ரஷ்ய கடற்படையின் இரகசிய ஆவணங்கள் சிக்கியது: விலகியது மர்மம்.!

அனைத்து யூஎஸ்ஓ நிகழ்வுகளின் பொதுவான குணவியல்பு என்னவென்றால், அவை நாம் இதுவரை கட்டமைத்த தொழில்நுட்பங்களை காட்டிலும், விவரிக்கப்படாத மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பொருள்களை உள்ளடக்கியது.

|

ரஷ்ய கடற்படையின் இரகசிய ஆவணங்களின் படி, என்னதான் மர்ம நீர்மூழ்கிக் கப்பல்கள் (யுஎஸ்ஓ) அடிக்கடி தென்பட்டாலும், மர்ம பறக்கும் பொருட்களை போல (யுஎஃப்) போன்று பிரபலமாக இல்லை.

ரஷ்ய கடற்படையின் இரகசிய ஆவணங்கள் சிக்கியது: விலகியது மர்மம்.!

அனைத்து யூஎஸ்ஓ நிகழ்வுகளின் பொதுவான குணவியல்பு என்னவென்றால், அவை நாம் இதுவரை கட்டமைத்த தொழில்நுட்பங்களை காட்டிலும், விவரிக்கப்படாத மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பொருள்களை உள்ளடக்கியது.

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன் காலத்தில் நடைபெற்ற சாத்தியமான யுஎஸ்ஓ சந்திப்புகளை விவரிக்கும் அறிக்கைகள் சமீபத்திய இரகசிய ஆவணங்களில் உள்ளன . முன்னாள் கடற்படை அதிகாரியும், ரஷ்ய யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளருமான விளாடிமிர் அஷாஷா இந்த ஆவணங்கள் பெரும் மதிப்பைக் கொண்டுள்ளன என்று நம்புகின்றார். தென் பசிபிக்கில் போர் பயற்சியில் ஈடுபட்டு வந்த அணு நீர்மூழ்கிக் கப்பல் சம்பந்தப்பட்ட நிகழ்வு, அவர் ஆய்வு செய்ததில் சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்று.

 வழக்கமான பயிற்சியின் போது...

வழக்கமான பயிற்சியின் போது...

வழக்கமான பயிற்சியின் போது அந்த நீர்மூழ்கிக் கப்பல், 230 நாட்ஸ் (265+ மைல்) வேகத்தில் பயணிக்கும் ஆறு மர்ம பொருள்களை கண்டுபிடித்தது. ஒப்பீட்டளவில் மிகவும் வேகமாக நீர்மூழ்கிக் கப்பலான சோவியத் கே 222 சுமார் 44 நாட்ஸ் (51 mph) என்ற அதிகபட்ச வேகத்தில் மட்டுமே பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மர்ம பொருட்கள்

மர்ம பொருட்கள்

அந்த மர்ம பொருட்கள் நீர்மூழ்கிக் கப்பலை நோக்கி வருவதை அதன் சோனார் உறுதிப்படுத்தியதால் மேற்பரப்பை நோக்கி கப்பலை செலுத்த கேப்டன் உத்தரவிட்டார். கடலின் மேற்பரப்புவரை யு.எஸ்.ஓ.க்கள் அவர்களைப் பின்தொடர்ந்து பின்னர் பறந்து சென்றன.

யூரி பெக்கெட்டோவ்

யூரி பெக்கெட்டோவ்

ஓய்வு பெற்ற நீர்மூழ்கிக் கப்பல் தளபதி யூரி பெக்கெட்டோவ் நினைவுகூர்கையில், இதேபோன்ற நிகழ்வுகள் பெர்முடா முக்கோணத்தின் பகுதியில் நடைபெற்றுள்ளதாக கூறினார். வலுவான குறுக்கீடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி, நீர்மூழ்கி கப்பலின் கருவிகள் அடிக்கடி பழுதாக செயல்பட்டன. இது யூஎஸ்ஓ / யுஎஃப்ஒ-ன் தெளிவான அடையாளம் என பலர் நம்புகின்றனர்.

கருவிகள் நம்பமுடியாத வேகத்தில் நகரும்  மர்ம பொருள்

கருவிகள் நம்பமுடியாத வேகத்தில் நகரும் மர்ம பொருள்

"பல சந்தர்ப்பங்களில் கருவிகள் நம்பமுடியாத வேகத்தில் நகரும் அந்த மர்ம பொருள்களின் கணக்கீடுகளை வழங்கியுள்ளது. அந்த கணக்கீடுகள் சுமார் 230 நாட் அல்லது 265 மைல் வேகத்தைக் காட்டின. இந்த மிக விரைவான வேகம் மேற்பரப்பில் கூட சவாலாக இருக்கும்.

