டைட்டன் நிலவில் வித்தியாசமான மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு.. உயிர் அடையாளத்தின் உருவாக்கமா?

|

சனியின் மிகப்பெரிய சந்திரனான டைட்டன் நிலவில், புதிய மூலக்கூற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய மண்டலத்தில் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்ட ஒரே சந்திரன் டைட்டன் மட்டும் தான். டைட்டனின் வளிமண்டலம் பூமியை விட நான்கு மடங்கு அடர்த்தியானது. இப்போது, ​​விஞ்ஞானிகள் அதில் ஒரு விசித்திரமான மூலக்கூற்றைக் கண்டுபிடித்துள்ளனர், இது வேறு எந்த வளிமண்டலத்திலும் இதுவரை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டன் நிலவில் வித்தியாசமான மூலக்கூறு

டைட்டன் நிலவில் வித்தியாசமான மூலக்கூறு

டைட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மூலக்கூறு சைக்ளோப்ரோபெனிலிடின் (cyclopropenylidene) அல்லது சி3எச்2 (C3H2) என்று அழைக்கப்படுகிறது. இது கார்பன் மற்றும் ஹைட்ரஜனால் ஆனது. இந்த எளிய கார்பன் அடிப்படையிலான மூலக்கூறு சிக்கலான சேர்மங்களை உருவாக்கக்கூடிய வேதியியல் எதிர்வினைகளுக்குப் பங்களிக்கும் ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

டைட்டனில் சாத்தியமான உயிர் உருவாக்கமா?

டைட்டனில் சாத்தியமான உயிர் உருவாக்கமா?

அந்த சேர்மங்கள், டைட்டனில் சாத்தியமான உயிர் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.சிலியில் (Chile) தொலைநோக்கிகளின் அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் / சப்மில்லிமீட்டர் வரிசையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியதால் இந்த மூலக்கூறு முதலில் கவனிக்கப்பட்டுள்ளது.

மாணவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்.! இனி ஆணியடிக்கமால் பொருள்களை தொங்கவிடலாம்.!மாணவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்.! இனி ஆணியடிக்கமால் பொருள்களை தொங்கவிடலாம்.!

 2003 இல் டைட்டனில் பென்சீன் கண்டுபிடிப்பு

2003 இல் டைட்டனில் பென்சீன் கண்டுபிடிப்பு

இந்த வானொலி தொலைநோக்கி ஆய்வகம் பலவிதமான ஒளி கையொப்பங்களைக் கவனித்துள்ளது, இது டைட்டனின் வளிமண்டலத்தின் தனித்துவமான வேதியியலில் மூலக்கூறுகளை வெளிப்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது. டைட்டனில் கண்டறியப்பட்ட இரண்டாவது மூடிய-லூப் மூலக்கூறு இதுவாகும். இதற்கு முன்பு2003 இல் பென்சீன் டைட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆன ஒரு கரிம வேதியியல் கலவை பென்சீன் ஆகும்.

இந்த மூலக்கூறு உயிர் உருவாக்கத்திற்கு ஒரு கட்டுமான தொகுதியா?

இந்த மூலக்கூறு உயிர் உருவாக்கத்திற்கு ஒரு கட்டுமான தொகுதியா?

டைட்டனில் உள்ள வித்தியாசமான வளைய வடிவ மூலக்கூறு, வாழ்க்கைக்கு ஒரு கட்டுமான தொகுதியாக இருக்கலாம் என்றும், இவை சனியின் சந்திரன் டைட்டனில் உயிர் வாழ்க்கையை உருவாக்க ஒரு முன்னோடியாகச் செயல்பட உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கலவை இதற்கு முன்னர் சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த கிரகத்திலும் காணப்படவில்லை. அதேபோல், எந்த சந்திரனின் வளிமண்டலத்திலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசானில் மொபைல் ஆர்டர் செய்தவருக்கு வந்த பார்சல்.. உள்ளே இருந்ததை பார்த்து ஆடிப்போன பயனர்..அமேசானில் மொபைல் ஆர்டர் செய்தவருக்கு வந்த பார்சல்.. உள்ளே இருந்ததை பார்த்து ஆடிப்போன பயனர்..

