அல்டிமா டுலே - மனித இனம் கடந்த மாபெரும் தூரமும், 7 சுவாரசியமும்!

|

சூரிய மண்டலத்தின் கடைக்குட்டி கிரகமாக கருதப்படும் புளூட்டோவைவிட சுமார் பில்லியன் மைல் தொலைவில் உள்ள ஒரு விண்வெளி பொருள் தான் - அல்டிமா டுலே. நமது வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒரு வேர்க்கடலை-வடிவத்தில் உள்ள இந்த விண்வெளி பொருள் தான், இதுவரை மனித இனம் எட்டியதிலேயே மாபெரும் தூரமாகும்.

அல்டிமா டுலே - மனித இனம் கடந்த மாபெரும் தூரமும், 7 சுவாரசியமும்!


சரியாக கடந்த புத்தாண்டின் சாயுங்கால நேரத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் ஆனது அல்டிமா டுலேவை சந்தித்தது. விண்வெளி மிதக்கும் துரு பிடித்த பாறை போன்ற வண்ணத்தை கொண்ட அந்த விண்வெளி பொருளானது சுமார் 3,540 கிலோமீட்டர்கள் என்கிற மாபெரும் பரப்பளவை கொண்டிருந்தது. அந்த நிகழ்வின் போது, நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் மூலம் கைப்பற்றிய தரவுகள் ஆனது இப்போது விஞ்ஞானிகளுக்கு சூரிய குடும்பத்தின் ஆரம்ப நாட்களின் மீதான பல அறிய விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளது.

அல்டிமா டுலே

அல்டிமா டுலே

அல்டிமா டுலே அதன் 4.5 பில்லியன் வருட காலத்தில் பெரும்பாலானவற்றை நெப்டியூனுக்கு அப்பால் உள்ள குய்பெர் பெல்ட் எனும் டோனட் வடிவ மண்டலத்தில் உறைநிலையில் தான் கழித்துள்ளது. சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 6.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் அல்டிமா டுலேவின் மேற்பரப்பை சூரிய வெப்பம் தொடுவதென்பது மிகவும் எப்போதாவது தான் நிகழ்கிறதாம். அதனால் தான் அது, சூரிய குடும்பத்தின் ஆரம்ப காலம் சார்ந்த எச்சங்களை தன்னுள் கொண்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எந்தவொரு பெரிய அளவிலான மாற்றத்தையும் சந்திக்காமல் அப்படியே இருக்கிறது

எந்தவொரு பெரிய அளவிலான மாற்றத்தையும் சந்திக்காமல் அப்படியே இருக்கிறது

"அதாவது இது உருவான ஆரம்பகால நாட்களில் இருந்து தற்போது வரையிலாக, எந்தவொரு பெரிய அளவிலான மாற்றத்தையும் சந்திக்காமல் அப்படியே இருக்கிறது" என்கிறார் நியூ ஹாரிஸான்ஸ் திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் அலன் ஸ்டெர்ன். கிடைக்கப்பெற்ற தரவுகளிலிருந்தும் அல்டிமா டுலே பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் குறிப்பிட்ட ஏழு விஷயங்களை இங்கே பட்டியலிட்டுளோம்.

01. எந்த தொந்தரவையும் சந்திக்கவில்லை!

01. எந்த தொந்தரவையும் சந்திக்கவில்லை!

அல்டிமா டுலே, சுமார் 4 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளாக எந்தவொரு தொந்தரவையும் சந்திக்கவில்லை. பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் இடைவெளியை 49 கொண்டு பெருக்கினால் என்ன தூரம் வருமோ அதுதான் சூரியனுக்கும் அல்டிமா டுலேவிற்கும் உள்ள இடைவெளி ஆகும். இதன் விளைவாக, பூமிக்கு கிடைக்கும் சூரிய ஒளியை விட 900 மடங்கு குறைவான சூரிய ஒளியையே அது பெறுகிறது. அல்டிமா டுலேவிற்கு சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க சுமார் 293 ஆண்டுகள் தேவை என்பதால் அல்டிமா டுலேவின் பெரும்பாலான பகுதிகள் சில தசாப்தங்களாக ஒருமுறை மட்டுமே சூரிய ஒளியை பெறுகின்றன.

02. அதன் லோப் ஆனது மிகவும் மென்மையான மோதல் ஒன்றின் விளைவாக கிடைத்துள்ளது.

