சத்தமில்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய ஐக்கிய அரபு அமீரகம்.!

|

விண்வெளிக்கு அதிநவீன விண்கலங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா,ஐரோப்பா ஒன்றியம், இந்திய உள்ளிட்ட பல நாடுகள் அனுப்பி பல்வேறு சாதனை புரிந்து உள்ளன. ஆனால் முதன் முறையாக அரபு ஆமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி புதிய சாதனை படைத்துள்ளது.

 கடந்த வாரமே விண்கலம் ஏவப்பட

வெளிவந்த தகவலின்படி கடந்த வாரமே விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மோசானமா வானிலை காரணமாக விண்ணில் செலுத்தப்படவில்லை. ஜப்பான் உள்ள தனேகஷிமா என்ற இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விணகலம் எச்-2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான

குறிப்பாக அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை சுமார் ஆறுமாதத்தில் உருவாக்கி உள்ளனர். மேலும் கொலராடோபல்கலைக் கழகத்தில் இருக்கும் விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது
பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

83 வருடத்திற்கு Netflix இலவசமாக வேண்டுமா? அப்போ உடனே இதை பண்ணுங்கனு சொன்ன நிறுவனம்!83 வருடத்திற்கு Netflix இலவசமாக வேண்டுமா? அப்போ உடனே இதை பண்ணுங்கனு சொன்ன நிறுவனம்!

திட்டத்தினை தாங்களே

பின்பு அடுத்த திட்டத்தினை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் அளவிற்கான ஆற்றல் அமீரகத்திற்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளார், கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்தின் மூத்த பொறியாளர்.

செவ்வாய் கிரகத்தின்

இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும் என்றும், தண்ணீரைஉருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படிஎன்பது குறித்த அமீரகத்தின் ஆய்வு நடத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

 விண்கலம் அதன்

இப்போது அனுப்பப்பட்ட விண்கலம் அதன் அமைப்புகளுக்கு சக்தி அளிக்க சோலார் பேனல்களை செயல்படுத்தியது மற்றும் பூமியில் உள்ள தளத்தில் ரேடியோ வழி தகவல்தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

பருவகால

சுருக்கமாக தினசரி மற்றும் பருவகால மாற்றங்களை தெரிந்துகொள்ளவும், முதன்முறையாக செவ்வாய் வளிமண்டலத்தின் முழுமையான படத்தை வழங்குவதையும் இந்த ஆய்வுக்கான விண்கலம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
United Arab Emirates' First-Ever Mission To Mars Has Launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X