செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையைப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பிய ஹோப் விண்கலம்.. புகைப்படம் இதோ..

|

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு அனுப்பிய ஹோப் செயற்கைகோள் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஹோப் செயற்கைகோள் இப்பொழுது செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தைப் பூமிக்கு அனுப்பியுள்ளது. ஹோப் செயற்கைகோள் அனுப்பிய புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய எரிமலை சிக்கியுள்ளது.

ஹோப் விண்கலம் செவ்வாயில் இருந்து அனுப்பிய முதல் படம்

ஹோப் விண்கலம் செவ்வாயில் இருந்து அனுப்பிய முதல் படம்

தேசிய விண்வெளி நிறுவனம் சென்ற ஞாயிற்றுக்கிழமை, ஹோப் விண்கலம் வெற்றிகரமாக ரெட் பிளானட்டின் சுற்றுப்பாதையில் நுழைந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்குப் பின்னர் ஹோப் செயற்கைகோள் செவ்வாய் கிரகத்திலிருந்து முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலை படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலை

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலை

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மோன்ஸ் என்ற எரிமலை செவ்வாய் கிரகத்தில் அமைத்துள்ளது. இந்த மிகப்பெரிய எரிமலை அதிகாலை சூரிய ஒளியில் வெளிவந்ததை ஹோப் செயற்கைகோள் படம்பிடித்துள்ளது. இது தான் ஹோப் படம்பிடித்த முதல் புகைப்படம்.

செவ்வாய் கிரகத்தின் 24,700 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்

செவ்வாய் கிரகத்தின் 24,700 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்த ஒரு நாள் கழித்து, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 24,700 கிலோமீட்டர் (15,300 மைல்) உயரத்திலிருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த புகைப்படத்தின் கலர் வெர்ஷனை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

வரலாற்றின் முதன்முதல் அரபு ஆய்வு இதுவே

"வரலாற்றில் முதன்முதலில் அரபு ஆய்வு மூலம் கைப்பற்றப்பட்ட செவ்வாய் கிரகத்தின் முதல் படம்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய் கிரகத்தின் வானிலை ரகசியங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த 'ஹோப்' பணி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று நாடுகள்.. மூன்று விண்கலம்.. யார் முதலில் செவ்வாய்யை அடைந்தது?

மூன்று நாடுகள்.. மூன்று விண்கலம்.. யார் முதலில் செவ்வாய்யை அடைந்தது?

பூமியும் செவ்வாய் கிரகமும் மிக அருகில் இருக்கும் ஒரு காலகட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி சீனாவும் அமெரிக்காவும் ஜூலை மாதத்தில் அதன் செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. பூமியிலிருந்து மொத்தம் மூன்று செவ்வாய் கிரக பயணங்களைத் தொடங்கிய பின்னர், ரெட் கிரகத்திற்கு இந்த மாதம் வந்து சேர்ந்த மூன்று விண்கலங்களில் ஹோப் விண்கலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை 687 நாட்கள் சுற்றி வரும் ஹோப்

செவ்வாய் கிரகத்தை 687 நாட்கள் சுற்றி வரும் ஹோப்

"ஹோப்" குறைந்தது ஒரு செவ்வாய் ஆண்டு என்று அழைக்கப்படும் 687 நாட்களுக்குச் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் வளிமண்டலத்தைக் கண்காணிக்க மூன்று விஞ்ஞான கருவிகளைப் இது பயன்படுத்துகிறது. ஹோப் விண்கலம், செப்டம்பர் 2021 இல் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஆய்வு செய்ய கிடைக்கக்கூடிய தரவுகளுடன், பல தகவல்களைப் பூமிக்கு அனுப்பத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
UAE s Hope probe captured the largest volcano in the solar system Olympus Mons from Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X