02. அதன் லோப் ஆனது மிகவும் மென்மையான மோதல் ஒன்றின் விளைவாக கிடைத்துள்ளது.

பார்க்கும் போதே அல்டிமா டுலே ஆனது இரண்டு விண்வெளி பொருட்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டதால் உருவான ஒன்று என்பதை கணித்து விட முடியும். உண்மைதான் பெரிய லோப் ஆனது "அல்டிமா" என்று அழைக்கப்படுவதுடன் சேர்த்து சிறியது "டுலே" என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டும் ஒரு அசாதாரண வழியில் ஒன்றாக இணைந்துள்ளது.

அதாவது குய்பெர் பெல்ட்டில் நடந்த இந்த மோதல் ஆனது ஒரு துப்பாக்கி குண்டின் வேகத்தின் கீழே நடந்துள்ளது, அதனால் அல்டிமா, டுலே ஆகிய இரண்டிற்கும் எந்த விதமான வன்முறையான இணைப்பு வடுக்களும் ஏற்படவில்லை.

03. நிலாக்களோ, மோதிரங்களோ கிடையாது

03. நிலாக்களோ, மோதிரங்களோ கிடையாது

குய்பெர் பெல்ட்டின் அல்டிமா டுலேயின் பகுதியில் உள்ள பல பொருள்கள் செயற்கைக்கோள்களுடன் இணைகின்றன, ஆனால் அல்டிமா டுலே ஆனது தனியாக மிதக்க கூடியதாக தோன்றுகிறது. சரி சனிக்கோளை போன்று ஏதாவது மோதிரங்கள் இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை. ஒருவேளை இதற்கு நிலவு இருந்திருந்தால், விஞ்ஞானிகள் அல்டிமா டுலேவின் அடர்த்தியை தீர்மானிக்க உதவியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 04. பள்ளங்கள் உள்ளன!

04. பள்ளங்கள் உள்ளன!

அல்டிமாவிலும் சரி, டுலேவிலும் சரி, நாம் பள்ளங்களை காண முடிகிறது. குறிப்பாக மேரிலாண்ட் என்று அழைக்கப்படும் டூலேலுள்ள ஒரு பிராந்தியத்தில், இரண்டு சாத்தியமான தாக்கம் காணப்படுகிறது. விஞ்ஞானிகளின் படி, இந்த தாக்கங்கள் ஆனது குய்பெர் பெல்டில் உள்ள சிறிய பொருட்களின் மோதல்களின் விளைவாக ஏற்பட்டு இருக்கலாம்.

05. அதன் மேற்பரப்பு பிரகாசமானது!

05. அதன் மேற்பரப்பு பிரகாசமானது!

உண்மையில் அல்டிமா டுலே ஆனது மிகவும் இருட்டாக உள்ளது மற்றும் அதன் மேற்பரப்பை தாக்கும் ஒளியில் வெறும் 12 சதவிகிதத்தை தான் அது பிரதிபலிக்கிறது. ஒப்பீட்டளவில், அந்த 12 சதவிகிதத்தில் 10 சதவீதம் ஆனது அதன் மண்ணில் இருந்து வெளிப்படுகின்றன. ஆக இதன் மண் ஆனது மினுமினுப்பு பண்பை கொண்டிருக்கலாம்.

06. மேற்பரப்பில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது!

06. மேற்பரப்பில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது!

ஆம், அல்டிமா துலே மேற்பரப்பில் நீர் பனிக்கட்டிகளின் அறிகுறிகள் உள்ளன, ஆனால் அது ஏராளமானதாகத் தெரியவில்லை. நீர் பனிக்கட்டி எதுவாகவாகவும் இருக்கலாம் அல்லது வரம்புக்கு உட்பட்டதாக இருக்கலாம் அல்லது மற்ற பொருளுக்குப் பின்னால் மறைக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் கூட அது சாத்திமாக ஆவியாகவில்லை என்பது மட்டும் உறுதி.

07. கற்பனைக்கு எட்டாதபடி மிகவும் தட்டையாக உள்ளது

07. கற்பனைக்கு எட்டாதபடி மிகவும் தட்டையாக உள்ளது

அல்டிமா டுலே பரந்த அளவில் உள்ளது மேலும் கணிசமாக அளவில் மிகவும் மெலிதாக இருக்கிறது. அதாவது இதன் உருவாக்கம் ஆனது "இயற்கைக்கு மாறான" ஒன்றாக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ultima-thule-the-farthest-place-visited-by-humans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X