பறக்கும் தட்டுகள் பற்றிய ரஷ்யாவின் மர்ம தொகுப்புகள் - வீடியோக்கள்

சாம்பல் நிற ஏலியன்களுடனான ரஷ்யாவின் முதல் தொடர்பு 1942ல் நடைபெற்றது என கூறப்படுகிறது.

|

வேற்றுகிரகவாசிகள் சமூகம் பற்றி பல தசாப்தங்களாக இரஷ்யாவுக்கு தெரியும் என பல ஆண்டுகளாக பல்வேறு வதந்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

பறக்கும் தட்டுகள் பற்றிய ரஷ்யாவின் மர்ம தொகுப்புகள் - வீடியோக்கள்
சாம்பல் நிற ஏலியன்களுடனான ரஷ்யாவின் முதல் தொடர்பு 1942ல் நடைபெற்றது என கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பரஸ்பர பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தொடர் தூதரக பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அதற்காக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும் இரஷ்ய ஆவணங்களில் கூறப்படுகிறது.

ரஷ்ய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது

ரஷ்ய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது

அந்த ஆவணங்களில் படி, 1961ல் நடைபெற்ற சம்பவத்தில், ராணுவ தள அலுவலர்கள் ஒப்பந்தத்தை மீறி 3 ஏலியன்களின் (என்ட்டிக்கள்) வருகை , அது போது அவர்களுக்கே தெரியாமல் இரகசிய கேமராக்களில் பதிவானதை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது.23/04 ஒப்பந்தத்தின் படி இரகசிய சந்திப்புகளை வீடியோ/புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

1969ல், ஸ்வெர்ட்லவ்ஸ்கி மாகாணத்தில் மர்ம பறக்கும் தட்டு விபத்திற்குள்ளான போது, இரஷ்ய இராணுவம் அதை கையப்படுத்தியது. அந்த மீட்பு பணியை பறக்கும் தட்டுக்கு அருகிலிருந்து காண்பிக்கிறது ஒரு வீடியோ.விபத்திற்குள்ளான அந்த பறக்கும் தட்டில் இறந்த ஏலியன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பறக்கும் தட்டின் இடிபாடுகள் இரஷ்யாவில் உள்ள மிக பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு ஆராயப்பட்டது மற்றும் ஏலியனுக்கு பிரதேபரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

டிஎன்டி ஸ்பெசலில்

டிஎன்டி ஸ்பெசலில்

இந்த சம்பவங்கள் அனைத்தும் டிஎன்டி ஸ்பெசலில் "இரஷ்ய பாதுகாப்பு குழுவின் பறக்கும் தட்டுகள் பற்றிய இரகசிய ஆவணங்கள்" என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது.இதில் பல்வேறு புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

இரஷ்யா

இரஷ்யா

உண்மை என்னவெனில், இரஷ்யாவில் நடைபெறும் மர்மமான மற்றும் விவரிக்க இயலாத சம்பவங்களை பற்றிய அனைத்துவித தகவல்களையும் சேகரித்து கண்காணிக்க, ஒரு சிறப்பு பிரிவை இரஷ்ய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கியதாக கூறப்படுகிறது.

ப்ரேலாண்டினியா

ப்ரேலாண்டினியா

10 ஆகஸ்ட் 1989 அன்று ரஷ்யாவின் ப்ரேலாண்டினியா நகருக்கு அருகில், மர்ம பறக்கும் தட்டு விபத்திற்குள்ளான அல்லது சுட்டு வீழ்த்தப்பட்ட போது, சோவியத் இராணுவத்தின் ரோடாரில் அந்த மர்ம பறக்கும் பொருள் கண்டறியப்பட்டு, அதனுடன் ஆயுததொடர்பு மேற்கொண்ட இரஷ்யாவின் முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான ஆதாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளன. அந்த பறக்கும் தட்டு "ஆபத்தானது" என மதிப்பீடு செய்யப்பட்டு, உடனடியாக பாதுகாப்பு துறையை எச்சரித்து, பின்னர் MIG-25 அனுப்பப்பட்டது.

மீட்பு குழுவினர்

பறக்கும் தட்டின் வெளிப்புறம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு சேதமடைந்திருந்தது. மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு அங்கு சென்றனர். ஹெலிகாப்டர் மூலம் அந்த பறக்கும் தட்டு மோஷ்டாக் விமானதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரஷ்ய வீரர்கள் அதனுள் நுழைந்து ஆராயும் போது இரு ஏலியன் சடலங்கள் மற்றும் ஒரு உயிருள்ள ஏலியனும் இருந்தன. அதனை காப்பாற்ற மருத்துவர் குழு போராடி தோற்றது.

 90-120 சென்டிமீட்டர்

90-120 சென்டிமீட்டர்

அந்த மூன்று உயிரினங்களும் 90-120 சென்டிமீட்டர் உயரத்தில், சாம்பல் நிற உடை அணிந்திருந்தன.அவற்றின் தோல் நீல-பச்சை நிறத்தில் இருந்தது மற்றும் முடி,பெரிய கருப்பு கண்கள், பாதுகாப்பு தொப்பியும் இருந்தன.

இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள்

இந்த உடல்கள் கண்ணாடி பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு, கபுஸ்டன்யார் எனும் விண்வெளி தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக மூன்று இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லை என்பதே நிதர்சனம்.

Best Mobiles in India

English summary
UFO in Mystery Archives KGB – Videos : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X