விவசாயிகள் சிறப்பாக பயிர்செய்ய உதவ சிறு செயற்கைகோள் அனுப்பும் இந்திய இளைஞர்கள்!

|

விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களைப் பற்றி நாம் நினைக்கும் போது, ​​ விண்வெளி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவழித்து அவற்றை விண்ணில் செலுத்துவது தான் நம் நினைவில் வரும்.

 செயற்கைக்கோள்கள்

செயற்கைக்கோள்கள்

நம் மனதில், இந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருந்து பூமிக்கு உயர் தொழில்நுட்ப தரவை வழங்கும் வகையிலா சூரியசக்தி பேனல்களுடன் பிரம்மாண்டமாக இருக்கும் என்ற எண்ணமே இருக்கும் . இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உண்மை எனினும், சில தனிப்பட்ட விண்வெளி ஏஜென்சிகளும், செயற்கைக்கோள்களை மிகச் சிறிய அளவில் அதேசமயம் ஒத்த திறனுடையவையாக வடிவமைக்கின்றன.

ஷூ பாக்ஸ் அளவிலான சிறிய செயற்கைக்கோள்

ஷூ பாக்ஸ் அளவிலான சிறிய செயற்கைக்கோள்

அத்தகைய ஒரு குழுவின் இணை நிறுவனரும், 22 வயதான பிட்ஸ் பிலானி முன்னாள் மாணவரான க்ஷிதிஜ் கண்டேல்வல், அவரது வகுப்பு தோழரும் சக ஊழியருமான அவாய்ஸ் அகமதுவுடன் இணைந்தது , ஷூ பாக்ஸ் அளவிலான சிறிய செயற்கைக்கோள்களின் தொகுப்பை விரைவில் விண்வெளியில் அனுப்ப உள்ளனர்.

மூன்றே நாள்தான் மீதம்: ஒன்பிளஸ் போன் வாங்க சரியான நேரம்மூன்றே நாள்தான் மீதம்: ஒன்பிளஸ் போன் வாங்க சரியான நேரம்

சுமார் 18 மாதங்களுக்கு முன்பு

சுமார் 18 மாதங்களுக்கு முன்பு

பிக்செல் என்று அழைக்கப்படுகின்ற அவர்களது நிறுவனம் (சுமார் 18 மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது) மூலம், உலகின் மிகச்சிறந்த ஆய்வு செயற்கைக்கோள்களின் தொகுப்பை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். பிக்செல் நிறுவனத்தின் மூலம் அவர்கள் வேளாண்மை, வானிலை, காற்றின் தரம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு சிறந்த தரவு சேகரிப்பை செயல்படுத்த உயர்தர படத்தைக் கைப்பற்றும் செயற்கைக்கோள்களின் தொகுப்பை அமைக்க விரும்புகிறார்கள்.

அனுபவத்தையும் பயன்படுத்துகின்றனர்

அனுபவத்தையும் பயன்படுத்துகின்றனர்

அவர்களது குழுவில் உள்ள முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்டஸ்-ல் (இந்தியாவின் முதல் தனியார் லூனார் மிஷன்) பணியாற்றியவர்கள் என பலரும் உள்ளநிலையில், இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற ஏராளமான அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்துகின்றனர்.

ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டின் மூலம்

ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டின் மூலம்

இவர்களின் முதல் செயற்கைக்கோள் ஜூன் 2020 இல் ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டின் மூலம் விண்வெளியில் செலுத்தப்படவுள்ளது. எவ்வாறு செயற்கைக்கோள்களை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன, சவால்கள் என்ன, செயல்முறை எவ்வளவு எளிமையானது அல்லது கடினமானது என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா?.

ஷேர்ஆட்டோ கான்செப்ட்

ஷேர்ஆட்டோ கான்செப்ட்

விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அவர்கள் எவ்வாறு செலுத்துகின்றனர் என்பதை

புத்திசாலித்தனமான ஒப்பீட்டின் மூலம் க்ஷிதிஜ் விளக்குகையில் "ஒரு ஷேர்ஆட்டோ பற்றி யோசித்துப் பாருங்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பலருடனும் பகிர்ந்து செல்கிறோம். விண்ணில் ஏவுதலுமா அதே வழியில் செயல்படுகின்றன. இவை ரைடு-ஷேர் லான்ச் எனப்படுகிறது. குறைவான செலவில் சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு தனியாக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ முடியாது. எனவே சோயுஸைப் போன்ற நிறுவனத்தில் ரைடு-ஷேர் லான்ச் நாங்கள் பதிவு செய்கிறோம். பின்னர் ஒரு முதன்மை ஏவுதலில், அனைவரும் ரைட்ஷேர்களாக செலுத்துகிறோம். மேலும் செயற்கைக்கோள்களை நாம் விரும்பும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு ஏற்ப பணம் செலுத்துகிறோம். " என்கிறார்.

பிக்சலின் செயற்கைக்கோள்கள் எவ்வாறு உதவியாக இருக்கும்?

பிக்சலின் செயற்கைக்கோள்கள் எவ்வாறு உதவியாக இருக்கும்?

பிக்செல்ஸ் செயற்கைக்கோள் தொகுப்பு எவ்வாறு படங்களை கைப்பற்றப்படும் என்பதையும், இது விவசாயிகளுக்கும் பிற மக்களுக்கும் எவ்வாறு உதவும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த க்ஷிதிஜ், "செயற்கைக்கோள்கள் கைப்பற்றும் தரவுகள், பயிர் நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் வெவ்வேறு பயிர் இனங்களை அடையாளம் காணும் தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்கும். கலப்பு பயிர் முறைகளைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், வெவ்வேறு பயிர்களை அடையாளம் காண்பது கடினம். எனவே எங்கள் செயற்கைக்கோள் தகவல்கள் வெவ்வேறு தளங்களின் மூலம் மக்கள், பூச்சி தொற்று இருக்கிறதா என்பதை பார்க்க முடிவதுடன், அங்கு பயிர் விளைச்சல் என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் கணிக்க முயற்சி செய்யலாம்" என்கிறார்

Best Mobiles in India

English summary
Two Young Indians Will Launch Tiny Satellites To Help Farmers Take Better Care Of Their Crops: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X