செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்களா? வைரலாகும் கோட்பாடு.. உண்மை இது தான்?

|

மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தார்களா? சமீபத்திய டிக்டாக் சதி கோட்பாடு வீடியோ உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியான டிக்டாக் வீடியோ சதி கோட்பாட்டின் படி, மனிதர்கள் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. பல மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த மனிதர்கள் அக்கிரகத்தை ஒரு அணுசக்தி யுத்தத்தில் வசிக்க முடியாததாக மாற்றி இருக்க வேண்டும் என்று அந்த டிக்டாக் பயனர் தனது பதிவில் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களா? இதை எப்படி நம்புவது?

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களா? இதை எப்படி நம்புவது?

சமூக ஊடகங்களில் இந்த செய்தி வைரலாகி, பல சமூகத் தளங்களில் பகிரப்பட்ட டிக்டாக் வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தின் மீதான போர் ஒரு அணுசக்தி குளிர்காலத்திற்கு வழிவகுத்திருக்கக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகத் தான் செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறம் ஏற்பட்டது என்று தி நியூஸ் வீக்கில் ஒரு அறிக்கை கூறுகிறது. இது உண்மை தானா? இதை எப்படி நம்புவது? இந்த கோட்பாடு பற்றி நாசா என்ன சொல்கிறது? போன்ற கேள்விகளுக்குப் பதில் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

நம்ப முடியாத இந்த சதி கோட்பாட்டின் பின்னால் யார் இருக்கிறார்கள்?

நம்ப முடியாத இந்த சதி கோட்பாட்டின் பின்னால் யார் இருக்கிறார்கள்?

செவ்வாய் கிரகத்தில் சதி கோட்பாடு ஒரு டிக்டாக் பயனரான 'crackheadjoedirt' என்பவர் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. 'உங்கள் மனதை முற்றிலுமாக பிரமிக்க வைக்கும் ஒரு சதி கோட்பாடு என்றால் அது என்னவாக இருக்கும்?' என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகத் தான் இந்த டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, இந்த வீடியோ 230,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 10,000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது.

அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!

சரி, உண்மையில் இந்த சதி கோட்பாடு என்ன சொல்கிறது?

சரி, உண்மையில் இந்த சதி கோட்பாடு என்ன சொல்கிறது?

செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கி தனது கோட்பாட்டை விவரித்துக் கூறியுள்ளார் TikTok பயனர் crackheadjoedirt. அவர் தெரிவித்துள்ள கருத்தின் படி, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் அதன் மேற்பரப்பில் நீர் பாய்ந்திருக்கிறது என்று நம்பும் விஞ்ஞானிகளை மேற்கோள் காட்டி, கோட்பாட்டாளர் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் இயற்கை வளங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். இயற்கை வளங்கள் இருக்கும் பட்சத்தில் உயிர்களும் இருந்திருக்க வேண்டும் தானே, அது தானே அறிவியல் உண்மை.

செவ்வாய் சிவப்பு நிறமாக மாற காரணம் என்ன?

செவ்வாய் சிவப்பு நிறமாக மாற காரணம் என்ன?

"செவ்வாய் கிரகம் இயற்கையாகவே சிவப்பு நிறத்தில் உருவான கிரகமாக இல்லை, ஓரிரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிரகம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. அப்படி என்ன காரணத்தினால் செவ்வாய் சிவப்பு நிறமாக மாறி இருக்கக்கூடும் என்பதை அறிய விரும்புகிறீர்களா?

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

அணுசக்தி குளிர்காலம்

அணுசக்தி குளிர்காலம்

" என்று கேள்வியை கேட்டு, அதற்கு பதிலையும் கூறியுள்ளார். "ஒரு கிரகத்தில் போதுமான அளவு அணுக்கள் வெளியேறினால், முதலில் நடக்கும் ஒரு முக்கிய சம்பவம் அணுசக்தி குளிர்காலம் தான்''. அணுசக்தி குளிக்கலாமா அப்படி என்றால் என்ன என்பது தானே உங்களின் அடுத்த கேள்வி, பதிலைச் சொல்கிறோம்.

அணுசக்தி குளிர்காலம் என்றால் என்ன?

அணுசக்தி குளிர்காலம் என்றால் என்ன?

அணுசக்தி குளிர்காலம் என்பது அணு குண்டுவெடிப்புக்குப் பின்னர் நடக்கும் ஒரு நிகழ்வாகும். இது தடிமனான சாம்பலை இன்னும் அதிக தடிமனாகக் கொண்டு சூரிய ஒளியைத் தடுக்கிறது" என்று டிக்டாக் பயனர் வீடியோவில் கூறியுள்ளார். "அணுசக்தி குளிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்த அனைத்து இயற்கை வளங்களும் அழிந்த பிறகு தான்,

அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?

