அமெரிக்க ராணுவத்திற்கு HoloLens வழங்கிய மைக்ரோசாப்ட்! இதில் என்ன சிறப்பம்சம் தெரியுமா?
இம்மாதிரியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மைக்ரோசாப்ட் நிறுவனம் (மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித்), இந்த திட்டத்திற்குள் செல்ல முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் போட்டியாளர் ஆன சாம்சங், போர் டாங்கிகள், ஜெட் என்ஜின்கள் உட்பட பல ஆயுதங்களை உருவாக்கும் ஒரு நிறுவனமும் கூட என்பதையும், அது சாம்சங் டெக்வின் என்கிற பெயரின் பாதுகாப்புக் கிளை ஒன்றை நடத்தி வருகிறது என்பதையும், இந்த கிளையின் கீழ் கண்காணிப்பு, வானூர்தி, ஆட்டோமேஷன், மற்றும் ஆயுதங்களுக்கான
தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது என்பதையும் நீங்கள் அறிந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதே வேலையை பில் கேட்ஸிற்கு சொந்தமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்து வருவதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனமானது அமெரிக்க இராணுவத்திற்கு உதவுதல் மற்றும் வேலை செய்தல் போன்ற திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த "அறிவார்ந்த - ஆயுத" கூட்டணி ஆனது , நேற்று அல்லது இன்று ஆர்மபிக்கப்பட்ட ஒன்றல்ல, கடந்த 40 ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு கூட்டணி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்சமயம் அமெரிக்க இராணுவத்திற்கு அதிக பொருட் செலவில் HoloLens எனும் சாதனத்தை வழங்கியுள்ளது, இது ஒருங்கிணைந்த விஷுவல் அக்மென்மென்ஷன் சிஸ்டத்தின் மூலம் செயல்படுகிறது.மேலும் போர் மாதிரிகள் மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்கும் சிறப்பாக இந்த HoloLens பயன்படுத்துகிறது.
இது "கால் ஆஃப் டூடி போல் தோன்றுகிறது என்றும் கூறலாம் -

தெர்மல் இமேஜிங்
இந்த HoloLens சாதனத்தை கொண்டு உங்கள் வரைபடத்தின் நிலைப்பாடு, வரைபட திசைகாட்டி, எதிரகள் ஆயுதம் கூட பார்க்க முடியும். இதில் உள்ள தெர்மல் இமேஜிங் இருண்ட நிலையில் அனைத்தையும் மிகத்துல்லியமாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022 மற்றும் 2023
இப்போது குறைந்தளவு HoloLens சாதனங்கள் மட்டுமே அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது,ஆனால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வழங்கப்பட்ட HoloLens சாதனம் தலைகவசங்களுடனும் இனைக்கப்பட்டு வேலைசெய்யும் வகையில் உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்
சமீப காலமாக வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் - ஏஐ) தொழில்நுட்பம் ஆனது ரோபோக்களை சுயமாக செயல்பட வைக்கும், பின் ஒரு கட்டத்தில் மக்கள் கொல்ல படுவார்கள் என்கிற அச்சத்தையும், அக்கறையையும்
மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டு இருந்தாலும் கூட, அது அமெரிக்க இராணுவத்திற்கு தனது தொழில்நுட்ப உதவிகளை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் ஒரு வலைப்பதிவு இடுகையில் (கடந்த 26 அக்டோபர்) இதற்கான அறிவிப்பையும், விளக்கத்தையும் வெளியிட்டார். அதில், "அமெரிக்க ராணுவத்திற்காக, உளவு மற்றும் ஆயுத தொழில்நுட்பம் உட்பட பல வேலைகளை
நிகழ்த்துவதில் பெரும்பாலான மைக்ரோசாப்ட் பணியாளர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை பற்றியும், சில தொழிலாளர்கள் இந்த வேலைகளின் மீது இன்னமும் சந்தேக பார்வையை கொண்டுள்ளதை பற்றியும், நானும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி
ஆன சத்திய நதெல்லாவும் பேசினோம்" என்று கூறியுள்ளார்.

இராணுவத் திட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது
சமீபத்தில், கூட்டு தொழில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு (Joint Enterprise Defense Infrastructure - JEDI) என
அழைக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய அமெரிக்க இராணுவ க்ளவுட் ப்ராஜெக்டில் இருந்து பிரபல கூகுள் நிறுவனம் வெளியேறியதைத் தொடர்ந்து, பெயர் மற்றும் எண்ணிக்கை குறிப்பிடப்படாத மைக்ரோசாப்ட் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு பகிரங்கமான கடிதமானது, மைக்ரோசாப்ட் நிறுவனம் இராணுவத் திட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது.

க்ளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தம்
அந்த கடிதமானது, ஜெடி (JEDI) என்பது ஒரு க்ளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தம் ஆகும். அது ஒரே க்ளவுடு வழங்குனரின் உறைக்குள் முழு இராணுவத்தையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு திட்டமாகும். அது மிகப்பெரிய ஒப்பந்தம் ஆகும் மற்றும் அது ரகசியமாக மறைக்கப்படும் ஒரு ஒப்பந்தம் ஆகும். ஆக நாங்கள் எதை கட்டமைக்கிறோம் என்று கூட எங்களுக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் துணை நிற்கும்
இம்மாதிரியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மைக்ரோசாப்ட் நிறுவனம் (மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித்), இந்த திட்டத்திற்குள் செல்ல முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. "ஏனென்றால் மைக்ரோசாப்ட் ஆனது அமெரிக்க பாதுகாப்புத் துறையை ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த நாட்டிலுள்ள மக்களும், குறிப்பாக இந்த நாட்டிற்கு சேவை செய்யும் மக்களின் முதுகுக்குப் பின்னால்
மைக்ரோசாப்ட் நிறுவனம் துணை நிற்கும். அவர்கள் நாங்கள் உருவாக்கும் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை அணுகுவார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளது.

உறவு நீட்டித்து கொள்ளப்பட்டுள்ளது!
மேலும் பிராட் ஸ்மித் கூறுகையில், "மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் நாடு, சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட ஒரு வலுவான இராணுவத்தினை கொண்டு இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் கடந்த நாற்பது ஆண்டு காலம் நிலுவையில் இருந்த மைக்ரோசாப்ட் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் உறவு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது" என்கிறார்.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி மைக்ரோசாப்ட் ஒரு வலைப்பதிவு இடுகையில் "நமது நிறுவனம் தொழில்நுட்ப மாற்றத்தை மேற்கொண்டு உள்ளது. இதன் விளைவாக இதற்கு முன்னர் சாத்தியமில்லாத விஷயங்களை, அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கான புதிய பணியில் சாத்தியமாக்க உள்ளோம்" என்று கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








