நிலவை கடந்து சென்ற ஏலியன் விண்கலம்! அதிர்ச்சி வீடியோ..!
பெர்ஷியரை சேர்ந்த ஜேசன் காலம் என்ற அந்த நபர், கடந்த செப்டம்பர் 25 அன்று நிலவை நெருக்கமாக வீடியோ பதிவு செய்கையில் விசித்திரமான ஒன்றை கவனித்தார்.
ஏலியன் ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது ஏலியன் விண்கலத்தை பார்த்துவிடமாட்டோமா என்று ஒவ்வொரு நாளும் வானத்தை நோக்கி தவமிருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் தனக்கு அதில் ஜாக்பாட் கிடைத்தவிட்டதாகவே நம்புகிறார்.

பெர்ஷியரை சேர்ந்த ஜேசன் காலம் என்ற அந்த நபர், கடந்த செப்டம்பர் 25 அன்று நிலவை நெருக்கமாக வீடியோ பதிவு செய்கையில் விசித்திரமான ஒன்றை கவனித்தார். யூடியூப் தளத்தில் அவர் பதிவேற்றம் செய்த காணொளியில் விசித்திர பறக்கும் தட்டு ஒன்று நிலவை கடந்து செல்கிறது.மிகப்பெரிய முட்டை வடிவிலான அந்த பறக்கும் தட்டு நிலவின் மேலே தென்திசையில் பயணித்து, விண்வெளியின் இருண்ட பகுதியில் மறைந்துவிடுகிறது.
இணையதளங்களில் மிகவும் வைரலான இந்த காணொளியை பற்றி அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். ஒருவர் கூறுகையில், "எனது கருத்து என்னவெனில், அது செயற்கைகோள் அல்ல. ஆனால் அதை வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புபடுத்தவும் முடியாது. அது பூமியின் வளிமண்டத்திற்கு உள்ளே இல்லாமல் மிகவிரைவாக பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகிறது. காணொளி நிலவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், இந்த மர்ம பொருளும் அதில் உள்ளது. ஆகையால் இது உண்மையில் மிகப்பெரியதாக இருக்க வேண்டும்" என்கிறார்.

யூடியூபர் ரேயான் ஐசக்ஸ் கூறுகையில் , "சந்தேகமே இல்லை. இது வேற்றுகிரக விண்கலம் தான். 100% நிச்சயம். நம்மை கண்காணித்து கொண்டே உள்ளனர். எவ்வளவு காலம் தான் அரசு இதை மக்களிடம் இருந்து மறைக்கபோகிறது என தெரியவில்லை"என்கிறார்.
எனினும் பெரும்பாலனோர் ஒரு இயற்கையான விளக்கம் போல, மிகப்பெரிய பாறை ஒன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் அல்லது விண்வெளியில் பயணிக்கிறது என நம்புகின்றனர். சிலர் இது விண்கல்லாக இருக்குமா என கேட்கிறார். ஏனெனில் பாறையை போல தோற்றமளிக்கும் இது அடர் நிறத்தில் உள்ளது மற்றும் இந்த மர்மபொருள் திரும்பியோ அல்லது வேகத்தை மாற்றியோ பயணிக்கவில்லை.

ஆனால் வேற்றுகிரகவாசிகள் சமூகம் நிலவில் வசிப்பதாக பெரும்பாலானோர் நம்புகின்றனர். கடந்த மாதம் தான், மாற்றுகருத்துடைய கோட்பாட்டாளர்களுக்கு நிலவில் மிகப்பெரிய கட்டுமானங்கள் கண்டறிந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. பெரும்பாலானோர் அது ஏலியன் தளம் அல்லது நினைவுச்சின்னமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
அந்த விசித்திரமான நிலவு பிரமீடு, கூகுளின் தேடல் கருவியான கூகுள் மூன்-ஐ பயன்படுத்தி கண்டறியப்பட்டது.இதிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி 20 ° 48'45.54 "N 25 ° 59'50.89" W என்ற நிலகுறியீட்டில் அந்த கட்டுமானம் அமைந்துள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த மார்சிலோ இரஜஸ்டா யூடியூப்-ல் பதிவேற்றிய காணொளியில், மனிதனால் கட்டமைக்கப்பட்டது போன்ற தோற்றமளிக்கும் கட்டமைப்பு, நிலவின் பரப்பில் முரண்பாடாக காணப்படுகிறது. இது குறித்து பதிவிட்டுள்ள மார்சிலோ , "நிலவின் மத்தியில் உள்ள சமதள பரப்பில் உள்ள நூற்றுக்கணக்கான மீட்டர் உயரம் கொண்ட இந்த விசித்திர கட்டமைப்பு பற்றிய மர்ம த்தை வெளிபடுத்த வேண்டும். இது இயற்கையானது அல்ல என்பதையே அனைத்து காரணிகளும் உணர்த்துகின்றன. நிச்சயம் இது ஆச்சரியம் தான்" என்கிறார்.


Click it and Unblock the Notifications