இயற்பியல் விதிகளை மீறியதாக உள்ளன

இயற்பியல் விதிகளை மீறியதாக உள்ளன

ஆனால் தண்ணீர் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். இந்த மர்ம பொருட்கள் இயற்பியல் விதிகளை மீறியதாக உள்ளன. இதற்கான விளக்கம் இதுவாக தான் இருக்கமுடியும்: அவற்றை உருவாக்கிய உயிரினங்கள் நம்மை விட தொழில்நுட்பத்தில் முன்னேறியவை "என்கிறார் பீக்கெடோவ் .

இராணுவ நடவடிக்கை

இராணுவ நடவடிக்கை

யுஎஃப்ஒக்கள் மற்றும் யு.எஸ்.ஓக்கள் இரண்டும் இராணுவ நடவடிக்கைகளை எங்கு நடைபெற்றாலும் அதில் ஆர்வம் செலுத்துகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஷ்யா

ரஷ்யா

மற்றொரு யுஎஸ்ஓ ஹாட்ஸ்பாட் ரஷ்யாவில் பைக்கால் ஏரி. உலகின் ஆழமான நன்னீர் ஏரியான இங்கு எப்போதும் மர்மம் நிலவிக்கொண்டே இருக்கும் மற்றும் மீனவர்களும் அதன் ஆழமான தண்ணீரில் காணப்பட்ட ஒளியின் கதையை கூறுகிறார்கள். பல நாட்டுப்புற கதைகள் பைக்கால் ஏரியின்அமைதியான அலைகள் கீழே வாழந்துகொண்டிருக்கும் உயிரினங்களால் நீச்சல்வீரர்கள் இழுக்கப்படுவதை விவரிக்கின்றன.

ஆழமாக பயணிக்கிறார்கள்

ஆழமாக பயணிக்கிறார்கள்

விளாடிமிர் அஷாஷா இந்த பிரச்சினையை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று நம்புகிறார். "நான் நீருக்கடியில் அடித்தளங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன்: ஏன் இல்லை? எதுவும் கைவிடப்படக் கூடாது, "என்கிறார் அஷாஷா. "சந்தேகம் ஒன்றே எளிதான வழி: எதையும் நம்பாதே, எதையும் செய்யாதே. மக்கள் அரிதாகவே ஆழமாக பயணிக்கிறார்கள். எனவே அவர்கள் அங்கே என்ன சந்திப்பார்கள் என்பதை ஆராய்வது மிக முக்கியம். "

தம்பி மஸ்க்.. இந்தாங்க ரஸ்க்! இஸ்ரோ எடுக்குது பார் அல்டிமேட் ரிஸ்க்!

தம்பி மஸ்க்.. இந்தாங்க ரஸ்க்! இஸ்ரோ எடுக்குது பார் அல்டிமேட் ரிஸ்க்!

எதற்கு எடுத்தாலும் எலான் மஸ்க்கை உள்ளே இழுப்பதே உங்களுக்கு வேலையாக போய் விட்டது என்று கடுப்பாக வேண்டாம். விண்வெளி போட்டி என்றால் நாசாவை வம்பிற்கு இழுப்பதில் எப்படி ஒரு நியாயம் இருக்கிறதோ, அதே போல ரீயூசபிள் ராக்கெட் என்று வந்துவிட்டால் எலான் மஸ்க்கை இழுத்து உள்ளே விடுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.

ஏனெனில் மறுபயன்பாட்டு ராக்கெட்டின் அடித்தளம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் பெரிய தலை எலான் மஸ்க் தான். நியாயம் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். சரி எலான் மஸ்க் மற்றும் இஸ்ரோவின் ரிஸ்க் மேட்டருக்குள் செல்வோம்.

இஸ்ரோ

இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) மறுபயன்பாட்டு ராக்கெட்களின் உருவாக்கத்தில் பணியாற்றி வருகிறது என்பதேயே சில உலக நாடுகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் இஸ்ரோவின் ஆகப்பெரும் சாதனைகள் அனைத்தும் மிகவும் மலிவான செலவில் நிகழ்ந்துள்ளன. இதர நாடுகளால் குறிப்பிட்ட விண்வெளி ஆராய்ச்சியை முடிக்க முடிந்தாலும் கூட, இஸ்ரோ அளவிற்கு மலிவான பட்ஜெட்டில் முடிக்க முடியவில்லை, அந்த கடுப்பு தான்.

ரீயூசபிள் ராக்கெட்

ரீயூசபிள் ராக்கெட்

இந்நிலைப்பாட்டில், இஸ்ரோ ஒரே நேரத்தில் (ஒன்றல்ல, இரண்டல்ல) மொத்தம் மூன்று வேறுபட்ட வடிவங்களின் கீழ் ரீயூசபிள் ராக்கெட்களை உருவாக்கி வருகிறது என்று கூறினால், பண மழையில் நனையும் எலான் மஸ்க் கூட சற்று கடுப்பாகத்தான் செய்வார்.

ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும்

ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும்

வெறும் ஒற்றை ஆராய்ச்சிக்காக ஒரு ரீயூசபிள் ராக்கெட் பயன்படக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும், மறுகையில் சேவை சந்தையில் இஸ்ரோவின் ரீயூசபிள் ராக்கெட் அறிமுகப்படுத்தப்படும் போது ஒரு போட்டிமிக்க நிலையயை உருவாக்க வேண்டும் என்றும் இஸ்ரோ இதை நிகழ்த்தலாம். அல்லது இவைகள் இலகு ரக, மிதமான ராக மற்றும் காண ரக ரீயூசபிள் ராக்கெட்களாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

கே. சிவன்

கே. சிவன்

கடந்த வாரம், இஸ்ரோ தலைவரான கே. சிவன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குத் தெரிவிக்கையில், விரைவில் இரண்டு-படிநிலை ராக்கெட் ஒன்றை பரிசோதிக்கப்பட்டும் அதன் இரண்டு படிகளுமே ஏவலுக்கு பிறகு மீட்கப்படும் என்று கூறினார். மேலும் இந்த திட்டத்தின் கீழ், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இரண்டு ராக்கெட்கள் உருவாக்கம் பெறுகிறது என்கிற தகவவாலானது சிவனின் குறிப்புகளில் (ஸ்பெசிஃபிகேஷன்ஸ்) இருந்து அறியப்படுகிறது.

நாசா

நாசா

இஸ்ரோவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனையானது, ரீயூசபிள் ராக்கெட் வெயிக்கல் (RLV) என்று அழைக்கப்படுகிறது. இது நாசாவின் ஸ்பேஸ் ஷட்டில் விண்கல வடிவமைப்பின் ஒரு மாதிரி வடிவமாகும. இருப்பினும், இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக ஏற்றத்தின் போது ஏறத்தாழ ஐந்து அரை-க்ளோஜெஜினிக் என்ஜின்கள் கொண்டும் மற்றும் இறக்கத்தின் போது ஒரு ஸ்கிராம்ஜெட் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த திட்டம் வருகிற 2030 ஆம் ஆண்டில் முடிவடைந்தால், இதனால் குறைந்த பட்சம் பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் சுமார் 10,000 கி.மீ தூரத்தை எட்ட முடியும்.

ஜி எஸ்எல்வி மார்க் 2

ஜி எஸ்எல்வி மார்க் 2

தற்போது வரையிலாக இஸ்ரோவிடம் ஒரு சோதனைக்குரிய ராக்கெட் முன்மாதிரி இல்லை. ஆனால், அது சார்ந்த விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தோன்றின. அது அட்மைர் (ADMIRE) என்று அழைக்கப்படும், ஜி எஸ்எல்வி மார்க் 2 வில் பயன்படுத்தப்படும் ஒரு எல்40 பூஸ்டர் அளவு கொண்ட, ஒரு சிறிய இரண்டு-நிலை ராக்கெட் ஆகும். அதன் பேலோடு திறன் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

பால்கான் 9

பால்கான் 9

கூறப்படும் அட்மைர் ராக்கெட்டின் முதல் கட்டமானது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட்டின் முதல் கட்டத்தை போன்றே இருக்கும் என்றும், இரண்டாம் கட்டமானது போலார் (PSLV) மற்றும் ஜியோசைன்ரோனானஸ் சேட்டிலைட் ராக்கெட்களை போன்றே (GSLV) இழக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமான செலவுகள்

கட்டுமான செலவுகள்

ஒவ்வொரு விண்வெளி ஏவலுக்கு பிறகும் வீணாய் போகும் ராக்கெட்களின் மீதான செலவை குறைக்கும் நோக்கத்தின் கீழ் உதித்ததே - இந்த ரீயூசபிள் ராக்கெட் திட்டம். விண்கலத்தை விண்ணிற்குள் செலுத்திவிட்டு, பூமிக்கு மீண்டு வரும் ராக்கெட்களின் பாகங்கள் ஆனது ஸ்பேஸ் ஏஜென்சிகளின் வெளியீட்டு வாகன செலவுகளை பெரிய அளவில் குறைக்கின்றன. ஆக அடுத்த விண்வெளி ஏவலின் போது பிரதான உள் கட்டுமான செலவுகள் மற்றும் புதுப்பிக்கும் செலவுகள் மட்டுமே இருக்கும்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கடந்த பல தசாப்தங்களாக ரீயூசபிள் ராக்கெட் (ஸ்பேஸ் ஷட்டில்) முன்மாதிரியைக் கொண்டிருந்த போதிலும், அது முயற்சி செய்து பார்க்க விரும்பவில்லை. அந்த வெற்றிடத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் நிரப்பிக்கொண்டது. உடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் விண்வெளிக் கப்பல் போன்று மிகவும் பெரியதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அந்த அளவுக்கு உள்கட்டமைப்பு தேவையில்லை என்றும் நிரூபித்தது. அதன் பின்னரே பல விண்வெளி நிறுவனங்கள் - பொது மற்றும் தனியார் - தங்களின் சொந்த ரீயூசபிள் ராக்கெட் திட்டங்களில் பணியாற்றி வருகின்றன. அந்த வரிசையில் நம்ம இஸ்ரோ ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Underwater Extraterrestrials: Declassified Russian Navy Records Say They’re Rea: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X