டைட்டானில் இந்த மூலக்கூற்றை பார்த்தது ஆச்சரியம்

டைட்டானில் இந்த மூலக்கூற்றை பார்த்தது ஆச்சரியம்

சைக்ளோப்ரோபெனிலிடின் மூலக்கூறு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்ட ஒரு வளையத்தில் மூன்று கார்பன் அணுக்களால் ஆனது. மேரிலாந்தில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான நிலையத்தில் உள்ள கோனார் நிக்சன், டைட்டானில் இந்த மூலக்கூற்றைக் கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு மிகவும் சுவாரசியமான பல சாத்திய தகவல்களை வழங்கக்கூடியது என்று கூறியுள்ளார்.

எந்த கிரகத்திலும், நிலவிலும் காணப்படாத மூலக்கூறு

எந்த கிரகத்திலும், நிலவிலும் காணப்படாத மூலக்கூறு

இந்த மூலக்கூறு மிகவும் வினைத்திறன் வாய்ந்தது, இது வேறு எந்த துகள்களிலும் மோதினால், அது வேதியியல் ரீதியாக அவற்றுடன் விரைவாகச் சேர்ந்து புதிய சேர்மங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாக, இது முன்னர் விண்மீன் விண்வெளியில் வாயு மற்றும் தூசியின் மெல்லிய மேகங்களில் மட்டுமே காணப்பட்டது. எப்படியோ, இது டைட்டனின் வானத்தின் மேல் அடுக்குகளில் உள்ள வளிமண்டலத்தில் எப்படியோ நீடித்து நிற்கிறது.

பெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..பெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..

டி.என்.ஏ (DNA) மற்றும் ஆர்.என்.ஏ (RNA)

டி.என்.ஏ (DNA) மற்றும் ஆர்.என்.ஏ (RNA)

இது போன்ற வளைய வடிவ மூலக்கூறுகள் டி.என்.ஏ (DNA) மற்றும் ஆர்.என்.ஏ (RNA) போன்ற உயிர் அணுக்களுக்குத் தேவையான மூலக்கூறுகளின் கட்டுமானத் தொகுதிகளாகச் செயல்படுகின்றது. "இது மிகவும் சிறிய கட்டுமான தொகுதி, ஆனால் இதனுடன் பெரிய -பெரிய விஷயங்களை நீங்கள் உருவாக்க முடியும்" என்று நிக்சன் கூறுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது பூமி எப்படி உருவானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

பூமியில் உயிர் எவ்வாறு தொடங்கியது?

பூமியில் உயிர் எவ்வாறு தொடங்கியது?

"டைட்டனில் நுண்ணுயிரிகள் இருப்பதாக யாரும் நம்புவதாக நான் நினைக்கவில்லை, ஆனால் டைட்டனில் இது போன்ற சிக்கலான மூலக்கூறுகளை உருவாகுவதை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு பூமியில் உயிர் எவ்வாறு தொடங்கியது என்பது போன்ற விஷயங்களை நாம் புரிந்து அறிந்துகொள்ள உதவும்." என்று நிக்சன் உறுதியுடன் கூறியுள்ளார்.

ஆக்சிஜனுக்கு பதிலாக மீத்தேன்

ஆக்சிஜனுக்கு பதிலாக மீத்தேன்

டைட்டானின் நிலைமைகள் இப்போது கிரகத்தின் வரலாற்றின் தொடக்கத்தில் பூமி எப்படி இருந்ததோ, அதைப் போலவே இருக்கிறது. இங்குள்ள ஒரே ஒரு வேறுபாடு ஆக்சிஜனுக்கு பதிலாக மீத்தேன் வாயுவின் ஆதிக்கம் டைட்டனில் அதிகமாக உள்ளது.

டைட்டனுக்கு செல்லும் டிராகன்ஃபிளை விண்கலம்

டைட்டனுக்கு செல்லும் டிராகன்ஃபிளை விண்கலம்

இந்த நிலைமை உயிர்கள் உருவாகும் திறனைப் படிப்பதற்கும் உதவும். இப்பொழுது, பூமியிலிருந்து மட்டுமே நாம் இதை கண்காணிக்க முடியும், ஆனால் 2027 ஆம் ஆண்டில், டிராகன்ஃபிளை விண்கலம் மூலம் டைட்டனின் மேற்பரப்பை நெருக்கமாக ஆராய நம்மால் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Unusual molecule found in atmosphere on Saturn's moon Titan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X