விண்வெளி பயணத்துக்கு அசத்த வரும் அடுத்த தலைமுறை ஏவுகலன்.!

யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் வல்கன் ராக்கெட்டின் முதல் கட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை கொண்டு, இரு ப்ளூஆரிஜின் பி.ஈ-4 இன்ஜின்களை பயன்படுத்தவுள்ளதாகவு

|

யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வல்கன் ஏவுகலனின் முக்கிய இன்ஜினை வழங்க ப்ளூஆரிஜன் நிறுவனத்தை தேர்வு செய்து கடந்த செப்டம்பர் 27 அன்று அறிவித்துள்ளது. இம்முடிவு விண்வெளி துறையினரால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.

யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் வல்கன் ராக்கெட்டின் முதல் கட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை கொண்டு, இரு ப்ளூஆரிஜின் பி.ஈ-4 இன்ஜின்களை பயன்படுத்தவுள்ளதாகவும், 2020மத்தியில் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் ப்ளூஆரிஜின் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.

வெற்றிகரமான முதல் பயணம்:

வெற்றிகரமான முதல் பயணம்:

யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் தலைவரும், தலைமை நிர்வாகியுமான டோரி ப்ரூனோ கூறுகையில், "ப்ளூஆரிஜின் நிறுவனத்துடன் கூட்டணி சேர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் எங்களது அடுத்த தலைமுறை ஏவுகலனின் வெற்றிகரமான முதல் விண்வெளி பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.

வல்கன் ராக்கெட் முதல் கட்ட இன்ஜின்

வல்கன் ராக்கெட் முதல் கட்ட இன்ஜின்


ப்ளூஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஸ்மித் சார்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ப்ளூஆரிஜின் குழுவிற்கு இன்று சிறப்பான நாள். ப்ளூஆரிஜின் நிறுவனத்தின் எல்.ஓ.எக்ஸ்/எல்.என்.ஜி பி.ஈ 4, வல்கன் ராக்கெட்டின் முதல்கட்ட இன்ஜினாக தேர்வுசெய்யப்பட்டு யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸால் கவுரவிக்கப்பட்டுள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.

"வல்கன் ராக்கெட்டிற்கு ஆற்றலளிக்க எங்கள் என்ஜினை நம்பி தேர்ந்தெடுத்ததற்கு, ஒட்டுமொத்த யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ்குழு மற்றும் டோரி ப்ரூனோவிற்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை" என மேலும் புகழ்ந்துள்ளது.

நிறுவனத்துடன் கூட்டணி:

நிறுவனத்துடன் கூட்டணி:

இந்நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்து முதன்முதலில் பி.ஈ4 ஐ உருவாக்குவதாக அறிவித்து 4 ஆண்டுகள் கழித்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏரோஜெட் ராக்கெட்டைன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுவரும் ஏஆர்1 இன்ஜினும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், வல்கனுக்கு ஆற்றல் அளிக்க பி.ஈ4 தான் முன்னிலையில் உள்ளது என்பதை ப்ரூனோ எப்போதோ தெளிவுபடுத்தினார்.

தொழில் நுட்ப கோளாறு நிலுவை:

தொழில் நுட்ப கோளாறு நிலுவை:

ஏப்ரல்2017ல் நடைபெற்ற ஒரு சந்திப்பில், முடிவு எடுப்பதற்கு முன்பு ப்ளூஆரிஜின் நிறுவனம் சில பரிசோதனைகளை முடிப்பதற்காக காத்திருப்பதாக ப்ரூனோ கூறினார்.

"பொருளாதார காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளும் நிலுவையில் உள்ளன" என அப்போது அவர் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
ULA Selects Blue Origin to Provide Main Engine for New Vulcan Rocket : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X