டிஆர்டிஓ: பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை: வெற்றி.!
பினாகா வழிகாட்டப்பட்ட ராக்கெட் அமைப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு டிசம்பர் 19-ம் தேதி(நேற்று) அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா கடற்கரை
மேலும் இந்த ராக்கெட் ஒடிசா கடற்கரையிலிருந்து சண்டிப்பூரில் உள்ள ஒருகிருணைந்த டெஸ்ட் ரேஞ்சிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பினாக ராக்கெட் லாஞ்சர்
குறிப்பாக சில நொடிகளிலேயே 12ராக்கெட்டுகளை ஏவும் தொழில்நுட்பம் கொண்ட மேம்படுத்திய பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பினாகா ராக்கெட் நிர்ணயித்த இலக்கை துல்லியமாக
தாக்கி அழித்துள்ளது.

மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது
அதிநவீன புதிய தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவடிமைக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் தான்பினாகா. மேலும் கடந்த 2008-ம் ஆண்டு சோதனை செய்யப்பட்ட பினாகா, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர், ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் சந்திப்பூர் கடல் பகுதியில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

12வெவ்வேறு இலக்குகளை குறிவைத்து ஏவ முடியும்
அதுவும் இந்த லாஞசர் மூலம் 44விநாடிகளில் 12ராக்கெட்டுகளை 12வெவ்வேறு இலக்குகளை குறிவைத்து ஏவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் இலக்குகள் அனைத்தும் மிக துள்ளியமாக தாக்கப்பட்டதாகவும், சோதனையின் போது அனைத்து பணி நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் டிஆர்டிஓ சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

கார்கில் போரின்போது..
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ள இந்த லாஞ்சரை கொண்டு இரவிலும்எதிரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது. கடந்த, 1999ல் நடந்த கார்கில் போரின்போது, இது அதிகளவில்பயன்படுத்தப்பட்டது.மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ள, பினாகா ஏவுகணை செலுத்தும் சாதனம், தற்போது மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications