அமெரிக்க உளவு செயற்கைகோளை பின்தொடரும் இரஷ்ய ஜோடி விண்கலன்கள்! விண்வெளிபடை அதிருப்தி..

|

மற்ற நாடுகளை உளவு பார்க்கப் பயன்படும் அமெரிக்க செயற்கைக்கோளை ரஷ்ய விண்கலன்கள் பின்தொடர்கிறது என்று அமெரிக்க விண்வெளிப் படையின் தளபதி தெரிவித்துள்ளார்.

விண்வெளி படைத் தலைவர் ஜெனரல் ஜான்

விண்வெளி படைத் தலைவர் ஜெனரல் ஜான்

"இந்த அசாதாரணமான மற்றும் குழப்பமான நடத்தை, விண்வெளியில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் ஆற்றல் கொண்டது" என்று விண்வெளி நடவடிக்கைகளின் விண்வெளி படைத் தலைவர் ஜெனரல் ஜான் ரேமண்ட் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா தீவிரமாக கவனத்தில் கொள்வதுடன், இது பொறுப்பான விண்வெளிப் பயண தேசத்தின் நடத்தையை பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இன்ஸ்பெக்டர் செயற்கைக்கோள்கள்

இன்ஸ்பெக்டர் செயற்கைக்கோள்கள்

இரண்டு ரஷ்ய செயற்கைக்கோள்களும் அமெரிக்க செயற்கைக்கோளின் 100 மைல் (160 கிலோமீட்டர்) தூரத்திற்குள் வந்துள்ளன.மேலும் இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா தனது இராஜதந்திர வழிகள் மூலம் மாஸ்கோவிடம் கவலைகளை எழுப்பியுள்ளது என்று ரேமண்ட் டைம் பத்திரிகையின் W.J. ஹென்னிகன் கூறினார்.கடந்த நவம்பரில், ரஷ்யா "ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது", மேலும் இந்த ஜோடி செயற்கைகோள்கள் ரஷ்யா முன்னர் "இன்ஸ்பெக்டர் செயற்கைக்கோள்கள்" என்று பெயரிட்ட ஒரு தொகுப்பைப் போலவே நடவடிக்கைகளை கொண்டிருக்கிறது என்று ரேமண்ட் கூறுகிறார்.

பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?

 இன்னும் பதிலளிக்கவில்லை

வேறு எந்த களத்திலும் அல்லது துறையிலும்" இத்தகைய நடவடிக்கை "அச்சுறுத்தும் நடத்தை" என்றே அடையாளம் காணப்படும் என்று அவர் தெரிவிக்கிறார்.வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ரஷ்ய தூதரகம் இது தொடர்பான கருத்து கோரலுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

மைக்கேல் தாம்சன்

மைக்கேல் தாம்சன்

ரஷ்யாவின் தேர்தல் தலையீடு மற்றும் உக்ரைன் மற்றும் சிரியா தொடர்பான பதட்டங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய செயற்கைக்கோள்களின் சூழ்ச்சியை செயற்கைக்கோள் மற்றும் விண்கல ஆர்வலரான மைக்கேல் தாம்சன் கண்டுபிடித்தார்.

ரஷ்ய ஆய்வு செயற்கைக்கோள்கள்

ரஷ்ய ஆய்வு செயற்கைக்கோள்கள்

"இவை எல்லாம் சூழ்நிலைகளின் அடிப்படையிலான சான்றுகள். ஆனால் அறியப்பட்ட ரஷ்ய ஆய்வு செயற்கைக்கோள்கள் தற்போது நன்கு அறிந்த அமெரிக்க உளவாளி செயற்கைக்கோளை ஆய்வு செய்து வருவதைப் போல தோற்றமளிக்கும் பல சூழ்நிலைகள் உள்ளன" என்று தாம்சன் ஜனவரி 30 அன்று ட்வீட் செய்தார்.

FASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா? அப்போ இதை பண்ணுங்க!FASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா? அப்போ இதை பண்ணுங்க!

TASS செய்தி வெளியிட்டுள்ளது

TASS செய்தி வெளியிட்டுள்ளது

இந்த ஜோடி செயற்கைக்கோள்களின் சூழ்ச்சி குறித்து கருத்துதெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் "உள்நாட்டு செயற்கைக்கோள்களின் தொழில்நுட்ப நிலையை" மதிப்பிடுவதற்கான ஒரு சோதனை என்று தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS செய்தி வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Two Russian Spacecraft Are Trailing a US Spy Satellite. Space Force Is Unimpressed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X