வெடித்து சிதறிய அணு உலை: சிவப்பு காட்டில் ட்ரோன்கள் மூலம் ஆய்வு.!

அணு உலை வளாகத்தின் 4-ம் எண் உலை வெடித்தவுடன், கதிர்வீச்சையும், அனலையும் உடனடியாக எதிர்கொண்டது அங்கிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காடு. வெப்பத்தால் கருகி மடிந்த மரங்கள், மிக அதிக அளவிலா

|

ஓர் அணு உலை வெடித்து சிதறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் முதல் முறையாக ஒரு அணு உலை வெடித்து சிதறியது.

ஆனால் இன்று வரை இதன் தாக்கம் காணப்படுகின்றதா என்று ரோபோடிக்கிஸ் ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

வெடித்து சிதறிய அணு உலை: சிவப்பு காட்டில் ட்ரோன்கள் மூலம் ஆய்வு.!

இது உலகின் மிகப்பெரும் அணு உலை விபத்துகளில் ஒன்று என்று கருத்தப்படுகின்றது. அந்த இடத்திற்கு பெயர் சிவப்பு காடு என்று அழைக்கப்படுகின்றது.

வெடித்து சிதறியது அணு உலை:

வெடித்து சிதறியது அணு உலை:

1986ம் ஆண்டு ஏப்ரல் 26ல் அப்போதைய சோவியத் யூனியில் இருந்த உக்ரைன். செர்னோபிள் என்ற இடத்தில் இருந்த அணு உலை வெடித்து சிதறியது. இது உலகையும் மிரள செய்தது.

அணு உலை வளாகத்தின் 4-ம் எண் உலை வெடித்தவுடன், கதிர்வீச்சையும், அனலையும் உடனடியாக எதிர்கொண்டது அங்கிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காடு. வெப்பத்தால் கருகி மடிந்த மரங்கள், மிக அதிக அளவிலான கதிர்வீச்சினை உள்வாங்கி பழுப்பு நிறத்துக்கு மாறின. இதன் மூலம் இந்தக் காடு 'சிவப்புக் காடு' என்று பெயர் பெற்றது.

டிரோன்கள் மூலம் ஆய்வு:

டிரோன்கள் மூலம் ஆய்வு:

உலகின் கதிரியக்க மாசு மிகுந்த இடங்களில் ஒன்று கருத்தப்படும் இந்த இடத்தை பிரிட்டன் விஞ்ஞானிகள் ரோபோட்டிக் டிரோன்கள் மூலம் ஆராயந்து வருகின்றனர்.

அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் ஆராய்ந்து தகவல்களையும் சேரிக்கின்றது.

மனிதர்கள் செல்ல அனுமதி மறுப்பு:

மனிதர்கள் செல்ல அனுமதி மறுப்பு:

இந்த சிவப்புக் காட்டிற்குள் மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுகின்றது.

இந்நிலையில் பிரிட்டனில் நேஷன் சென்சடர் பார் நியுக்கிளயர் ரோபோடிக்ஸ் (என்சிஎன்ஆர் ) உருவாக்கிய ட்ரோன் ஆராய்ச்சி அமைப்பு ஒன்று ஆபத்தான இடங்களில் பாதுகாப்பான தொலைவில் இருந்து ஆராய்ந்து விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

அசையாத இறக்கை கொண்ட விமானங்கள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் மரங்களுக்கு மேல் பறந்து பொதுவான கதிர்வீச்சு வரைபடம் ஒன்றை உருவாக்க உதவின.

ஆபத்தான கதிர்வீச்சு:

ஆபத்தான கதிர்வீச்சு:

வெடித்து சிறிய இடங்களில் ஆபத்தான எரிபொருட்கள் தரையில் சிதறிக் கிடக்கின்றது. ஒரு மணி நேரத்துக்கு 1.2 மில்லிசிவெர்ட்ஸ் கதிர்வீச்சு வெளியிடுகின்றது.

இதுமிகிவும் ஆபத்தான கதிர்வீச்சாகும். ஓராண்டு ஏற்படக் கூடிய கதிர்வீச்சு ஒரு மணி நேரத்தில் உடலை தாக்கும் தன்மை கொண்டதாகும்.

இதை என்சிஎன்ஆர் இணை இயக்குநர் பேராசிரியர் டாம் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

70 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை:

70 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை:

இந்தப் பகுதிக்கு கடந்த ஆண்டு 70 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து போயுள்ளனர். இதற்குள் தற்போது குறைவான ஆபத்துள்ள பகுதி என்று கருதப்படும் பரப்பை சூரியவிசை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் திட்டம் உள்ளது.

அணுக்கழிவு அகற்றும் திட்டம்:

அணுக்கழிவு அகற்றும் திட்டம்:

பிரிட்டனின் அணுமின் நிலையங்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கும், பண்படுத்துவதற்கும் திட்டமிடப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சேர்ந்த 4.9 மில்லியன் டன் எடையுள்ள அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட தேசிய அளவிலான அமைப்பே என்.சி.என்.ஆர். என்பதாகும்.

Best Mobiles in India

English summary
ukraine chernobyl nuclear disaster drones for investigation : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X