விண்வெளி பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரசியமான உண்மை.! 10வது உண்மை உங்களை மிரளவைக்கும்.!

|

விண்வெளி பற்றி நம்மிடம் கேள்வி கேட்டால், நமது பால் கண்டம் பற்றிய தகவல்கள் பதிலாகச் சொல்லுவோம். ஆனால் பால் கண்டம் பற்றி நமக்குத் தெரியாத பல நம்ப முடியாத உண்மைகளை, இந்த கண்டம் மறைத்து வைத்திருக்கிறது.

விண்வெளி பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரசியமான உண்மை!மிஸ் பண்ணிடாதீங்க!

அப்படிப்பட்ட சில நம்பமுடியாத விசித்திர உண்மைகளைத் தான் உங்களுக்கு இப்பொழுது வழங்கப்போகிறோம். பால் கண்டம் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள் இதுதான்.

1. மிகப் பெரிய நட்சத்திரம்

1. மிகப் பெரிய நட்சத்திரம்

மிகப் பெரிய நட்சத்திரம் எது என்று கேட்டால், உடனே சூரியன் என்று தான் நாம் அனைவரும் பதில் அளிப்போம். ஆனால் நாங்கள் சொல்லப் போகும் நட்சத்திரத்திற்கு அருகில் சூரியன் வெறும் சுண்டக்காய் அளவு கூட இல்லை என்பதே உண்மை. ஆம் விண்வெளியில் இருக்கும் பெரிய நட்சத்திரத்தின் பெயர் யூஒய் ஸ்குட்டி(UY Scuti). இந்த நட்சத்திரம் சுமார் 1.88 x 10^9 கிலோமீட்டர் ஆரம் அளவு கொண்டது. சூரியனை விட 1700 மடங்கு பெரியது, சூரியனை விட சுமார் 5 பில்லியன் கனஅளவு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

2. குறைந்தபட்ச வெப்பநிலை - முழுமையான பூஜ்யம்

2. குறைந்தபட்ச வெப்பநிலை - முழுமையான பூஜ்யம்

குறைந்தபட்ச வெப்பநிலையை அப்சொலூட் ஜீரோ என்பார்கள். முழுமையான பூஜ்யம் என்று அழைக்கப்படும் இதன் உண்மையான மதிப்பு -273.15 டிகிரி செல்சியஸ் தான், ஜீரோ கெல்வின் தான் முழுமையான பூஜ்யத்தைக் குறிக்கிறது. 5000 ஒளி ஆண்டுகள் தாண்டி நெபுலா என்ற நட்சத்திரத்தில் தான் -272 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

3. மிகப் பெரிய நிலவு

3. மிகப் பெரிய நிலவு

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய நிலவின் பெயர் கேனிமெட் என்பதாகும். இந்த நிலவு ஜூப்பிட்டர் கிரகத்திற்குச் சொந்தமானது, இந்த கிரகத்திற்கு கலிஸ்டோ, ஐஓ மற்றும் ஈரோப்பா என்று இன்னும் மூன்று பெரிய நிலவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4.தண்ணீர் மற்றும் காற்று மண்டலம் உள்ள நிலவு

4.தண்ணீர் மற்றும் காற்று மண்டலம் உள்ள நிலவு

டைடன் நிலவு தான் முந்தைய காலத்தில் பெரிய நிலவாகக் கருதப்பட்டது, கேனிமெட் கண்டுபிடிக்கப்பட்ட பின் இப்பொழுது இரண்டாவது பெரிய நிலவாக உள்ளது. பூமிக்குப் பின் தண்ணீர் மற்றும் காற்று மண்டலம் உள்ள ஒரே கோல் டைட்டன் நிலவு மட்டுமே. டைட்டானில் ஏகப்பட்ட நதிகள் மற்றும் கடல்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டானிற்கு என்று பிரத்தியேக காற்று மண்டல நிலை இருக்கிறது என்பது தான் சிறப்பு. பொதுவாக நிலவுகளுக்கு காற்று மண்டலங்கள் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. பூமியின் வயது

5. பூமியின் வயது

ரேடியோமெட்ரிக் வயது கணக்கெடுப்பின் படி, பால் கண்டத்தில் உள்ள நமது பூமிக்குத் தோராயமாக 4.54 பில்லியன் ஆண்டு வயதாகிறதாம். இன்னும் சுமார் 7.5 ஆண்டுகள் நீடித்து உயிர் வாழுமாம் நம் பூமி.

