அனைத்தும் உண்மை- பறக்கும் டைனோசர் இன முட்டை: இரண்டு புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!

|

வெளியான புதிய ஆய்வின்படி, வடமேற்கு சீனாவில் இரண்டு பெரிய புதிய டைனோசர் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

டைனோசர், ஜூராசிக் பார்க், காங்

டைனோசர், ஜூராசிக் பார்க், காங்

டைனோசர், ஜூராசிக் பார்க், காங், டிராகன் போன்ற இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இது கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களாக கூறப்படுகிறது. இந்த உயிரினங்கள் குறித்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

இரண்டு புதிய டைனோசர் இனங்கள்

இரண்டு புதிய டைனோசர் இனங்கள்

சீனாவில் இரண்டு புதிய டைனோசர் இனங்களின் புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த படிமங்களானது சீனாவின் வடமேற்கு பகுதியில் பறக்கும் டைனோசர் இனத்தின் முட்டைகள் மற்றும் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டெரோசாரஸ் எனப்படும் பறவையின டைனோசரஸ் 65 அடி நீளம் இருந்திருக்கலாம் என்பதை தெரிவிக்கப்படும்படியான மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல புதைப்படிவங்கள் கண்டுபிடிப்பு

பல புதைப்படிவங்கள் கண்டுபிடிப்பு

சமீபத்திய ஆண்டுகளாகவே சீனாவின் வடமேற்குப் பகுதியில் இருந்து பல புதைப்படிவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சின்ஜியாங் மற்றும் துர்பான் ஹாமி பேசின் உட்பட புதைப்படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்ட முட்டைகள் மற்றும் கருக்கள், அத்துடன் முதுகெலும்பு மற்றும் விலா எழும்புகள் துண்டுகள் கண்டெடுத்தனர். இது ஆரம்பத்தில் மர்ம டைனோசர்களுடையது என கண்டறியப்பட்டு பின் பறக்கும் இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது.

120 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்

120 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்

முன்னதாக இந்த மாதிரிகள் அறியப்படாத உயிரினங்களை சேர்ந்தவை என ஆராய்ச்சிகள் தீர்மானித்தனர். அதற்கு சிலுடிடன் சினென்சிஸ் என பெயரிட்டனர். சிலுடிடன் மாதிரி 20 மீட்டர் (65.6 அடி) நீளமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றான ஹமிடிடன் மாதிரி 17 மீட்டர் (55.77 அடி) நீளம் கொண்டுள்ளது. இது பறக்கும் டைனோசர் இனமாக இருக்கலாம் எனவும் இது நீலத் திமிங்கலங்களை போன்று பெரிதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உயிரினங்கள் 120 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என ஆய்வில் கணிக்கப்படுகிறது.

தாவரங்களை உண்ணும் டைனோசர்கள்

தாவரங்களை உண்ணும் டைனோசர்கள்

இரண்டு புதிய உயிரினங்களும் சரோபாட் குடும்பத்தை சேர்ந்தவை எனவும் அவை தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் இனமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட கைகள் உள்ளிட்டவை கொண்ட பூமியில் இருந்த மிகப்பெரிய விலங்குகள் இதுவாகும். ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த டைனோசர் இனமாக இருக்கலாம் எனவும் பாதுகாப்பட்ட டைனோசர் ஒன்று கருவுடன் கூடிய முட்டையுடன் கூட்டில் இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டைனோசருக்கு சொந்தமான புதைப்படிமம்

டைனோசருக்கு சொந்தமான புதைப்படிமம்

முன்னதாக தென்மேற்கு சீனாவில் உள்ள பாலியான்டாலஜிஸ்டுகள் (Paleontologists) ஜுராசிக் காலத்திலிருந்த ஒரு புதைபடிமத்தைக் கண்டுபிடித்தனர். இந்த புதைபடிமம் அப்படியே 70 சதவீதம் ஒரே இடத்தில் முழுமையாகக் கிடைத்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த புதைப்படிமம் கிட்டத்தட்ட 8 மீட்டர் நீளம் இருப்பதாக நம்பப்படும் டைனோசருக்கு சொந்தமானது என்று அவர்கள் தெரிவித்தனர்.

டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்

டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்

இது 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிமம், மே மாத இறுதியில் தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லுஃபெங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதுமையான கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் மீதமுள்ள எலும்புகளுக்குச் சேதம் ஏற்படாமல் தடுக்க அவசர அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி அடுத்தடுத்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தேசிய புதையல்

தேசிய புதையல்

இந்த பகுதி மண் அரிப்புக்கு ஆளாகும் என்பதால் இது விரைவாகச் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லுஃபெங் நகரத்தின் டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வாங் தாவோ கூறுகையில், ''கிட்டத்தட்ட முழுமையான 'லுஃபெங்கோசொரஸ்' (Lufengosaurus) என்ற டைனோசரின் முழுமையான எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் அரிதானது என்றும், இந்த கண்டுபிடிப்பு ஒரு 'தேசிய புதையல்' என்றும் அவர் கூறினார்.

Pic Courtesy: Social Media

Source: cnn.com

Best Mobiles in India

English summary
Two Dinosaur Species Found in China: Category of Plant Eating Dinos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X