Subscribe to Gizbot

கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்தில் கரியள்ளி பூசுகிறது இந்த ஆய்வின் வெற்றி.!

Written By:

ஒருபக்கம், கட்டுப்படுத்தவே முடியாத காரணத்தினால் புவிவெப்பமடைதல் சார்ந்த உலகளாவிய கவலை அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபக்கம், பூமி கொண்டுள்ள வளங்களின் கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சுக்கொள்ளும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன, குறிப்பாக தற்போதைய தமிழகத்தின் நிலையை அடிகோட்டிட்டு காட்டலாம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் ஆய்வு திட்டங்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நிலைப்பாட்டில் "செவிடன் காதில் சங்கு ஊதியது போல" கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் சுமார் 23,000 ஹெக்டேர் பரப்பளவில் பெட்ரோலியம், கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் முதலீட்டுப் பகுதிகளென (PCPIR) என மாநில அரசு அறிவித்துள்ளது, அதாவது இப்பகுதிகளெல்லாம் பெட்ரோ கெமிக்கல் கூடாரங்களாக உருமாறப்போகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உற்பத்தி செய்ய இருக்கும் ஒரே முறை இதுமட்டும் தானா.??

உற்பத்தி செய்ய இருக்கும் ஒரே முறை இதுமட்டும் தானா.??

இது மண் மீதான கோபமா.? அல்லது மக்கள் மீதான வெறுப்பா.? அல்லது இதுதான் முன்னேற்றமா.? நாம் முன்னேற விரும்பவில்லையா.? போன்ற கேள்விகளுக்கான விடைகளை அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்களிடம் விட்டுவிட்டு, சற்று சாமானியத்தனமான யோசித்தால் - இதுபோன்ற எதிர் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் மிக்க காரியங்களை நிகழ்த்த வேறு எந்த விதமான மாற்று முறைகளும் கிடையாதா.? ஹைட்ரோகார்பனை எடுக்க இருக்கும் ஒரே வழி இதுதானா.? எரிபொருளை உற்பத்தி செய்ய இருக்கும் ஒரே முறை இதுமட்டும் தானா.?? - போன்றே வெகுஜன கேள்விகள் நம்முள் எழுகின்றன.

இருபத்திநான்கு மணிநேரமும் வேலை

இருபத்திநான்கு மணிநேரமும் வேலை

நிதர்சனம் என்னவெனில், நன்செய் மாற்று வழிகளை உருவாக்குவதற்கு உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளை அனுதினமும் தூண்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஒரு தீர்வை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இருபத்திநான்கு மணிநேரமும் வேலை செய்து கொண்டே தான் இருக்கின்றனர்.

மாற்று வழியிலான எரிபொருள் உற்பத்தி ஆய்வு

மாற்று வழியிலான எரிபொருள் உற்பத்தி ஆய்வு

அப்படியாக சமீபத்தில் வெற்றிகண்டுள்ள மாற்று வழியிலான எரிபொருள் உற்பத்தி ஆய்வு ஒன்று மண்ணையும், அதன் வளத்தையும், அதன் மக்களையும் சுரண்ட நினைக்கும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கும், கூட்டாளி அரசாங்கத்திற்கும் "மூடிக்கிடக்கும் மூளையை சற்று தூசித்தட்டுங்கள்" என்று கூறுவது போல அமைந்துள்ளது.

கார்பன் டை ஆக்சைடு வாயுவை எரிபொருளாக..

கார்பன் டை ஆக்சைடு வாயுவை எரிபொருளாக..

புவி வெப்பமடைதல் என்ற ஆதிகாரணத்தின் தூண்டலால், வளிமண்டலத்தில் இருந்து கார்பனை அகற்றுவதற்கான மிகவும் சிறப்பான வழிகளை உருவாக்கும் முனைப்பில் உலகெங்கிலும் பல ஆய்வுகள் நிகழ்கின்றன. அதிலொரு ஆய்வில், கார்பன் டை ஆக்சைடு வாயுவை எரிபொருளாகவும் மற்றும் (ஒளி பயன்பாடுடன் தேவையற்ற துணை தயாரிப்புகளை உருவாக்காத) பிற ஆற்றல் நிறைந்த பொருளாகவும் பயன்படுத்த உதவும் ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பைங்குடில் வளிமங்களின் அளவையும் குறைக்கவும்

பைங்குடில் வளிமங்களின் அளவையும் குறைக்கவும்

இந்த கண்டுபிடிப்பு, எரிபொருள் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படிநிலையை குறிக்கிறது மற்றும் அதே நேரத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி பைங்குடில் வளிமங்களின் அளவையும் குறைக்கவும் வழிவகுக்கிறது.

வெளிப்படையான ஒளியை சந்திக்கும் போது

வெளிப்படையான ஒளியை சந்திக்கும் போது

உருவாக்கம் பெற்றுள்ள "கடற்பாசி" நிக்கல் ஆர்கானிக் படிக அமைப்பானது வெளிப்படையான ஒளியை சந்திக்கும் போது கார்பன் டை ஆக்சைடை (CO2) கார்பன் மோனாக்சைடாக (CO) மாற்றுகிறது. அதாவது அவைகள் லிக்விட் பியூயல்ஸ் (திரவ எரிபொருள்கள்), சால்வன்ட்ஸ் மற்றும் பிற பயனுள்ள பொருட்களாக மாறியிருக்கும்.

100 சதவிகிதம் கார்பன் மோனாக்சைடு

100 சதவிகிதம் கார்பன் மோனாக்சைடு

இந்த ஆய்வில் "ஹைட்ரஜன் அல்லது மீத்தேன் போன்ற எரிவாயு உற்பத்திகள் ஏதுமின்றி 100 சதவிகிதம் கார்பன் மோனாக்சைடு உற்பத்தியாகிறது என்பதை மிகப்பெரிய வெற்றியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

புதைபடிவ எரிபொருளின் விரைவான நுகர்வு

புதைபடிவ எரிபொருளின் விரைவான நுகர்வு

குறிப்பாக கார்பன் டை ஆக்சைடை குறைக்கும் ஆய்வில் எந்தவிதமான ரசாயன எதிர்வினைகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் விஞ்ஞானிகள் தீர்க்கமாக இருந்தனர் என்பதும், சூரிய ஆற்றல் குறைப்பு கார்பன் டை ஆக்சைடை (solar-powered reduction of carbon dioxide) எரிபொருளாக உருவாக்கும் ஆர்வமானது கடந்த நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருளின் விரைவான நுகர்வு மற்றும் புதி ஆதார சக்திகளுக்கான தேடலின் போதே துவங்கிவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆட்களும் இல்லை, அரசாங்கங்களுமில்லை

ஆட்களும் இல்லை, அரசாங்கங்களுமில்லை

இம்மாதிரியாக, எந்தவொரு எதிர்வினைகளையும் கிளப்பாத அல்லது பெரிய வருங்கால அழிவிற்கு வழிவகுக்காத பல மாற்று யோசனைகள் புவியெங்கும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால், அவைகளை காரியமாக்கத்தான் ஆட்களும் இல்லை, அரசாங்கங்களுமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Turning carbon dioxide into fuel might be possible with this new material. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot