இந்தியாவுக்கு விரைவில் வானில் பறக்கும் ஏரியல் டாக்ஸி சேவை: இனி டிராப்பிக் பிரச்னையே இருக்காது.!
வானில் பறந்து செல்லும் டாக்ஸி சேவை இந்தியாவில் தொடங்குவது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உடன் உபர் நிறுவன அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
உலகின் 5 நாடுகளில் இந்தியாவிலும் ஏரியல் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்த உபர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் பயணப் பகிர்வு முறையில் போக்குவரத்து சேவையை உபர் நிறுவனம் வழங்கி வருகின்றது.

இந்நிறுவனம் வானில் பறந்து செல்லும் ஏரியல் டாக்ஸி சேவையை 5 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தியாவும் ஒன்றாக இருக்கின்றது.

ஜெயந்த் சின்ஹா- உபர் நிறுவன அதிகாரிகள் சந்திப்பு:
வானில் பறந்து செல்லும் டாக்ஸி சேவை இந்தியாவில் தொடங்குவது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உடன் உபர் நிறுவன அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

அமைச்சர் சின்ஹா கூறியதாவது:
கடந்த 2018 பிப்ரவரி 22ல் உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தாராகோஸ்ரொவ்ஷா ஹியை சந்தித்து பேசிய போது, இந்தியாவில் ஏர் டாக்ஸிக்கான தேவை குறித்து தெரிவித்தேன். அதை உறுதி செய்யும் வகையில் உபர் நிறுவன அதிகாரிகள் என்னிடம் பேசியுள்ளனர் என பேட்டியில் கூறினார்.

முதலில் லாஸ்ஏஞ்சல்ஸில் துவக்கம்:
முதல்கட்டமாக 2023ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல் நகரில் வர்த்தக ரீதியான ஏரியல் டாக்ஸி சேவையை உபர் தொடங்குகிறது. பயணிகள் ஏரல் டாக்ஸிகளுக்குசிறய செங்குத்தான இயங்குதளம் மட்டுமே போதுமானது. அதில் டாக்ஸிகளை இறங்கி, ஏற்றிக் கொள்ளலாம். இதன் வை நகர்ப்புறங்களில் அதிகளவில் இருக்கும்.

அமைதியான முறையில் பயணம்:
ஹெலிகாப்டர்களை போல் இல்லாமல் செங்குத்தான புறப்பாடு என்து எலக்டரிக் புரொபல்சன் மூலம் செய்யப்படும். இதனால் மிக அமைதியாக ஏர் டாக்ஸ் இயக்கம் இருக்கும். இந்த திட்டம் மணிக்கு 150 முதல் 200 மைல்கள் செல்லும் வகையில் செயல்படுத்தப்படும்.

2 ஆயிரம் அடி உயரத்தில்:
தரையில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் ஏர் டாக்ஸிகள் பயணிக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 மைல்கள் வரை பயணிக்கலாம்.

போக்குவரத்து மிகுந்த இடங்களில்:
நகரில் போக்குவரத்து மிகுந்த நெருக்கடி மிகுந்த இடங்களில் செயல்படுத்தப்படும். தரை வழிப் போக்குவரத்தை விட விரைவாக செல்ல விரும்புவோர் 30 முதல் 50 கிமீ தூரம் ஏர் டாக்ஸிகளில் செல்லாம்.

போதிய பாதுகாப்பு:
நகரங்களில் பயணிக்க ஏதுவாக ஏர் டாக்ஸிகள் செல்லும் போது, பயணிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி மிகுந்த பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும் என அமைச்சர் சின்ஹா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications