரோன் தாக்குதலால் உயர்வு அபாயம்

டிரோன் தாக்குதலால் உயர்வு அபாயம்

டிரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதால், உலகிற்கு தேவையான 10 % கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாக்கத்தை ஏற்படுத்தி தொடங்கி உள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்பம்

அமெரிக்காவின் தொழில்நுட்பம்

இந்நிலையில் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அதிநவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் சவுதி அரேபியா முக்கிய அங்கம் வகிக்கிறது. அமெரிக்காவின் எப்15 போர் விமானங்கள், அப்பாச்சி ரக போர் விமானங்கள் என விதமான அதிநவீன போர் கருவிகளையும் சவுதி அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செதுள்ளது.

அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!

போட்ரெட் ஏவுகணை  தடுப்பு கவன்

போட்ரெட் ஏவுகணை தடுப்பு கவன்

எதிரி நாடுகளில் ஏவுகணைகள் தாக்குதலில் இருந்து எல்லைகளை பாதுகாக்கும் விதமாக அமெரிக்காவின் போட்ரெட் என்னும் அதி நவீன ஏவுகணை தடுப்பு கவன்களையும் தனது எல்லை பகுதியில் சவுதி நிறுவியுள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எதிரி நாடுகளிடமிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை 160 கி.மீட்டர் தொலை வரை சென்று தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றுள்ளது.

இனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம்! சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.!இனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம்! சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.!

போட்ரெட் ஏவுகணை தடுப்பு தோல்வி

போட்ரெட் ஏவுகணை தடுப்பு தோல்வி

ஏமன் எல்லையில் இருந்து 1200 கி.மீட்டர் தொலைவில் உள்ள சவுதி எண்ணெய் கிடங்குகளை குவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வேண்டிய அமெரிக்கா போட்ரேட் ஏவுகணை தடுப்பு கவன்கள் செயல்பாடமல் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்பம் கேள்விகுறி

அமெரிக்காவின் தொழில்நுட்பம் கேள்விகுறி

இந்நிலையில், அமெரிக்காவின் போட்ரேட் ஏவுகணை தடுப்பு கவன் செயல்படாமல் போனதால், இதன் நம்பகத்தை தன்மை குறித்து சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் பதறிப்போயியுள்ளன. அமெரிக்காவின் தடுப்பு கவன் தோல்வியால், ரஷ்யா மகிழ்ச்சியில் உள்ளது.

எஸ்-400  ஏவுகணை விற்க தயார்

எஸ்-400 ஏவுகணை விற்க தயார்

எஸ்-400 ஏவுகணைகளை சவுதி அரேபியா விரும்பினால் அவர்களுக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சூழ்நிலையை வைத்து ரஷ்யா தனது ஆயுதங்களை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ஆயத்தமாகியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
US Defense Missile System Failure : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X