6. உயிர்கள் வாழக்கூடிய சாத்தியமான வேற்று கிரகங்கள்

6. உயிர்கள் வாழக்கூடிய சாத்தியமான வேற்று கிரகங்கள்

நாசாவின் ஸ்பிட்சர் ஸ்பேஸ் டெலஸ்கோப் 2017 ஆம் ஆண்டு, 7 புதிய சூரியமண்டல புறக்கோள்களைக் கண்டுபிடித்தது. இந்த 7 சூரியமண்டல புறக்கோள்களும் ட்ராப்பிஸ்ட் 1 சிஸ்டம் என்று பெயரிடப்பட்டுப் பிரிக்கப்பட்டது. இந்த 7 புறக்கோள்களும் தண்ணீருடன் இருப்பது ஆச்சரியம், இதில் மூன்று புறக்கோள்கள் மட்டும் உயிர்கள் வாழத் தோதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்!உங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்!

7. சூரியனின் வெப்பம்

7. சூரியனின் வெப்பம்

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5505 டிகிரி செல்சியஸ் ஆகும். சூரியனின் மைய வெப்பநிலை சுமார் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தில் ஒரு சதவீதம் கூட பூமியின் மேல் விளவில்லை என்பது தான் உண்மை.

8. ஜூப்பிட்டரில் காணப்படும் சிவப்பு புள்ளி

8. ஜூப்பிட்டரில் காணப்படும் சிவப்பு புள்ளி

ஜூப்பிட்டர் கிரகத்தின் படத்தை நீங்கள் நன்கு கவனித்திருந்தால், நிச்சயம் இந்த சிவப்பு புள்ளியை கவனித்திருப்பீர்கள். ஜூப்பிட்டரில் காணப்படும் சிவப்பு புள்ளி ஒரு இராட்சஸ சூறாவளி என்பதே உண்மை. மனித இனத்திற்குத் தெரிந்து சுமார் 400 ஆண்டுகளாக ஓய்வு இல்லாமல் ஒரே இடத்தில் மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறதாம். ஒரே இடத்தில் 400 ஆண்டுகளாகச் சுழன்றுகொண்டிருக்கும் இந்த சூறாவளி விண்வெளியின் பிரமிப்பு.

குறைந்த விலையில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர்-அதிரடி ஆப்பருடன்.!குறைந்த விலையில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர்-அதிரடி ஆப்பருடன்.!

9. 24 மணிநேரத்திற்கு மேல் பூமிக்கு கிடைக்கும் எக்ஸ்டரா டைம்

9. 24 மணிநேரத்திற்கு மேல் பூமிக்கு கிடைக்கும் எக்ஸ்டரா டைம்

பூமியின் சுழற்சி வேகம் சந்திரனால் பாதிக்கப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? சந்திரனின் தாக்கத்தினால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்து ஒரு நாளுக்குக் கூடுதலாக 1.7 மில்லி செகண்ட்கள் நமக்குச் சேர்க்கப்பட்டுள்ளது. நாம் 18 ஆம் நூற்றாண்டில் செலவிட்ட நேரத்தை விட, தற்பொழுது 2.3 மில்லி செகண்ட்கள் அதிகமாகியுள்ளது என்பது தான் உண்மை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வெறும் 23 மணிநேரம் மட்டுமே ஒரு நாளுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

10. அண்டைய கிரகங்களில் எத்தனை நிலவுகள் உள்ளது தெரியுமா?

10. அண்டைய கிரகங்களில் எத்தனை நிலவுகள் உள்ளது தெரியுமா?

மெர்குரி மற்றும் வீனஸ் கிரகத்திற்கு நிலவுகள் இல்லை என்பது தான் உண்மை. செவ்வாய்க் கிரகத்திற்கு, போபோஸ் மற்றும் டெயிமோஸ் என்று 2 நிலவுகள் உள்ளது. சனி கிரகத்திற்கு மட்டும் 62 நிலவுகள் உள்ளது என்பது தான் ஆசிரியத்திற்குரிய உண்மை, அதிலும் சூரியக் குடும்பத்தில் டைடன் தான் இரண்டாம் பெரிய நிலவு என்பது குறிப்பிடத்தக்கது. யுரேனஸ் கிரகத்திற்கு 27 நிலவுகளும், நெப்டியூன் கிரகத்திற்கு 13 நிலவுகளும் உள்ளது. மொத்தமாகச் சூரியக் குடும்பத்தில் மட்டும் சுமார் 193 நிலவுகள் உள்ளது என்பது தான் விண்வெளி பற்றி நீங்கள் அறிந்திடாத உண்மை.

மார்ஸில் ஹெலிகாப்டர் பறக்கவிடப் போகும் நாசா.! எதுக்குன்னு தெரியுமா?மார்ஸில் ஹெலிகாப்டர் பறக்கவிடப் போகும் நாசா.! எதுக்குன்னு தெரியுமா?

Best Mobiles in India

English summary
Unbelivable Mind Blowing Facts About Our Milky Way Galaxy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X