மனிதர்கள் செவ்வையை அணுக் குண்டால் அழித்தனரா?

மனிதர்கள் செவ்வையை அணுக் குண்டால் அழித்தனரா?

கிரகம் தூசியால் மூடப்பட்டுச் சிவப்பாக மாறியிருக்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். அவரின் கோட்பாடு என்னவென்றால், ''செவ்வாய் கிரகத்தில் இருந்து அதன் இயற்கை வளங்கள் அனைத்தையும் மனிதர்கள் அணுக் குண்டுகளால் அழித்தபின் பூமிக்கு வந்திருக்கிறோம்." என்று கூறியுள்ளார். இந்த கோட்பாடு தான் இப்போது அனைவரையும் பிரமிக்க வைத்து படு வேகமாக வைரலாகி வருகிறது.

இது உண்மையா? செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருந்தார்களா?

இது உண்மையா? செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருந்தார்களா?

நியூஸ் வீக் கருத்துப்படி, இந்த வைரல் கோட்பாடு வீழ்ச்சியடைகிறது, ஏனெனில் கேள்விக்குரிய கால அளவு பில்லியன் ஆண்டுகள் ஆகும், ஆனால் அணுசக்தி குளிர்காலம் அழிக்க நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக்கொள்ளாது. அதுமட்டுமின்றி, மார்ச் 16 ஆம் தேதி அன்று வெளியான சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி, செவ்வாய் கிரகத்தின் தற்போதைய நீரின் அளவு சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே திட்டத்தில் மொத்த குடும்பமும் பயனை அனுபவிக்கலாம்: BSNL ரூ.798 போஸ்ட்பெய்டு திட்டம் vs AIRTEL vs JIO vs Viஒரே திட்டத்தில் மொத்த குடும்பமும் பயனை அனுபவிக்கலாம்: BSNL ரூ.798 போஸ்ட்பெய்டு திட்டம் vs AIRTEL vs JIO vs Vi

உண்மை இதோ..

உண்மை இதோ..

ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, இரண்டு கால்களில் நடக்கக்கூடிய மனிதர்கள் சுமார் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றினர். ஆகையால், இந்த கோட்பாட்டின் படி, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. முக்கியமாக ஒரு அணுசக்தி குண்டை மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வெடிக்கச் செய்திருக்க முடியாது. வைரல் ஆனா டிக்டாக் பயனரின் கோட்பாடு சரியான வகையில் நிரூபிக்க முடியாமல் போனது. அப்படியானால், செவ்வாயின் சிவப்பு நிறத்திற்கு என்ன காரணம்? உண்மை இதோ..

செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறத்திற்கு என்ன காரணம்?

செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறத்திற்கு என்ன காரணம்?

செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு துரு இரும்பு ஆக்சைடுடன் மூடப்பட்டிருக்கிறது. இது அணுசக்தி குளிர்காலத்தில் ஏற்பட்ட அணுக்கழிவுகள் அல்ல என்று அறிவியல் அறிக்கை மேலும் கூறியுள்ளது. செவ்வாய் வானத்தில் இளஞ்சிவப்பு அல்லது வெளிர் ஆரஞ்சு நிறம் இருப்பதாகத் தோன்றுகிறது, ஏனெனில் இந்த துரு துகள்கள் காற்றோடு செவ்வாயின் வளிமண்டலத்தில் வீசப்பட்டு பறந்துகொண்டிருக்கின்றது.

பூமியின் 'இதயத் துடிப்பு' மனிதர்களை பாதிக்கிறதா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்..பூமியின் 'இதயத் துடிப்பு' மனிதர்களை பாதிக்கிறதா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்..

பூமியை போல் செவ்வாய் இல்லாததற்கு காரணம் இது தானா?

பூமியை போல் செவ்வாய் இல்லாததற்கு காரணம் இது தானா?

பூமியை போல் இல்லாமல் செவ்வாய் இரும்பு ஆக்சைடுடன் மூடப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் செவ்வாய் சிறியது மற்றும் பலவீனமான ஈர்ப்பு சக்தி இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த டிக்டாக் பயனர் வெளியிட்ட கோட்பாடு கேட்பதற்கு ஒரு நல்ல ஹாலிவுட் படத்தை பார்த்தது போன்ற அனுபவத்தை மட்டுமே தருகிறதே தவிர, இதில் நிரூபிக்கப்பட்ட உண்மை என்று எதுவும் இல்லை. இது மட்டுமே இப்போது உண்மையாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Truth Behind The Viral Video Conspiracy Claims That Humans Once Lived On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X