சூரியனை கடந்து சென்ற ஏலியன் விண்கலம்! அதிர்ச்சி தகவல்.!

மர்ம பறக்கும்தட்டு ஒன்று சூரியனின் ஊடாக சென்றதை பார்த்ததாக நம்பும் சதிகோட்பாட்டாளர் ஒருவரின் தத்துவம் தான் இது.

|

மனிதர்களால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளும் சூரியனின் வெப்பத்திற்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியாது என்பது தான் மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறோம். அதேநேரம் பழங்கால ஏலியன் சமூகத்தால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம், உட்புறத்தில் 15மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் ஊடாக பயணிக்க முடியும் என நம்புகின்றனர் ஏலியன் மற்றும் மர்ம பறக்கும் தட்டுகள் தொடர்பானவற்றில் ஆர்வம் காட்டுபவர்கள்.

மர்ம பறக்கும்தட்டு ஒன்று சூரியனின் ஊடாக சென்றதை பார்த்ததாக நம்பும் சதிகோட்பாட்டாளர் ஒருவரின் தத்துவம் தான் இது.

சோஹோ

சோஹோ

நாசாவின் சூர்ய மற்றும் கதிர்மண்ட கண்காணிப்பு செயற்கைகோளான சோஹோ(Solar and Heliospheric Observatory -SOHO) அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்த யூ.எப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி இணையதளத்தின் ஆசிரியர் ஸ்காட் சி வாரிங், மர்ம பறக்கும் தட்டை பார்த்ததாக கூறுகிறார். அது பூமியின் அளவை ஒத்து இருந்ததாகவும் அவர் நம்புகிறார்.

 மஞ்சள்

மஞ்சள்

இதுகுறித்து யூ.எப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி இணையதளத்தில் வாரிங் எழுதியுள்ள கட்டுரையில், " இந்த பொருளின் ஒளிர்வுத்தன்மை சூரிய பரப்பில் காணப்படும் பொருட்களை போல இல்லை. ஏனெனில் சூரியனில் வெள்ளை நிற ஒளிரும் பரப்பு இல்லை. அது மஞ்சள் நிற பரப்பை கொண்டது" என குறிப்பிட்டுள்ளார்.

மர்ம பறக்கும் பொருள்

மர்ம பறக்கும் பொருள்

"இந்த மர்ம பறக்கும் பொருள் மிகப்பெரியது. சூரியனின் சுற்றளவு பூமியை போல 109 மடங்கு இருக்கும் நிலையில், இந்த மர்ம பொருளும் பூமியின் அளவை ஒத்தே உள்ளது. இப்பொருள் அதிவேகத்தில் சென்றதால் மற்ற எந்த புகைப்படத்திலும் பதிவாகவில்லை. இது தான் மர்மமாக உள்ளது. ஒளியை விட அதிக முடுக்கம் இல்லாமல், ஒளியை விட அதிக வேகத்தில் செல்வதை தான் ஏலியன் தொழில்நுட்பம் என அழைக்கிறோம்" என்கிறார் வாரிங்.


பழங்கால் ஏலியன் இனம் மட்டுமே சூரியனின் வெப்பத்தை தாக்குபிடித்து அதன் ஊடாக பயணிக்கும் விண்கலத்தை உருவாக்கமுடியும் என விளக்குகிறார் வாரிங்.

சூரியனுக்கு அருகில்

சூரியனுக்கு அருகில்

சூரியனுக்கு அருகில் வேற்றுகிரகவாசிகளின் விண்கலத்தை பார்ப்பது என்ற வதந்திகள் கிளம்பவது இது முதன்முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம், இண்டியானா மாகாணத்தின் சேலம் பகுதியில் உள்ள மரியா ஹில் என்பவர், சூரியனை புகைப்படம் எடுக்கும் போது, மிகப்பெரிய பறக்கும் தட்டு சூரியனை கடந்து சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து பல சிறிய பறக்கும் தட்டுகள் சென்றதை பார்த்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

அந்த புகைப்படங்களை முகநூலில் பதிவிட்ட ஹில், காலை நேரத்தில் கிழக்கு வானில் சூரியனை புகைப்படம் எடுக்கும் போது இதைத்தான் எனது கேமரா காட்டியது. இது கேமரா அடாப்டர் கொண்ட ஐபோன்8 -ல் எடுத்தது என குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
UFO sighting: Alien spaceship spotted passing THROUGH the SUN: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X