4 நாள் பயணமாக இந்தியா வருகிறார் ஐநா பொதுச் செயலாளர்: 21 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு.!
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள் IORA ( இந்தியன் ஓசன் ரிம் அசோசியேசன் ) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கதக்க எரிசக்தி தொடர்பான கருத்தர
4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார் ஐநாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ். மேலும் பிரதமார் மோடியுடன் சந்திக்க இருப்பதகாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லியில் நடக்கும் கருத்தரங்கத்திலும் பங்கேற்கிறார். இதே கருத்தரங்களில் 21 நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிகளும் கலந்து கொள்கின்றனர்.

ஐஓஆர்ஏ:
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள் IORA ( இந்தியன் ஓசன் ரிம் அசோசியேசன் ) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கதக்க எரிசக்தி தொடர்பான கருத்தரங்கம் அக்டோபர் இரண்டாம் தேதி புதுடெல்லியில் நடக்கிறது.

ஐ.நா. பொதுச்செயலாளர்:
சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடக்கும் இருந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்ட்மோனியோ குட்ரஸ் மற்றும் பிறநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சுஷ்மா சுவராஜ் அழைப்பு:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராசின் அழைப்பை ஏற்று இதற்காக 4 நாள் பயணமாக ஐ.நா சமைபயின் பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்ரஸ் அக்டோபர் 1ம் தேதி இந்தியா வருகிறார்.

தூய்மை இந்தியா:
மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாளும், பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காம் ஆண்டின் துவக்க நாளுமான அக்டோபர் 2ம் தேதியில் நடக்கும் சர்வதே துப்புரவு கருத்தரங்கிலும் அவர் கலந்து கொள்கிறார்.

இந்தியாவால் உருவாக்கப்பட்டது:
இந்தியாவின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டை அக்டோபர் மூன்றாம் தேதி அவர் துவக்கி வைக்கிறார்.

68 நாடுகள் இணைந்துள்ளன:
அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே ஆகியோரின் முன் முயற்சியால் ஐஎஸ்ஏ எனப்படும் சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டமைப்பில் இதுவரை 68 நாடுகள் இணைந்துள்ளன.


Click it and Unblock the Notifications